லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இரண்டு இஸ்ரேலிய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் 24 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவை முதல்கட்டமான தரவுகள் என்றும் டி.என்.ஏ பரிசோதனைகளுக்குப் பிறகு உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
மத்திய ஜுகாக் அல்-ப்ளாட் பகுதியில், அரசாங்க தலைமையிடம் மற்றும் பல தூதரகங்களுக்கு அருகே உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்குதலுக்கு உள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
ஏஎஃப்பி செய்தி முகமையின்படி, இரண்டாவது தாக்குதல் மத்திய பஸ்டாவில் நிகழ்ந்துள்ளது. இங்கு பல்வேறு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன.