மத்­திய கிழக்கில் ஈரா­னுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் நடத்­தி­வரும் போர் மத்­திய கிழக்கைச் சூழ்ந்­து­கொண்­டி­ருப்­பது மாத்­தி­ர­மல்லஇ இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்­துக்கும் பரவும் ஆபத்து ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தென்­னிந்­தி­யாவின் விசா­க­ப்பட்­டி­னத்தில் சர்­வ­தேச கடற்­படைப் பயிற்­சி­களில் பங்­கேற்ற பின்னர் நாடு திரும்பிக் கொண்­டி­ருந்த ஈரா­னிய போர்க்­கப்பல் ஒன்று கடந்த வாரம் மத்­திய கிழக்கில் இருந்து 2000 மைல்கள் தொலைவில் இந்து சமுத்­தி­ரத்தில் இலங்­கையின் தென்­க­ரை­யோ­ரத்தில் இருந்து 40 கடல் மைல்­க­ளுக்கு அப்பால் அமெ­ரிக்க நீர்­மூழ்­கியின் தாக்­கு­தலில் மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இன்­னொரு ஈரா­னியக் கப்­பலை இலங்கை கடற்­படை மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் துறை­மு­கத்­துக்கு கொண்டு வந்­தி­ருக்­கி­றது.

அண்­மைய தசாப்­தங்­களில் வெள்ளை மாளி­கையில் பத­வியில் இருந்த ஜனா­தி­ப­தி­களில் படு­மோ­ச­மான போர்­வெ­றி­ய­ராக விளங்கும் டொனால்ட் ட்ரம்பும் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தினால் இனப்­ப­டு­கொலைச் சந்­தே­க­ந­ப­ராக அறி­விக்­கப்­பட்ட இஸ்­ரே­லிய பிர­தமர் நெத்தன்யாஹுவும் ஈரா­னுக்கு எதி­ராக விரை­வாகப் போரைத் தொடங்­கி­யி­ருக்­கலாம். ஆனால் அந்தப் போருக்கு விரை­வான முடிவு கிட்­டப்­போ­வ­தில்லை.

போர் தொடங்­கிய முதல்­நா­ளன்றே ஈரானின் அதி­யுயர் ஆன்­மீகத் தலைவர் ஆய­துல்லா அலி கமேனி குண்­டு­ வீச்சில் கொல்­லப்­பட்­டமை குறித்து கொண்­டாடிக் கொண்­டி­ருக்கும் ட்ரம்ப் ஈரானின் அடுத்த ஆன்­மீகத் தலை­வரைத் தெரிவு செய்­வதில் தன்னை ஈடு­ப­டுத்த வேண்டும் என்று அறி­வித்­தி­ருக்­கிறார்.

புதிய ஆன்­மீகத் தலை­வ­ராக கொலை­யுண்ட தலை­வரின் மகன் மொஜ்­தபா கமேனி தெரி­வா­வதை அனு­ம­திக்க முடி­யாது என்­பதே ட்ரம்பின் நிலைப்­பா­டாக இருக்­கி­றது.

ஈரானில் அமை­யக்­கூ­டிய அடுத்த அர­சாங்கம் தனது பொம்­மை­யாக இருப்­பதை உறுதி செய்­வதே அவ­ரது நோக்கம்.

ஜன­வ­ரியில் வெனி­சு­வேலா ஜனா­தி­பதி நிகோலஸ் மது­ரோவை அமெ­ரிக்கப் படைகள் நியூ­யோர்க்­கிற்கு கடத்திச் சென்­றதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட துணை ஜனா­தி­பதி டெல்சி ரொட்­றி­கஸைப் போன்று வொஷிங்­டனின் விருப்­பங்­களை நிறை­வேற்­றக்­கூடிய ஒரு­வரை ஈரானில் பத­வியில் அமர்த்­து­வதே ட்ரம்பின் திட்டம்.

ஆய­துல்லா கமே­னியின் கொள்­கை­களை பின்­பற்றும் புதிய ஈரா­னியத் தலை­வரை தன்னால் ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று அவர் அறி­வித்­தி­ருக்­கிறார். ஆனால், அத்­த­கைய ஒரு கையாளை இன்­றைய ஈரா­னிய அர­சாங்கத் தலை­வர்கள் மத்­தியில் கண்­டு­பி­டிப்­பது சாத்­தி­ய­மில்லை என்றே தோன்­று­கி­றது.

