மத்­திய கிழக்குப் பகு­தியில் உரு­வாகும் அர­சியல் மற்றும் இரா­ணுவ பதற்­றங்கள் உலக பொரு­ளா­தா­ரத்தில் உட­னடி தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது வர­லாற்றில் பல­முறை நிரூ­பிக்­கப்­பட்டுள்­ளது.

குறிப்­பாக எண்ணெய் மற்றும் எரி­பொருள் விநி­யோ­கத்தில் அந்தப் பகுதி முக்­கிய பங்­காற்­று­வதால், அங்கு ஏற்­படும் எந்தப் போரும் உலக சந்­தை­களில் அதிர்வை ஏற்­ப­டுத்­து­கி­றது.

தற்­போது ஈரான் மீதான இஸ்ரேல் – அமெ­ரிக்­காவின் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து ஏற்­பட்ட போரின் கார­ண­மாக உல­க­ளவில் எண்ணெய் விலை வேக­மாக உயர்ந்­துள்­ளது.

உலகில் உற்­பத்­தி­யாகும் எண்­ணெயின் சுமார் இருபது சதவீதம், பாரசீக வளைகுடாவையும் ஓமான் குடாவையும் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை ஊடா­கவே கொண்டு செல்­லப்­ப­டு­வது வழக்கம்.

இந்நிலையில் ஈரான் போர் காரணமாக அந்தப் பாதையில் கப்பல் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்டுள்ளதால் உல­க­ளா­விய எண்ணெய் விநி­யோ­கத்தில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

போர் தொடங்­கிய சில நாட்­க­ளுக்குள் எண்ணெய் விலை வேக­மாக உயர்ந்­தது. ஒரு பீப்பாய் எண்­ணெயின் விலை சில சந்­தர்ப்­பங்­களில் நூறு அமெ­ரிக்க டொலர்­களைக் கடந்­தன.

இந்த உயர்வு உல­க­ளா­விய எரி­பொருள் விலை­யையும் நேர­டி­யாக பாதித்­துள்­ளது. உதா­ர­ண­மாக கம்போடியாவில் சுமார் 67 சதவீதத்தாலும் வியட்­நாமில் 49 சத­வீதத்தாலும் எரி­பொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வர­லாற்றில் ஒரு பீப்பாய் மசகு எண்­ணெய்க்­கான ஆகக்­கூ­டு­த­லான விலை 2008 ஜூலை மாதம் 147.27 டொலர்­க­ளாக பத­வி­யா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆசியாவில்….

உலக எண்ணெய் விநி­யோ­கத்தில் 20 சத­வீ­தம்தான் ஹோர்முஸ் நீரி­ணைக்கு ஊடாக கொண்­டு­செல்­லப்­ப­டு­வது வழக்கம்.

ஆனால், ஆசிய நாடு­களைப் பொறுத்­த­வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்­ப­டு­வதால் ஏற்­படும் பாதிப்பு மிக அதி­க­மாகும். கடந்த வருடம் ஹோர்முஸ் நீரி­ணைக்கு ஊடாக கொண்டு செல்­லப்­பட்ட எண்­ணெயில் 90 சத­வீதம் ஆசிய நாடு­க­ளுக்கே சென்­ற­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மலே­சியா, இந்­தோ­னே­ஷியா போன்­றவை எண்ணெய் வளம் கொண்ட நாடுகள். ஆனால், கடந்த பல வரு­டங்­களில் அவை தமது சொந்த எண்ணெய் உற்­பத்­தியை குறைத்­துக்­கொண்டு எண்­ணெய்யை ஏனைய நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதை அதி­க­ரித்­தி­ருந்­தன.

மத்­திய கிழக்கில் மாத்­தி­ர­மல்­லாமல், ரஷ்யா, வடஅமெ­ரிக்கா, வெனி­சு­வேலா, ஆபி­ரிக்க நாடுகள் என உலகின் பல்­வேறு பாகங்­க­ளிலும் எண்ணெய் வளம் உள்­ளன. ஆனால், எல்லா நாடு­க­ளிலும் உற்­பத்தி செய்­யப்­படும் மசகு எண்ணெய் ஒரே தன்­மை­யா­னவை அல்ல.

