போர் என்­பது, தனியே படைகள் மோதிக் கொள்­ளு­கின்ற களங்­களைக் கொண்­டது மாத்­தி­ர­மல்ல. உண்­மையும், பொய்­களும் மோது­கின்ற பிர­சாரப் போர்­க­ளையும் கொண்­டது தான்.

போரில் வெல்­வ­தற்கு, பிர­சார போரும் அவ­சியம். போருக்­கான அவ­சி­யத்தை, அதன் நியா­யப்­பாட்டை வெளிப்­ப­டுத்தி, போருக்கு தேவை­யான ஆள­ணியை திரட்­டு­வ­தற்கும், ஆயு­தங்­களை பெறு­வ­தற்கும், பிர­சாரம் முக்­கியம்.

பிர­சாரப் போரில் தோல்­வி­ய­டைந்த தரப்­பு­களால், போர் முனையில் வெற்றி பெறு­வது கடினம்.

ஹிட்லர்

இரண்டாம் உலகப் போரில் ஹிட்­லரின் எழுச்­சிக்கும் வெற்­றிக்கும் முக்­கி­ய­மான கார­ண­மாக இருந்­தது அவ­ரது பிர­சாரம்.

தீவிர வல­து­சாரி கொள்­கையை ஹிட்லர் மிகத்­தீ­வி­ர­மாக பிர­சா­ரப்­ப­டுத்­தினார். அவ­ரது பேச்சு வன்­மையும் பிர­சா­ரங்­களும் ஜேர்­ம­னி­யர்­களை, யூத எதிர்ப்­பா­ளர்­க­ளாக மாற்­றின. அவர்கள் பிற நாடு­களின் மீது போர் தொடுக்­கவும் அந்தப் போர்­களில் வெற்றி பெறவும் வழி வகுத்­தன.

அப்­போது, ஹிட்­லரின் பிர­சாரப் பீரங்­கி­யாக இருந்­தவர் ஜோசப் கோயபெல்ஸ்.

அவர் போர் தொடர்­பாக நிறைய பொய்­களை அவிழ்த்து விட்­டி­ருந்தார். அவ­ரது பிர­சாரம் போர்­மு­னையில் நாசிப் படை­க­ளுக்கு சாத­க­மான சூழலை ஏற்­ப­டுத்­தி­யது.

இறுதி வெற்றி கிடைக்­கா­விட்­டாலும் இரண்டாம் உல­கப்­போரில், ஹிட்­லரின் படைகள் தீர்க்­க­மான வெற்­றிகள் பல­வற்றை பெறு­வ­தற்கு அந்தப் பிர­சார போர் உத­வி­யது என்­பது மறுக்க முடி­யாத உண்மை. எல்லா போர்­க­ளி­லுமே, பிர­சா­ரத்தை மையப்­ப­டுத்தி இன்­னொரு போர்­முனை திறக்­கப்­ப­டு­வது வழமை.

இலங்­கை­யிலும் இந்தப் பிர­சாரப் போர் பல­முறை, பல வழி­களில், பல தரப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆரம்பக் காலகட்­டங்­களில் இலங்கை அர­சாங்­கத்­திடம் ஒரு பிர­சார இயந்­திரம் காணப்­பட்­டது.

அது எப்­போதும் தமி­ழர்­களை தீவி­ர­வா­தி­க­ளா­கவும், தமி­ழரின் போராட்­டத்தை பயங்­க­ர­வாதப் போராட்­ட­மா­க­வுமே அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது.

பின்னர் இந்­தியத் தலை­யீடு ஏற்­பட்ட போதும், கூட இவ்­வா­றான பிர­சார போர் தமி­ழர்கள் மீது முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

அதற்குப் பின்னர் இலங்கை இரா­ணு­வத்­திற்குள் பிர­சாரப் போரை மேற்­கொள்­வ­தற்­காக தனி­யான பிரி­வுகள், துணை இரா­ணுவ பிரி­வுகள் என்று உரு­வாக்­கப்­பட்­டன.

ஒரு கால­கட்­டத்தில் வானொலி, தொலைக்­காட்சி, பத்­தி­ரி­கை­க­ளுக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பிர­சாரப் போர், பின்னர் ஒரு கட்­டத்தில் இணைய ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும், பர­வி­யது.

இதனை எதிர்ப்­ப­தற்கு தமிழர் தரப்­பிலும், பிர­சார போர்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அதற்­காக வானொலி, தொலைக்­காட்சி , இணை­யங்கள் மாத்­தி­ர­மன்றி, தெரு­வழி நாட­கங்­களும் கூட பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

இன்­றைய நவீன உலகில் பிர­சாரப் போர் இன்னும் முக்­கி­ய­மா­னது. பிர­சார போர்­களில், வலிமை பெறு­கின்­றவர், போர் முனை­யிலும் வலிமை வாய்ந்­த­வ­ராக கரு­தப்­படும் வாய்ப்பு உள்­ளது.