ஆய­துல்லா கமே­னியின் மறை­வை­ய­டுத்து ஈரா­னிய அரசு நிலை குலைந்து விடும் என்று எதிர்­பார்த்த அமெ­ரிக்­கா­வுக்கும் இஸ்­ரே­லுக்கும் இது­வ­ரையில் ஏமாற்­றமே கிடைத்­தி­ருக்­கி­றது.

மிலேச்­சத்­த­ன­மான குண்­டு­வீச்­சுக்­களை நடத்தி ஈரானில் அழி­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்கும் ட்ரம்ப். அதே­வேளை  அர­சாங்­கத்தைத் தூக்­கி­யெ­றி­யு­மாறு அந்த நாட்டு மக்­களை கேட்­கிறார்.

பாது­காப்பு அமைச்சர் மற்றும் படைத்­த­ள­ப­திகள் பலர் கொல்­லப்­பட்ட போதிலும் இஸ்ரேல் மீதும் அயல் அரபு நாடு­களில் உள்ள அமெ­ரிக்கப் படைத் தளங்கள் சொத்­துக்கள் மற்றும் தூத­ர­கங்கள் மீதும் ஈரான் தொடர்ச்­சி­யாக ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

ஆசி­யா­வுக்­கான வர்த்­தகம் உட்­பட உலகின் 20 சத­வீ­த­மான எண்ணெய் விநி­யோ­கத்­துக்கு முக்­கி­ய­மான தாக விளங்கும் ஹோர்முஸ் நீரி­ணையை ஈரான் மூடி­விட்­டது.

போரை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு சில நாடுகள் மத்­தி­யஸ்த முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக ஈரா­னிய ஜனா­தி­பதி மசூத் பெஸேஷ்­கியன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறிய அதே­வேளை ட்ரம்ப் ஈரான் நிபந்­த­னை­யற்ற முறையில் சர­ண­டைய வேண்டும் என்று கூறினார்.

நிபந்­த­னை­யற்ற சர­ணா­க­தியைத் தவிரஇ ஈரா­னுடன் வேறு எந்த உடன்­பாட்­டுக்கும் இட­மில்லை என்­பது அவ­ரது நிலைப்­பாடு.

பாரிய தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு ஈரான் தீட்­டிக்­கொண்­டி­ருந்த திட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்காக முன்­னெச்­ச­ரிக்­கை­யா­கவே தாக்­கு­தல்­களை தொடங்­கி­ய­தாக கூறும் அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் அவற்றின் குற்­றச்­சாட்டை நிரூ­பிக்க எந்­த­வொரு சான்­றையும் உலகின் முன் வைக்­க­வில்லை.

கடந்த வருடம் ஜூனில் நடத்­திய குண்­டு­வீச்சுத் தாக்­கு­தல்­களில் ஈரானின் சகல அணு­வ­சதிக் கட்­ட­மைப்­புக்­களும் நிர்­மூலம் செய்­யப்­பட்டு விட்­ட­தா­கவும் அதற்குப் பிறகு ஈரான் எந்த அணுத் திட்­டத்­தையும் கொண்­டி­ருக்க முடி­யாது என்று கூறிய ட்ரம்ப், ஈரான் அணு­வா­யு­தங்­களை தயா­ரிப்­பதை தடுக்­கவே தாக்­கு­தல்­களை மீண்டும் ஆரம்­பிக்க வேண்­டி­யி­ருந்­த­தாக குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் சாச­னத்தின் பிர­காரம் எந்­த­வொரு நாடும் அதற்­கெ­தி­ராக உட­ன­டி­யாக மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய தாக்­கு­த­லுக்கு எதி­ராக தற்­காப்­புக்கு படை­ப­லத்தைப் பயன்­ப­டுத்­து­வது சட்ட­பூர்­வ­மா­னது. அல்­லா­விட்டால் பாது­காப்புச் சபையின் அங்­கீ­கா­ரத்­துடன் மாத்­தி­ரமே தாக்­கு­தலை நடத்த முடியும்.

அதே­வேளை அமெ­ரிக்க ஜனா­தி­பதி போரைப் பிர­க­டனம் செய்­வ­தற்கு காங்­கி­ரஸின் அனு­ம­தியைப் பெற­வேண்டும். இந்த நிபந்­த­னை­களில் எந்­த­வொன்­றையும் ட்ரம்ப் நிறை­வேற்­ற­வில்லை.

ட்ரம்பின் போர் ஈரானை அழித்துக் கொண்­டி­ருப்­பது மாத்­தி­ர­மல்லஇ இன்­றைய பிரச்­சினை. உலகின் உறு­திப்­பாட்­டுக்கு ஆதா­ர­மாக இருக்கும் சட்ட முறை­மைகள் சக­ல­தையும் அவர் பல­வீனப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார்.

