ஈரான் மீது இஸ்ரேல் தொடங்­கிய தாக்­குதல் பிராந்­தி­யத்தில் பெரும் போராக மாறி­யி­ருக்­கி­றது. இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் சேர்ந்து ஈரானை தாக்க, பதி­லுக்கு ஈரான் இஸ்­ரேலை மாத்­தி­ர­மன்றி, அமெ­ரிக்க தளங்கள் எங்­கெங்கு இருக்­கின்­ற­னவோ அந்த நாடு­களின் மீது எல்லாம் தாக்­கு­தலை நடத்தி வரு­கி­றது. இந்தப் போர் உலகம் முழு­வதும் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்த ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்­த­போது, உலகப் பொரு­ளா­தா­ரத்தின் மீது அது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

ஏனென்றால் உலகம் முழு­வதும் கோதுமை, தானி­யங்கள், சமையல் எண்ணெய், எரி­சக்தி ஏற்­று­ம­தியில் உக்ரேன் முக்­கிய பங்கு வகித்து வந்­தது.

போரினால் இந்த ஏற்­று­ம­திகள் தடைப்­பட்ட போது, உலகின் பெரும்­பா­லான நாடு­களில் அதன் தாக்கம் எதி­ரொ­லித்­தது. அதை­ய­டுத்து ரஷ்­யா­வுக்கு எதி­ராக அமெ­ரிக்கா தடை­களை விதித்­ததால், பொரு­ளா­தார நிலை மேலும் குழப்­ப­ம­டைந்­தது.

நான்கு ஆண்­டு­க­ளுக்கு பின்­னரும் அந்த குழப்­பங்­களில் இருந்து உலகம் மீள முடி­யாமல் இருக்­கி­றது.

இன்­றைக்கும் ரஷ்­யா­வுடன் வர்த்­தகம் செய்ய முடி­யாமல், எண்ணெய் இறக்­கு­மதி செய்ய முடி­யாமல் பல நாடுகள் கடும் நெருக்­க­டி­களை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் இருந்து மீள முடி­யாமல் உள்ள சூழலில் மத்­திய கிழக்கில் போர் வெடித்­தி­ருக்­கி­றது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக காணப்­பட்ட கொதி நிலை இப்­போது போராக வெடித்­தி­ருக்­கி­றது. இப்­ப­டி­யொரு போர் நிகழும் என எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தாலும், இந்­த­ள­வுக்கு மோச­மாக, இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை.

இந்தப் போர் பல நாட்­க­ளுக்கு அல்­லது வாரங்­க­ளுக்கு நீடிக்கக் கூடிய சாத்­தி­யங்கள் தற்­போது தென்­ப­டு­கின்­றன.

இது இலங்­கைக்கு ஒரு முக்­கி­ய­மான பிரச்­சினை. பொரு­ளா­தாரம் தொடக்கம், இரா­ஜ­தந்­திரம் வரை, இதன் தாக்கம் எதி­ரொ­லிக்­கி­றது.

போர் வெடித்­ததும், எரி­பொருள் நிலை­யங்­களில் தொடங்­கிய வரிசை, இன்­னமும் முடி­வுக்கு வராமல் நீளு­கி­றது. பொரு­ளா­தார ரீதி­யாக இதன் தாக்­கங்கள் குறைத்து மதிப்­பிடக் கூடி­யவை அல்ல.

ஏனென்றால் இது மத்­திய கிழக்­குடன் மாத்­திரம் தொடர்­பு­டைய விவ­காரம் அல்ல. மத்­திய கிழக்கில் சுமார் 15 இலட்சம் இலங்கை தொழி­லா­ளர்கள் பணி­யாற்­று­கி­றார்கள்.

அவர்கள் இலங்­கைக்கு அனுப்பி வரும் அந்­நிய செலா­வணி சாதா­ர­ண­மா­ன­தல்ல.

2025 ஆம் ஆண்டு 8 பில்­லியன் டொலர்­களை அவர்கள் நாட்­டுக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தனர்.

பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து மீள்­வ­தற்­கான இலங்­கையின் முயற்­சி­க­ளுக்கு இது ஒரு முக்­கி­ய­மான பல­மாக இருந்து வரு­கி­றது.

போர் நெருக்­க­டி­யினால் இந்த தொழி­லா­ளர்­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கி­றது. அவர்­களின் வேலை நிச்­ச­ய­மற்­ற­தாக மாறி­யுள்­ளது.

போர் நீளு­மே­யானால் அவர்­களில் கணி­ச­மானோர் நாடு திரும்ப வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம்.

அது ஒரு பக்கம் அந்­நிய செலா­வணி வருவாய் இழப்பை ஏற்­ப­டுத்­து­வ­துடன், இன்­னொரு பக்கம் உள்­நாட்டில் வேலை­யின்­மை­யையும் தூண்­டி­விடும்.