ஈரான் மீதான போர் தொடங்­கிய போது, அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் மிகப்­பெ­ரிய நம்­பிக்­கையை வைத்­தி­ருந்­தன.

முதல் குண்­டி­லேயே ஈரானின் உயர்­தலைவர் ஆயத்­துல்லா அலி கமேனி படு­கொலை செய்­யப்­பட்டார். அவ­ருடன் உயர் தலை­வர்கள் பலரும் கொல்­லப்­பட்­டனர். அத்­துடன் சில தாக்­கு­தல்­களை நடத்­தினால் போதும், ஈரானில் ஆட்சி மாற்றம் வந்து விடும் என்ற நம்­பிக்கை இஸ்ரேல் மற்றும் அமெ­ரிக்­கா­விடம் காணப்­பட்­டது.

அதற்கு முன்னர், ஈரானில் மக்கள் கிளர்ச்சி செய்­கி­றார்கள், அதை நசுக்­கு­வ­தற்கு பெரு­மெ­டுப்பில் ஈரா­னிய ஆட்­சி­யா­ளர்கள் மக்­களை கொல்­லு­கி­றார்கள் என்ற பிர­சாரம் உல­க­ளவில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அதில் அமெ­ரிக்கா மற்றும் இஸ்ரேல் மட்டும் அதில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. தங்­களை நடு­நி­லை­யா­ளர்­க­ளாக காட்டிக் கொண்ட நாடுகள், அமைப்­புகள் கூட அந்த பிர­சாரப் போரில் ஒரு தரப்­பாக இணைந்­தி­ருந்­தன.

ஈரானில் நடந்த மக்கள் கிளர்ச்சி தொடர்­பான முற்­றிலும் உண்­மை­யான தக­வல்கள் கிடை­யாது. ஆனால், எல்­லோரும் அந்தப் பிர­சாரப் போரில் பங்­கா­ளி­க­ளாக மாறி­யி­ருந்­தனர்.

இதே­போன்ற பிர­சாரப் போர் அனு­ப­வங்கள் இங்­குள்ள தமி­ழர்­க­ளுக்கும் தாரா­ள­மா­கவே உள்­ளது.

அதனால், ஈரான் விட­யத்தில் இது எந்­த­ளவு மோச­மாக கையா­ளப்­பட்­டி­ருக்கும் என்று புரிந்து கொள்­வது கடி­ன­மா­ன­தல்ல.

ஈரானில் 15,000 பேருக்கு மேல் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தால், கிளர்ச்சி மோச­மாக அடக்­கப்­பட்­டி­ருந்தால், இந்­த­ளவு தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்­னரும் அங்­குள்ள மக்கள் ஆட்சி மாற்­றத்தை தூண்­டாமல் இருந்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

இஸ்­ரேலும், அமெ­ரிக்­காவும் அப்­ப­டி­யான நம்­பிக்­கையில் இருந்­தன. அதனால் தான் இன்றோ நாளையோ ஆட்சி மாற்றம் நடக்கப் போகி­றது என்று ஆரம்­பத்தில் கதை சொல்லிக் கொண்­டி­ருந்­தார்கள்.

அந்தப் பிர­சாரப் போர் இப்­போது முடி­வுக்கு வந்­து­விட்­டது.

இப்­போது களைத்து போய் ஈரா­னிய மக்கள் தாங்­க­ளாக கிளர்ந்­தெ­ழுந்து ஆட்­சியை மாற்­றினால் சரி என்ற நிலைக்கு வந்­தி­ருக்­கி­றார்கள்.

இது ஆட்சி மாற்றம் என்­பது இல­கு­வா­னது அல்ல என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இது அவர்­களின் முதல் தோல்வி.

பிர­சாரப் போரில் அடைந்­தி­ருக்­கின்ற பெருந்­தோல்­வி­யா­னது அமெ­ரிக்க- – இஸ்ரேல் பிர­சாரப் போர், ஈரா­னி­யர்­களை பல­வீ­னப்­ப­டுத்­த­வில்லை என்­பது உணர்த்­து­கி­றது. இப்­போது அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும், கூறு­வதை நம்­பு­கின்ற நிலையில் உலகம் இல்லை.

ஈரான் தொடர்­பாக அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் கூறு­கின்ற செய்­திகள் அனைத்தும் உண்மை அல்ல என்ற கருத்து அவர்­க­ளிடம் இருக்­கி­றது.

