2026 பெப்­ர­வரி 28 ஆம் திகதி, ஈரான் மீது அமெ­ரிக்க – இஸ்­ரே­லிய கூட்டு இரா­ணுவத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து ஆத்­தி­ர­ம­டைந்த ஈரான்,

தன்­மீ­தான தாக்­கு­தல்­க­ளுக்கு தள வச­திகள் அளித்­த­தாக நம்­பப்­படும் தனது வளை­குடா அண்டை நாடு­களின் அமெ­ரிக்கத் தளங்­களைத் தாக்கி வரு­கின்­றது.

இந்த தாக்­கு­தல்­களின் போது தங்­களை மீட்­ப­தற்கு முன்­வர அமெ­ரிக்கா தவ­றி­ய­மைக்­காக, சவூதி தலை­மை­யி­லான எண்ணெய் வளம் நிறைந்த அரபு வளை­குடா நாடுகள் அமெ­ரிக்கா மீது அதி­ருப்தி அடைந்து, அமெ­ரிக்­கா­வு­ட­னான உற­வு­களைத் துண்­டிக்க முன்­வந்­துள்­ளன.

இஸ்­ரேலின் அடுத்த இலக்­காக தாங்கள் இருக்­கக்­கூடும் என்று அரபு தலை­வர்கள் அஞ்­சு­கின்­றனர்.

இதுதான் இன்­றைய நிலைமை. ஒரு சவூதி அதி­காரி அல் ஜசீ­ரா­விடம் கருத்து தெரி­விக்­கையில், “அமெ­ரிக்கா எங்­களை கைவிட்டு விட்டு ஈரா­னிய ஏவு­க­ணைகள் மற்றும் ட்ரோன்­க­ளி­ட­மி­ருந்து இஸ்­ரேலைப் பாது­காப்­பதில் அதன் பாது­காப்பு பொறி­மு­றை­களின் முழுக் கவ­னத்­தையும் செலுத்­தி­யுள்­ளது.

அவர்­க­ளுக்கு தள வச­தி­களை வழங்­கி­யுள்ள நாமும் ஏனைய வளை­குடா நாடு­களும் ஈரா­னிய ஏவு­க­ணைகள் மற்றும் ட்ரோன்­களின் தயவில் விடப்­பட்டோம்” என்று கூறி உள்ளார்.

அரே­பிய வளை­கு­டாவில் உள்ள எரி­சக்தி மற்றும் பொது­மக்கள் வசிப்­பி­டங்கள் மீது சில ட்ரோன் தாக்­கு­தல்­களை இஸ்­ரேலே நடத்தி உள்­ள­தாக, ஈரா­னிய அதி­கா­ரிகள் குற்றம் சாட்­டி­யுள்­ளனர்.

இந்தத் தாக்­கு­தல்­களை பிராந்­திய சீற்­றத்தைத் தூண்­டு­வ­தற்கும், அரபு நாடு­களை தெஹ்ரான் மீதான போருக்குள் இழுக்­கவும், திட்­ட­மிட்ட ஒரு முயற்சி என்று ஈரான் அதி­கா­ரிகள் விளக்கி கூறி­யுள்­ளனர்.

வளை­குடா நாடு­களை போருக்குள் நுழையத் தூண்­டு­வ­தற்­காக எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்கள், துறை­மு­கங்கள் மற்றும் பொது­மக்கள் இலக்­குகள் மீதான சில தாக்­கு­தல்கள் இஸ்­ரேலால் நடத்­தப்­பட்­ட­தாக மேலும் சில வட்­டா­ரங்­களும் தெரி­வித்­துள்­ளன.

இரண்­டரை ஆண்­டு­க­ளுக்கும் மேலாக காஸா மீதான இஸ்­ரே­லிய இனப்­ப­டு­கொ­லை­யிலும், பலஸ்­தீ­னர்கள் கண்­மூ­டித்­த­ன­மாக படு­கொலை செய்­யப்­பட்­ட­திலும், அரபு சர்­வா­தி­கா­ரிகள் பலஸ்­தீ­னர்­களைப் பாது­காக்க வேண்­டிய தமது தார்­மீக கட­மையில் இருந்து மோச­மாகத் தவ­றி­விட்­டனர்.

அதற்கு பதி­லாக அவர்கள் இஸ்­ரே­லுடன் கூட்டு சேர்ந்­தனர். பலஸ்­தீன மக்­களை முழு­மை­யாகக் கைவிட்­டனர். அந்த மக்கள் மனித வர­லாற்றின் இடைக்­கால பாணி­யி­லான காட்­டு­மி­ராண்­டித்­த­னத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். அவர்­க­ளுக்கு தங்­கு­மிடம் உணவு மற்றும் தண்ணீர் கூட வழங்­கப்­ப­ட­வில்லை.