அதே­வேளை அதி­க­ரித்து வரும் எரி­பொருள் விலை புதி­யதோர் பிரச்­சி­னை­யாக மாறும். ஏற்­கெ­னவே, பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் இலங்கை அதி­க­ளவு விலைக்கு எரி­பொ­ருளை விற்க வேண்­டிய நிலையில் இருக்­கி­றது.

சர்­வ­தேச சந்­தையில் எண்ணெய் விலை அதி­க­ரித்து வரு­வது இன்னும் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும்.

ஹோர்மூஸ் நீரிணை மூடப்­பட்­டுள்­ளதால் மாற்­று­வ­ழியில் எரி­பொ­ருளைப் பெறு­வ­தற்கு நைஜீ­ரியா அல்­லது அமெ­ரிக்­காவை அர­சாங்கம் அணு­கு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

இது மேல­திக செல­வு­க­ளையும், விலை அதி­க­ரிப்­பையும் ஏற்­ப­டுத்தும். உள்­நாட்டில் அதன் தாக்கம் எல்லா மட்­டங்­க­ளிலும் உண­ரப்­படும்.

தனியே எரி­பொருள் விலை உயர்­வுடன் அது நிற்­காது, அதற்கு அப்பால் மின்­சாரம் மற்றும் போக்­கு­வ­ரத்து, உற்­பத்­தித்­து­றைகள் என அனைத்­திலும் அது தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.

இதன் தாக்கம் பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து மீண்­டெழும் கனவில் இருக்கும் இலங்­கைக்கு பேரி­டி­யா­கவே அமையும்.

இலங்­கையின் தேயிலை உற்­பத்­தித்­ துறைக்கும் இது ஒரு மோச­மான பின்­ன­டை­வாக இருக்கப் போகி­றது. ஏனென்றால் ஈரா­னுக்கு இலங்­கையின் கணி­ச­மா­ன­ளவு தேயிலை ஏற்­று­மதி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. ஏனைய மத்­திய கிழக்கு நாடு­களும் கணி­ச­மா­ன­ளவு தேயி­லையை கொள்­வ­னவு செய்­கின்­றன.

தேயிலை ஏற்­று­மதி நிறுத்­தப்­பட்டால் அல்­லது அதில் பாதிப்பு ஏற்­ப­டு­மே­யானால், இலங்­கைக்கு வரு­மான இழப்பை மாத்­திரம் ஏற்­ப­டுத்­தாது.

அதற்கு அப்பால் உள்­நாட்டு தேயிலை உற்­பத்­தி­யையும் அதனை நம்பி இருக்கும் தொழி­லா­ளர்கள் மற்றும் ஏனைய தொழில் துறை­யி­ன­ரையும் பாதிக்கும்.

இந்த பாதிப்பை இலங்கை சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ள முடி­யாது. இவற்­றிற்கு அப்பால் இலங்­கைக்கு இந்தப் போர் பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

போர் தொடங்­கிய மூன்று நாட்­களில் மத்­திய கிழக்கு ஊடாகப் பய­ணிக்கும் 208 விமா­னங்கள் இரத்து செய்­யப்­பட்­டன. இது சுற்­று­லாத்­து­றைக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடிய சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

கடந்த ஆண்டு இலங்கை முன்­னெப்­போதும் இல்­லா­த­ள­வுக்கு கூடி­ய­ளவு சுற்­றுலா பய­ணி­களை ஈர்த்­தது. ஆனாலும், எதிர்­பார்க்­கப்­பட்­ட­ளவு அந்­நிய செலா­வ­ணியை ஈட்ட முடி­ய­வில்லை.

சுற்­றுலா பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருந்­தாலும் சுற்­றுலா பய­ணி­களின் ஊடாக கிடைக்கும் வரு­மா­னத்தை பெருக்கிக் கொள்ள முடி­யாமல் இருந்­தது.

இதனால் இந்த ஆண்டில் மூன்று மில்­லியன் சுற்­றுலா பய­ணி­களை ஈர்த்து 5 பில்­லியன் டொலர்­களை சுற்­றுலாத் துறை மூலம் ஈர்ப்­ப­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டி­ருந்­தது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்­களும் அர­சாங்­கத்­துக்கு சாத­க­மா­கவே நிலைமை சென்று கொண்­டி­ருந்­தது.

இரண்டு மாதங்­க­ளிலும் கிட்­டத்­தட்ட ஐந்து லட்சம் சுற்­றுலா பய­ணிகள் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தார்கள். அது அடுத்த 10 மாதங்­களில் 3 மில்­லியன் சுற்­றுலா பய­ணி­களை ஈர்க்­கின்ற திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக கொண்டு நடத்­தக்­கூ­டிய வாய்ப்­பையும் உரு­வாக்­கி­யி­ருந்­தது.