இதனால், மத்­திய கிழக்கு நாடு­களின் மசகு எண்­ணெயை சுத்­தி­க­ரிப்­ப­தற்­காக பல வேறு பல நாடு­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­களில் திடீ­ரென வேறு பிராந்­திய மசகு எண்­ணெய்யை சுத்­தி­க­ரிப்­பது கடினம். இதற்கு பெரும் செலவில் பல மாற்­றங்­களை செய்ய வேண்­டி­யி­ருக்கும் என நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் எரி­பொருள் செல­வி­லேயே மட்டும் முடி­வ­தில்லை. அதன் விளை­வுகள் உலக பொரு­ளா­தா­ரத்தின் பல துறை­களில் விரை­வாகப் பர­வு­கின்­றன.

விமானப் பயணச் செல­வுகள் அதி­க­ரிக்­கின்­றன. கப்பல் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்கள் உயர்­கின்­றன. தொழில்­துறை உற்­பத்தி செல­வுகள் கூடு­கின்­றன. இதனால் பொருட்­களின் விலையும் உயரத் தொடங்­கு­கி­றது. இறு­தியில் இது பண­வீக்­க­மாக மாறி உலக பொரு­ளா­தா­ரத்தை அழுத்­து­கி­றது.

எவ்வளவு காலத்துக்கு?

தற்­போது ஈரானில் தாக்­கு­வ­தற்கு எது­வுமே இல்லை நிலை கார­ண­மாக எந்த நேரத்­திலும் போர் நிறுத்­தப்­ப­டலாம் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கூறி­யுள்ளார்.

ஆனால், ஈரான் மீது தாக்­குதல் தொடுத்­த­தன்­றான அனைத்து நோக்­கங்­களும் நிறை­வேறும் வரை போர் நீடிக்கும் என இஸ்­ரே­லிய பாது­காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், நீண்­ட­கால போருக்கு தான் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும், மசகு எண்ணெய் பீப்பாய் 200 டொலர்கள் வரை அதி­க­ரிக்­கப்­ப­டு­வதை எதிர்­கொள்ள உலகம் தயா­ராக இருக்க வேண்டும் எனவும் ஈரான் எச்­ச­ரித்­துள்­ளது.

இந்தச் சூழ்­நி­லையில் எரிபொருள் விநியோகம் மாத்திரமல்லாமல் உணவுப் பாது­காப்பு கூட ஒரு புதிய கவ­லை­யாக உரு­வா­கி­யுள்­ளது. மேலும் உலகின் முக்­கிய உர உற்­பத்தி நாடுகள் சில இந்தப் போர் நடை­பெறும் பிராந்­தி­யத்­தி­லேயே இருப்­பதால் விவ­சாயச் செல­வு­களும் உய­ரக்­கூடும். இதன் விளை­வாக உல­க­ளவில் உணவு விலை­களும் அதி­க­ரிக்கும் அபாயம் உள்­ளது.

இந்த நெருக்­க­டியை சமா­ளிக்க உலக நாடுகள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. அவற்றில் முக்­கி­ய­மா­னது அவ­சர எண்ணெய் கையி­ருப்­பு­களை வெளி­யிடும் தீர்­மானம்.

பல நாடுகள் சந்­தையில் ஏற்­பட்­டுள்ள பற்­றாக்­கு­றையை சம­நி­லைப்­ப­டுத்­து­வ­தற்­காக மிகப்­பெ­ரிய அளவில் எண்ணெய் கையி­ருப்­பு­களை வெளி­யிட ஒப்­புக்­கொண்­டுள்­ளன. இது எண்ணெய் விலையை கட்­டுப்­ப­டுத்த உதவும் ஒரு தற்­கா­லிக முயற்­சி­யாக பார்க்­கப்­ப­டு­கி­றது.