மறு­புறம் இந்த வளை­குடா நாடுகள் அமெ­ரிக்க இரா­ணுவத் தளங்­களை தமது பூமிக்குள் அனு­ம­தித்­தன. அவை உண்­மையில் அந்­தந்த நாடு­களில் இஸ்­ரே­லிய இரா­ணுவத் தளங்­க­ளா­கவே இருந்­தன.

பிராந்­தி­யத்தில் அரே­பி­யர்கள் மீதும் மற்றும் உல­கெங்­கிலும் உள்ள முஸ்­லிம்கள் மீதும் அமெ­ரிக்­க-­இஸ்­ரே­லிய கடு­மை­யான நிலைப்­பா­டுகள் இருந்த போதிலும், அரபு நாடுகள் அவற்றைப் பொருட்­ப­டுத்­த­வில்லை.

அரபு நாடுகள் தமது மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு ஒரு­போதும் செவி­சாய்க்­க­வில்லை. தங்கள் நாடு­களின் செல்­வத்தின் பெரும்­ப­கு­தியை அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பாவில் அரபு நாடுகள் முத­லீடு செய்­துள்­ளன.

மொத்­தத்தில் அவர்கள் முஸ்லிம் நாடு­க­ளையும் உல­கெங்­கிலும் உள்ள முஸ்­லிம்­களின் துன்­பங்­க­ளையும் கண்டு கொள்­ளவே இல்லை அல்­லது அவற்றை கண்டும் காணாமல் நிரா­க­ரித்­தனர் என்­றுதான் சொல்ல வேண்டும்.

இதற்­கி­டையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்­கத்தில் ஈரா­னுக்கு எதி­ராக இரா­ணுவ நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அமெ­ரிக்­காவை சவூதி அரே­பியா திரைக்குப் பின்னால் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அதற்­கான குறிப்­பி­டத்­தக்க முயற்­சிகள் நடந்­த­தா­கவும் செய்­திகள் வெளி­வந்­துள்­ளன. இது சவூதி இராச்­சி­யத்தின் பொது­வான இரா­ஜ­தந்­திர நிலைப்­பாட்­டிற்கு முற்­றிலும் முர­ணா­ன­தாகும்.

சவூதி – இஸ்­ரேலின் கூட்டு உந்­துதல் ஈரானைத் தாக்க ட்ரம்­பிற்கு உற்­சா­க­மூட்­டி­யது” என்ற தலைப்பில் 2026 பெப்­ர­வரி 28 அன்று வொஷிங்டன் போஸ்ட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது:

ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், பல வாரங்­க­ளாக நீடித்த ஆலோ­ச­னை­க­ளுக்குப் பிறகு ஈரான் மீது பரந்த அள­வி­லான தாக்­கு­தலைத் தொடங்கி உள்ளார்.

மத்­திய கிழக்கில் உள்ள வழ­மைக்கு மாறான ஒரு ஜோடி, அமெ­ரிக்க கூட்­டா­ளி­க­ளான இஸ்ரேல் மற்றும் சவூதி அரே­பியா இந்த விஷ­யத்தில் ஜனா­தி­பதி ட்ரம்­புக்கு பெரும் அழுத்­தங்ளை கொடுத்­துள்­ளன.

இந்த விட­யத்தை நன்கு அறிந்த நான்கு முக்­கிய நபர்­களின் கூற்­றுப்­படி இந்த அழுத்­தங்­களின் பிறகு இஸ்­ரே­லிய மற்றும் அமெ­ரிக்க படைகள் கிட்­டத்­தட்ட நான்கு தசாப்­தங்­க­ளாக ஆட்­சியில் இருக்கும் ஈரா­னிய உச்ச தலைவர் அலி கமே­னியை கவிழ்க்க ஒன்­றி­ணைந்­தன.

இந்த தாக்­குதல் அதன் ஆரம்ப மணி நேரத்­தி­லேயே ஆயத்­துல்லா கமேனி மற்றும் இன்னும் பல மூத்த ஈரா­னிய அதி­கா­ரி­களைக் கொல்ல வழி­வ­குத்­தது.

ஜனா­தி­ப­தியின் விசேட தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ட்ரம்ப்பின் மரு­மகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானின் அணு­சக்தி மற்றும் ஏவு­கணைத் திட்­டங்கள் குறித்து ஈரா­னிய தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களைத் தொடர்ந்து கொண்­டி­ருந்த போதும் தாக்­கு­த­லுக்­கான சவூதி உந்­துதல் தொட­ரவே செய்­தது.

