பிலியந்தலை, கொரகபிட்டிய பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்த இயந்திர இயக்குநர் ஒருவர், அங்குள்ள அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெனியாய, பல்லேகம, நிஸ்ஸங்க வீதியைச் சேர்ந்த மிலிந்த மதுசங்க விஜேசிங்க (27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வேறு ஒருவருடன் இணைந்து அச்சு இயந்திரம் ஒன்றில் அன்றாடப் பணியில் ஈடுபட்டு வந்த போது அங்கிருந்த மற்றைய நபர், இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறை பரிசோதிப்பது போல இயந்திரத்திற்குள் தனது தலையை நுழைத்துள்ளார்.

அதேநேரம் இயந்திரத்தின் மறுபுறத்தில் இருந்த நபரும் இயந்திரத்திற்குள் தனது தலையை நுழைத்துள்ளமை அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளது.

அவர் தலையை உள்ளே நுழைத்த ​போது, அச்சு இயந்திரம் இயங்க தொடங்கியுள்ளது. இதன் போது அவரது தலை இயந்திரத்திற்குள் சிக்கி, தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version