மாற்றுத் தீர்வுகள்

அதே நேரத்தில் சில நாடுகள் மாற்று எண்ணெய் ஆதா­ரங்­களைத் தேடும் முயற்­சி­யிலும் ஈடு­பட்­டுள்­ளன. மத்­திய கிழக்கு எண்­ணெய்க்கு மாற்­றாக ரஷ்யா மற்றும் பிற பகு­தி­களில் இருந்து எண்ணெய் வாங்கும் முயற்­சிகள் அதி­க­ரித்­துள்­ளன. ரஷ்ய எரிபொருக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ளது.

அதேவேளை ஹோர்முஸ் நீரிணை வழி­யாக செல்லும் எண்ணெய் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்க கடற்­படை பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இது உலக எண்ணெய் விநி­யோ­கத்தை மீண்டும் சீர்­ப­டுத்த உதவும் முயற்­சி­யாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

மேலும் பல நாடுகள் உள்­நாட்டு அளவில் எரி­சக்தி சேமிப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் ஊக்­கு­விக்­கின்­றன. வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வதை ஊக்­கு­வித்தல், பொதுப் போக்­கு­வ­ரத்தை அதி­கப்­ப­டுத்­துதல், மின்­சார வாக­னங்­களைப் பயன்­ப­டுத்தும் திட்­டங்­களை விரி­வு­ப­டுத்­துதல் போன்ற நட­வ­டிக்­கைகள் மூலம் எரி­பொருள் பயன்­பாட்டை குறைக்க முயற்­சிக்­கின்­றன.

இந்த நெருக்­கடி குறிப்­பாக எரி­பொருள் இறக்­கு­ம­தியைப் பெரிதும் சார்ந்­துள்ள நாடு­க­ளுக்கு கடு­மை­யான சவா­லாக உள்­ளது. இலங்கை போன்ற நாடுகள் உலக சந்தை விலை­யி­லேயே எரி­பொருள் வாங்க வேண்­டிய நிலையில் உள்­ளதால் எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் உட­ன­டி­யாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் தெரியும். எனவே இத்­த­கைய நாடுகள் எரி­பொருள் கையி­ருப்பை முன்­கூட்­டியே உறுதி செய்தல் மற்றும் விநி­யோ­கத்தை திட்­ட­மி­டுதல் போன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

இலங்கை அர­சாங்கம் அனைத்து நாடு­க­ளு­டனும் நல்­லு­றவை பேணு­வதன் கார­ண­மாக எரி­பொ­ருட்­களை பெற்றுக் கொள்ள முயற்­றிக்­கி­றது. இந்­தியா, ரஷ்யா ஆகிய நாடு­க­ளு­டனும் இலங்கை அர­சாங்கம் இதற்­கான கோரிக்­கை­களை விடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படுவது அவசியம். அதேவேளை, தற்போதைய போர் உலக பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை உண்மையை மீண்டும் நினைவூட்டுகிறது. உலக எரிசக்தி அமைப்பு இன்னும் பெரும்பாலும் எண்ணெய் சார்ந்ததாகவே உள்ளது. குறிப்பாக சில முக்கிய கடல் பாதைகள் மற்றும் சில பிராந்தியங்கள் மீது அதிகமாக சார்ந்திருப்பது உலக பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக்கூடியதாக மாற்றுகிறது.

இந்த அனுபவம் உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய பாடமாக அமைய வேண்டும். எதிர்காலத்தில் எண்ணெய் சார்பை குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை விரிவுபடுத்துவது அவசியமானது. சூரிய ஆற்றல் மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, பெற்றோலிய எரிபொருளுக்கு பதிலாக மின்சாரத்தால் வாகனங்கள் போன்ற மாற்று தீர்வுகள் மீது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டியதும் அவசியம் என்பது உணரப்படுகிறது.

ஆர். சேது­ராமன்

 

Share.
Leave A Reply

Exit mobile version