அந்த பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்த போது சவூதி முடிக்­கு­ரிய இள­வ­ர­ச­ருக்கும் ஈரா­னிய ஜனா­தி­பதி மசூத் பெஸேஷ்­கி­ய­னுக்கும் இடை­யி­லான தொலை­பேசி அழைப்பும் இடம்­பெற்­றது.

அதை தொடர்ந்து ஈரான் மீதான தாக்­குதல் ஒன்று நடந்தால் அதற்கு சவூதி வான்­வெ­ளியை அல்­லது அதன் பிர­தே­சங்­களைப் பயன்­ப­டுத்த இள­வ­ரசர் அனு­ம­திக்க மாட்டார் என்று றியாத் ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது.

இள­வ­ர­சரின் நிலைப்­பாட்டை அவ­ரது சகோ­தரர் சவூ­தியின் பாது­காப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் உறுதி செய்தார்.

அவர் கடந்த ஜன­வரி மாதம் வொஷிங்­டனில் அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளுடன் மூடிய கத­வு­க­ளுக்குள் இர­க­சிய கூட்­டங்­களை நடத்­தினார். இந்த இர­க­சிய சந்­திப்­புக்­களின் போது ஈரான் மீது தாக்­குதல் ஒன்றை நடத்­தா­விட்டால் அதனால் ஏற்­படும் விளை­வுகள் குறித்தும் அவர் அமெ­ரிக்­காவை எச்­ச­ரித்­துள்ளார் என்றும் இப்­போது தக­வல்கள் வெளி­யாகி உள்­ளன.

ஷியா முஸ்­லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் ஈரானும் சுன்னாஹ் பிரிவு தலை­மை­யி­லான சவூதி அரே­பி­யாவும் நீண்ட கால­மாக முஸ்லிம் உலகின் தலை­மைத்­து­வத்­துக்­கான தீவி­ர­மான போட்­டியைக் கொண்­டுள்­ளன. இது பிராந்­தி­யத்தில் இதற்கு முன்­னரும் சில மறை­முக யுத்­தங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

இதற்­கி­டையில் தனது உள் நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் இஸ்லாம் தொடர்­பான சவூதி அரசின் நிலைப்­பா­டுகள் சில சம­யங்­களில் உல­கெங்­கிலும் உள்ள முஸ்­லிம்­க­ளி­டையே கவ­லை­யையும் சர்ச்­சை­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

உதா­ர­ண­மாக, அரபு மற்றும் முஸ்லிம் நாடு­க­ளுக்கு எதி­ரான அமெ­ரிக்க – இஸ்­ரே­லிய யுத்­தங்­களின் போது, பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் நாடு­க­ளுக்கு சார்­பாக நிற்­ப­தற்கு பதி­லாக மற்ற தரப்­பி­லேயே சவூதி அரே­பியா நின்­றுள்­ளது.

எகிப்தில் 61 ஆண்­டு­களில் முதல் முறை­யாக மக்­களின் விருப்­பப்­படி சுதந்­தி­ர­மான மற்றும் நியா­ய­மான ஜனா­தி­பதித் தேர்­தலில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முஹம்­மது முர்­சியின் இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அர­சாங்­கத்தை கவிழ்க்க சவூதி அரே­பியா குவைத் மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சியம் என்­பன இணைந்து பதி­னொரு பில்­லியன் டொலர்­களை செல­விட்­டன.

இதற்­கி­டையில் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ்ஸும் இஸ்­ரேலின் நல­னுக்­காக முழு பிராந்­தி­யத்­தையும் சீர்­கு­லைப்­பதில் அமெ­ரிக்கா மற்றும் இஸ்­ரே­லுடன் பங்­கா­ளி­யாக மாறி­யுள்­ளது.

இந்த தாக்­கு­த­லுக்கு முன்­ன­தாக இஸ்­ரே­லுக்­கான அமெ­ரிக்க தூதர் மைக் ஹக்­கபீ, பிர­பல ஊட­க­வி­ய­லாளர் டக்கர் கார்ல்­ச­னு­ட­னான ஒரு பேட்­டியில் நைல் நதி­யி­லி­ருந்து யூப்­ரடீஸ் வரை­யி­லான அனைத்து நிலங்­க­ளையும் இஸ்ரேல் எடுத்துக் கொண்டால் நன்­றாக இருக்கும் என்று கூறி இருந்தார். இது வெறும் தற்­செ­ய­லான ஒரு கூற்று அல்ல.