வெனி­சு­வேலாவின் இறை­மையை மீறி மது­ரோவை கடத்திச் சென்­றது குறித்து கண்­ட­னங்கள் கிளம்­பி­ய­போது சர்­வ­தேச சட்­டங்­களைப் பற்றி தனக்கு கவ­லை­யில்லை என்றும், இரண்­டா­வது உல­கப்­போ­ருக்கு பின்னர் உரு­வாக்­கப்­பட்ட உலக ஒழுங்கு (ஐக்­கிய நாடுகள்) அமெ­ரிக்­கா­வுக்கு அநா­வ­சி­ய­மான சுமை­யாக இருக்­கி­றது என்றும் அவர் கூறி­யது கவ­னிக்­கத்­தக்­கது.

முன்­னெச்­ச­ரிக்­கை­யாக படைப்­ப­லத்தைப் பயன்­ப­டுத்­து­வது என்­பது வழ­மை­யா­ன­தாக்­கப்­பட்­டு­விட்டால், எந்­த­வொரு அரசும் தனக்கு நீண்­ட­கால நோக்கில் அச்­சு­றுத்­த­லாக அமையக் கூடி­யது என்று சந்­தே­கிக்கும் எந்­த­வொரு நாட்டின் மீதும் விரும்­பிய நேரத்தில் படை பலத்தைப் பிர­யோ­கிக்­கக்­கூடும்.

இது பேரா­பத்­தான ஆயு­தங்கள் புழக்­கத்தில் இருக்­கின்ற இன்­றைய யுகத்தில் பயங்­க­ர­மான முன்­னு­தா­ர­ண­மா­கி­விடும். சட்­ட­வி­ரோ­த­மான போர்கள் சர்­வ­சா­தா­ர­ண­மா­கி­விடும்.

தற்­போ­தைய உலகை பல்­து­ரு­வ­ம­யப்­பட்­டது என்ற ஒரு மாயையில் நாம் வாழ்ந்­தி­ருக்­கிறோம் என்று தோன்­று­கி­றது.

அதா­வது, பல நாடுகள் பொரு­ளா­தார மற்றும் இரா­ணுவ ரீதியில் ஒப்­பீட்­ட­ளவில் பலம்­பொ­ருந்­தி­ய­வை­யாக வளர்ந்­து­விட்­டதால் அமெ­ரிக்கா போன்ற தனி­யொரு வல்­ல­ரசின் மேலா­திக்­கத்தின் கீழா­ன­தாக உலக ஒழுங்கு இனிமேல் இருக்­காது என்று நம்­பினோம்.

எவ்­வாறு, எந்த நேரத்தில் நடந்­து­கொள்வார் என்று முன்­கூட்­டியே கூற­மு­டி­யாத ட்ரம்பின் தலைமையின் கீழ், கடந்த ஒரு வரு­டத்­துக்கும் அதி­க­மான கால­மாக சர்­வ­தேச சட்­டங்­களை மதிக்­காமல் அமெ­ரிக்கா செய்­து­வ­ரு­கின்ற அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கு எதி­ராக எதையும் செய்ய முடி­யா­த­வை­யாக உலக நாடுகள் பரி­தா­ப­க­ர­மான ஒரு நிலையில் இருக்­கின்­றன.

இரு மாத­கால இடை­வெ­ளியில் அமெ­ரிக்கா, சீனாவின் நெருங்­கிய இரு நேச­நா­டு­களில் ஆக்­கி­ர­மிப்பைச் செய்­தி­ருக்­கி­றது.

வெனி­சு­வே­லாவில் இருந்து மதுரோ கடத்திச் செல்­லப்­பட்­ட­தையும் கடந்­த­வாரம் குண்டு வீச்­சுக்­களில் ஈரா­னிய ஆன்­மீகத் தலைவர் கொல்­லப்­பட்­ட­தையும் சர்­வ­தேச சட்­ட­மீறல் என்று கண்­டனம் செய்யச் சீனா­வினால் முடிந்­ததே தவிர வேறு எதையும் உருப்­ப­டி­யாகச் செய்ய முடி­ய­வில்லை.

ரஷ்­யாவின் நிலையும் அதுவே. இரு நாடு­களும் ஈரா­னுக்கு ஆத­ர­வாக இரா­ணுவ ரீதி­யான தலை­யீ­டு­களைச் செய்ய முடி­யா­த­வை­யாக இருக்­கின்­றன.

