சென்னை: 90 தொகுதிகள் + 2.5 வருடம் முதல்வர் பதவி தருகிறேன் என்று சொல்லி பேரம் பேசினார்கள்.

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் நாங்கள் டெல்லிக்கு அடிபணிய மாட்டோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

பாஜக தலைவர்கள் மட்டுமின்றி சிடிஆர் நிர்மல் குமாரும் பாஜக – தவெகவிடம் பேச்சுவார்த்தையே நடத்தவில்லை என்று கூறி வந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேசிய ஜனநயாக கூட்டணியில் இணைக்க பாஜக மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. விஜய்க்கு துணை முதல்வர் பதவி, 80 தொகுதிகள் வரை தர முன்வந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேசிய ஜனநயாக கூட்டணியில் இணைக்க பாஜக மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. விஜய்க்கு துணை முதல்வர் பதவி, 80 தொகுதிகள் வரை தர முன்வந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது.

வெளிப்படையாக பேசிய ஆதவ் அதேநேரத்தில் அவ்வளவு தொகுதியை ஒதுக்கினால் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் அதிமுக இதை விரும்பவில்லை எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படட்து.

இந்த நிலையில், பாஜக பேரம் பேசியதாக வெளியான தகவலை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இன்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா இது தொடர்பாக பேசியதாவது:- எனக்கு ஆஃபர் தேவையில்லை.. மக்களின் நம்பிக்கைதான் தேவை..

நாம் உருவாக்கும் அரசு மதசார்பற்ற அரசாக இருக்கும் என்று விஜய் கூறினார். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிபவர் கிடையாது.

முதல்வர் பதவி தருகிறோம் என பேரம் பேசினார்கள் 90 தொகுதிகள் + 2.5 வருடம் முதல்வர் பதவி தருகிறேன் என்று சொல்லி பேரம் பேசினார்கள்.

ஆனால் நாங்க டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்.. ஜனநாயகன் திரைப்படம் கூட வெளியாகவில்லை. ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாமல் இருப்பதற்கு அரசியல் தான் காரணம்.. பராசக்தி படம் வெளியாகிறது. டெல்லியில் சந்திக்கிறார்கள் அவர்கள் படம் வெளியாகின்றது. ஆனால் எங்கள் படம் வெளியாகவில்லை.

திமுகவை சொல்ல சொல்லுங்கள் பாஜக எங்களுக்கு கொள்கை எதிரி என்று.. சொல்ல மாட்டார்கள்.

ஏற்கனவே கூட்டணி வைத்தவர்கள்.. நாளைக்கும் கூட்டணி வைக்க தயங்கமாட்டார்கள்.. கொள்கை எதிரி, பாஜகவோடு நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்று திமுக சொல்லுமா.. ஆனால் நாங்கள் முதலிலேயே கொள்கை எதிரி பாஜக என அறிவித்துவிட்டு தேர்தலை சந்திக்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.

நிர்மல் குமார் ட்வீட்

சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரமாக தவெகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அப்போதெல்லாம் மவுனம் காத்த தவெக தற்போது பேரம் பேசியதாக சொல்லியிருக்கிறது.

தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொல்லியிருந்தார்.

சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

திமுக பரப்பியதாக குற்றச்சாட்டு

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! என்று கூறியிருந்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version