மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம் பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.
அல்வாய் மனோகரா பகுதி யைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் விஸ்வேதிகாவின் கணவரும் சட்டத்தரணியு மான 40 வயதுடைய சி வராசா நிகாசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியி டம் கூற, மனைவி இஞ்சி போட்டு தேநீர் வழங்கி உள்ளார்.
பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடி யாக நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு மேலதிக சி கிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை யில் மாற்றப்பட்ட நிலை யில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த இளவயது மரணம் அப்பகு தியையே பெரும் சோகத் தில் ஆழ்த்தியுள்ளது.