ஒரு வாரம் கடந்­து­விட்ட நிலை­யிலும் கூட இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி ஈரா­னுக்கு எதி­ரான அமெ­ரிக்க — இஸ்­ரே­லிய போரை கண்­டனம் செய்ய முன்­வ­ர­வில்லை.

ஆய­துல்லா கமே­னியின் மறை­வுக்கு காலந்­தாழ்த்­தியே இந்­தியா அனு­தாபம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. புது­டில்­லியில் உள்ள ஈரா­னியத் தூத­ர­கத்­துக்குச் சென்ற இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் விக்ரம் மிஸ்ரிஇ அனு­தாபப் புத்­த­கத்தில் கைச்­சாத்­திட்டார்.

ஈரா­னியத் தூத­ர­கங்­க­ளுக்குச் சென்று அனு­தாபப் புத்­த­கங்­களில் கைச்­சாத்­திட வேண்டாம் என்று உலக நாடுகள் பல­வற்றின் தலை­ந­க­ரங்­களில் உள்ள இந்­தியத் தூது­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்தல் விடுக்­கின்ற அள­வுக்கு அமெ­ரிக்­காவைப் புண்­ப­டுத்­தக்­கூ­டாது என்­பதில் மோடி அர­சாங்கம் கடு­மை­யான கரி­ச­னை­யுடன் இருக்­கி­றது.

இலங்­கையின் கரை­யோ­ரத்­துக்கு அப்பால் ஈரா­னியப் போர்க்­கப்பல் அமெ­ரிக்க நீர்­மூழ்­கி­யினால் மூழ்­க­டிக்­கப்­பட்ட சம்­பவம் இந்து சமுத்­தி­ரத்தில் செல்­வாக்கைச் செலுத்­து­வதில் இந்­தி­யா­வுக்கு இருக்கும் வல்­லமை குறித்து கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கி­றது.

கடற்­படைப் பயிற்­சி­களில் பங்­கேற்ற ஈரா­னியப் போர்க்­கப்பல் விசா­க­ப்பட்­டி­னத்தில் இருந்து புறப்­பட்ட நேரத்தில் இருந்து அதை அமெ­ரிக்க நீர்­மூழ்கி கண்­கா­ணித்துக் கொண்­டி­ருந்­தது என்­பது தெளி­வா­னது.

தனது செல்­வாக்குப் பிராந்­தியம் என்று இந்­தியா உரிமை கோரு­கின்ற கிர­ம­மாக இந்­தியக் கடற்­படை ரோந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்ற –கடற்­பி­ராந்­தி­யத்தில் வெளி­நாட்டு நீர்­மூழ்கி ஒன்றின் பிர­சன்­னத்தை கண்­டு­பி­டிக்­கவும் தனது அழைப்பின் பேரில் பயிற்­சிக்கு வந்த நேச­நா­டொன்றின் போர்க்­கப்­பலின் பாது­காப்பை உறுதி செய்­யவும் இந்­தி­யா­வினால் இய­ல­வில்லை என்­பது கோடிப்­பு­றத்தில் இந்­தி­யாவின் அதி­காரம் தொடர்பில் அசௌ­க­ரி­ய­மான கேள்­வி­களைக் கிளப்­பு­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க கிறீன்­லாந்து தீவை அமெ­ரிக்­கா­வுக்குச் சொந்­த­மாக்கப் போவதாகவும் அதற்காக தேவையானால் படைபலத்தைப் பிரயோகிக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தியபோது அவர் சர்வதேச சட்டங்களை அவமதிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைவர்கள்இ ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்யவோ அல்லது ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கவோ முன்வரவில்லை.

இன்றைய ‘நாஜி’களான ட்ரம்பும் நெத்தன்யாஹுவும் செய்யும் சர்வதேச காடைத்தனத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் உலக நாடுகள் பரிதாபகரமாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் முற்றுமுழுதாக இஸ்ரேலின் நலன்களினால் வடிவமைக்கப்படக்கூடிய சூழ்நிலையை தற்போதைய போர் ஏற்படுத்தக்கூடிய பேராபத்து இருக்கிறது.

அதேவேளை, ட்ரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்திவருவதைப் போன்று வளங்களைச் சூறையாடுவதற்காக பல நாடுகளில் இராணுவத் தலையீடுகளைச் செய்வதை தடுக்க முடியாமலும் போகலாம். உலக நாடுகள் ட்ரம்பின் போர்வெறிக்கு எதிராக அணிதிரள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனித குலத்தை அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும்.

-வீரகத்தி தனபாலசிங்கம்-

Share.
Leave A Reply

Exit mobile version