ஆனால், பெப்­ர­வரி 28ஆம் திகதி தொடங்­கிய போர் இலங்­கையின் தலையில் இடி விழுந்­தது போல அமைந்து விட்­டது.

ஏனென்றால், இலங்­கைக்கு வரும் சுற்­றுலா பய­ணி­களில் 30 வீத­மானோர் பய­ணிக்­கின்ற வான்­வெளி மூடப்­பட்­டி­ருக்­கி­றது.

இதனால், சுற்­று­லாத்­துறை மூலம் வாரம் ஒன்­றுக்கு கிடைக்கும் 15 மில்­லியன் டொலர் இழப்பு ஏற்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் இருந்து திரும்ப வேண்­டிய 10ஆயிரம் சுற்­றுலா பய­ணிகள் திரும்ப வழி­யின்றி சிக்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவ்­வாறு டுபாயில் சிக்­கிக்­கொண்ட சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு, விடு­தி­களில் தொடர்ந்து தங்­கி­யி­ருப்­ப­தற்கு, கட்­டணம் அற­விடக் கூடா­தென, டுபாய் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

ஆனால், இலங்­கை­யினால் அவ்­வாறு செய்ய முடி­யாது. கட்­ட­ண­மின்றி 14 நாட்கள் வீசா நீடிப்பை மட்டும் வழங்­கி­யி­ருக்­கி­றது.

இந்த போர் இலங்­கையின் சுற்­றுலா துறையை பெரிதும் பாதிக்கும் சூழல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையை நோக்கி வரு­கின்ற சுற்­றுலா பய­ணிகள் எண்­ணிக்கை குறையும் சாத்­தி­யங்கள் உள்­ளன.

போரின் பாதிப்­புகள், பொரு­ளா­தார நெருக்­க­டிகள் என்­பன சுற்­றுலாத் துறையை நலி­வ­டைய செய்­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன.

அதே­வேளை, மத்­திய கிழக்கின் டுபாய் போன்ற நாடு­களில் சுற்­றுலா செல்­லு­கின்ற பய­ணிகள் இலங்கை போன்ற நாடு­களை நோக்கி திரும்­பு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளையும் மறுப்­ப­தற்கு இல்லை.

ஆனால், ஒட்­டு­மொத்த போர்ச்­சூழல் இலங்­கைக்கு சாத­க­மா­ன­தாக இல்லை.

இது எல்லா விட­யங்­க­ளிலும் இலங்­கைக்கு பொரு­ளா­தார ரீதி­யான பாதிப்­பு­க­ளையே ஏற்­ப­டுத்தக் கூடி­யது.

இலங்கை பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து மீண்டு வர வேண்­டிய நிலையில் இருக்­கின்ற போது, ஏற்­பட்­டி­ருக்­கின்ற இந்த சூழல், இன்னும் நெருக்­க­டியை அதி­க­ரிக்கும்.

சாதா­ரண சூழலில் இலங்­கை­யினால் மீண்­டெ­ழு­வது கடினம் அல்ல, ஆனால், இவ்­வா­றான சூழலில் இதனை எதிர்­கொள்­வது சிக்­க­லா­னது.

இத்­த­கைய நிலையில் மத்­திய கிழக்கில் போர் நிலை­மைகள் மோச­ம­டைந்து அங்­குள்ள 15 இலட்சம் இலங்கை தொழிலாளர்களை திருப்பி அழைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமேயானால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அவ்வளவு பேரையும் நாட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது கூட இலங்கையினால் இயலாத காரியமாகவே இருக்கும்.

இவ்வாறான நிலை வராமல் இருந்தால் இலங்கை தப்பித்துக் கொள்ளும், இல்லையேல் இலங்கை இந்தப் போரின் விளைவாக பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்வதுடன், எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

கோட்டாபய ராஜபக் ஷ கூட சர்வதேச போர் சூழல்களினால் தான் ஆட்சியை இழக்க நேரிட்டது.

கொரோனா தொற்றும் அதனை அடுத்து ஏற்பட்ட உக்ரேன் போரும் எரிபொருள் நெருக்கடியும் பொருளாதார ரீதியாக ஏற்படுத்திய தாக்கங்களும் தான், 69 இலட்சம் மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த கோட்டாவையே வீட்டுக்கு அனுப்பின.

அதேபோன்ற நிலையொன்றை இப்போதைய போர்ச்சூழல் ஏற்படுத்தாது என உறுதியாக கூற முடியாது.

-சத்­ரியன்

Share.
Leave A Reply

Exit mobile version