ஈராக்கில் உள்ள யூப்­ரடீஸ் நதி­யி­லி­ருந்து எகிப்தில் உள்ள நைல் நதி வரை பர­வி­யுள்ள, பிராந்­தி­யத்­திற்­கான ஒரு விவி­லிய விரி­வாக்க பார்வை மூல­மான தனது “அகண்ட இஸ்ரேல்” கோட்­பாட்டை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­வதில், கடந்த 27 மாதங்­க­ளாக இப்­ப­குதி முழு­வதும் இஸ்ரேல் ஏற்­ப­டுத்தி வரும் பேர­ழிவை அரபு தலை­வர்கள் கவ­னித்து வரு­கின்­றனர்.

இந்த தீய நோக்­கத்­திற்­காக இஸ்ரேல், அரபு நிலங்­களில் தனது சட்­ட­வி­ரோத ஆக்­கி­ர­மிப்பை கணி­ச­மாக விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. இஸ்ரேல் காஸாவில் இனப்­ப­டு­கொ­லை­களை நடத்­தி­யது மட்­டு­மல்­லாமல், பிராந்­தி­யத்தை கைப்­பற்­று­வ­தற்­கான தனது திட்­டங்­க­ளையும் சுட்­டிக்­காட்­டி­யது. அது மட்­டு­மன்றி மேற்குக் கரை சிரியா மற்றும் லெப­னா­னிலும் தனது பிடியை ஆழ­மாக்­கி­யுள்­ளது.

சுருக்­க­மாக கூறு­வ­தாயின் இஸ்­ரேலின் முழு­மை­யான பிராந்­திய மேலா­திக்­கத்தின் நோக்கம் ஒரு­போதும் தெளி­வாக இருந்­த­தில்லை.

மேலும் ஈரான் மீதான அமெ­ரிக்கத் தாக்­குதல் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பின் விரி­வாக்கம் மற்றும் அதன் பிராந்­திய சக்­தியின் விரி­வாக்கம் ஆகிய இரண்­டையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகை­யி­லேயே உள்­ளது.

இது ஈரான் மீதான அமெ­ரிக்­க-­இஸ்ரேல் தாக்­கு­த­லுக்கு தெரி­விக்­கப்­படும் அரபு எதிர்ப்­ப­லை­களின், மையத்தில் ஏற்­ப­டுத்த விளையும் கட்­ட­மைப்பு மாற்­ற­மாகும்.

பிராந்­திய பாது­காப்­பையும் மற்றும் பொரு­ளா­தார நலன்­க­ளையும் பாது­காக்க, வளை­குடா நாடுகள் மத்­தியில் ஸ்திரத்­தன்மை அவ­சியம். ஈரான் மீதான தாக்­குதல் மற்றும் அதற்கு எதி­ரான ஈரா­னிய பதி­லடி, என்­பன எண்ணெய் மற்றும் இயற்கை எரி­வாயு விலை­களில் எவ்­வித தாக்­கத்தை ஏற்­ப­டுத்தக் கூடும் என்­பது குறித்து அவர்கள் குறிப்­பாக கவலை அடைந்­துள்­ளனர்.

ஒரு­வேளை, ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தைத் தவிர, பெரும்பாலான அரபு ஆட்சிகள் இப்போது இஸ்ரேலை பிராந்தியத்தில் மிகவும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் சக்தியாகவே கருதுகின்றன.

இஸ்ரேலிய விரிவாக்கவாதம், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல், எல்லைகளைத் தாண்டி தாக்குதல் நடத்துவதற்கான அதன் விருப்பம், மற்றும் பிராந்திய மேலாதிக்கத்தை வெளிப்படையாகக் கடை பிடிப்பது என்பன அரபு தலைவர்கள் ஆபத்தை மதிப்பிடும் பொறிமுறையை அடிப்படையில் மாற்றி அமைத்துள்ளன.

அரபு தலைவர்கள் இப்போது தாங்கள் ஏற்கெனவே “அகண்ட இஸ்ரேலின்” பாதையில் வீழ்ந்திருக்கலாம், அல்லது அவர்கள் இஸ்ரேலின் அடுத்த இலக்காக இருக்கலாம் என்று அஞ்சுகின்றார்கள்.

இதில் பரிதாப நிலை என்னவென்றால் இஸ்ரேலிய போர்க்குணமும்-இஸ்ரேலின் வேண்டுதலின் பேரிலான அமெரிக்க போர்க்குணமும் இப்போது ஒரு பிளவுபட்ட பிராந்தியத்தை ஒன்றிணைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இது ஒன்றில் பொதுவான நலன்களின் அடிப்படையில் அல்லது குறைந்தபட்சம் ஒரு பொதுவான அச்சுறுத்தலின் அடிப்படையில் கூட அமையலாம்.

லத்தீப் பாரூக்

Share.
Leave A Reply

Exit mobile version