அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) எதிர்வினை ஆற்றியுள்ளது.

இரானுடன் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் எனக் கூறிய டிரம்ப் தேதி எதையும் குறிப்பிடவில்லை.

போர் எப்போது முடியும் என்பதை இரான் முடிவு செய்யும் என புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் ‘ஒரு லிட்டர் எண்ணெய் கூட இந்தப் பிராந்தியத்திலிருந்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது’ என ஐஆர்ஜிசி ( IRGC ) தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக பதற்றம் நிலவுவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலகின் 20% எண்ணெய் இந்த நீர் வழித்தடம் வழியாக செல்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version