இது இந்தப் பிர­சாரப் போரின் தோல்­வியின் விளைவு.

இப்­போது நிலைமை மாறி­யி­ருக்­கி­றது, ஈரான் பிர­சாரப் போரில் முன்­னேறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

ஆரம்­பத்தில் ஈரா­னிய தலை­வர்கள் கொல்­லப்­பட்டு விட்­ட­தாக இஸ்ரேல் சொல்­வதை மட்டும் கேட்டுக் கொண்­டி­ருந்­த­வர்கள், இப்­போது ஈரான் சொல்­வ­தையும் கேட்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இஸ்­ரே­லிய பிர­த­மரின் அலு­வ­ல­கத்தை தாக்­கினோம், அவர் கொல்­லப்­பட்டு விட்டார், அவர் இருக்­கி­றாரா இல்­லையா என்று தெரி­ய­வில்லை என்­பது போல ஈரான் நடத்­திய பிர­சாரப் போர், அதி­க­ளவில் கவ­னத்தை ஈர்த்­தது.

இது ஈரா­னிய மக்­க­ளுக்கு ஊக்­கத்தை கொடுக்­கி­றதோ இல்­லையோ – இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு உளைச்­சலை- தொந்­த­ரவை கொடுக்­கி­றது. அமெ­ரிக்­கா­வுக்கும் கூட அதே­உ­ளைச்­சலை ஏற்­ப­டுத்­து­கி­றது.

அண்­மையில் நடந்த சில விட­யங்கள் இதனை உறுதி செய்­வ­தாக உள்­ளன.

இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாஹு கொல்­லப்­பட்டு விட்டார் என்று ஈரான் செய்த பிர­சாரப் போரை முறி­ய­டிப்­ப­தற்­காக அவர் வெளியே வர நேரிட்­டது.

ஒரு கோப்பி கடைக்குச் சென்று கோப்பி குடித்துக் கொண்டு வீடி­யோவை வெளி­யிட நேரிட்­டது.

ஆனாலும் அதுவும் , செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பத்தால் தயா­ரிக்­கப்­பட்­டது என்ற சர்ச்­சையும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்த பிர­சாரப் போரில் ஈரான் வெற்றி பெற்­றி­ருக்­கி­றது.

ஈரானின் இழுப்­புக்கு ஏற்ப, நெதன்­யாஹு நகரத் தொடங்­கி­யி­ருக்­கிறார்.

தங்­களை நோக்­கியே மற்­றவர் வர­வேண்டும் என உறு­தி­யாக நின்­றவர், இப்­போது ஈரானின் இழுப்­பிற்கு ஏற்ப இழு­பட்டுச் செல்­கிறார்.

ஈரானின் பிர­சாரப் போரை முறி­ய­டிக்க அவர் வீடி­யோவில் நடிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது, தனது இடத்தில் இருந்து வெளியே வர வேண்­டி­யி­ருக்­கி­றது.

இது இஸ்­ரேலின் இயல்பு அல்ல, யூதர்­களின் பொது­வான பண்பு அல்ல.

யூதர்கள் வித்­தி­யா­ச­மா­ன­வர்கள் என்­பது உல­கத்­துக்கு தெரியும், ஆனால் இப்­போது அந்த நிலையில் இல்லை என்­பதை நெதன்­யா­ஹுவின் நிதான இழப்பு எடுத்துக் காட்­டு­கி­றது.

இந்தப் போரில் பல விட­யங்கள் மறைக்­கப்­ப­டு­கின்­றன, மறுக்­கப்­ப­டு­கின்­றன. இதற்கு அமெ­ரிக்­காவும் விதி­வி­லக்­கல்ல.

தனது உயர்­த­லை­வர்கள் கொல்­லப்­பட்­டதை ஈரான் மறைக்­க­வில்லை.

அது தனக்கு மிகப்­பெ­ரிய பல­வீனம் என்ற போதும் உண்­மையை வெளிப்­ப­டுத்த ஈரான் தயங்­க­வில்லை.

ஆனால், இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் இன்னும் பல இழப்­பு­களை- உண்­மை­களை வெளிப்­ப­டுத்த தயங்­கு­கி­ன்றன. வெளிப்­ப­டுத்­தாமல் மறைக்­கி­ன்றன. இதி­லி­ருந்து பல­வீ­ன­மா­ன­வர்கள் யார் என்­பதை புரிந்து கொள்­வது கடினம் அல்ல.

இப்­போது அரபு நாடு­களின் மீது ஈரான் நடத்­து­கின்ற தாக்­கு­தல்கள் தொடர்­பான வீடி­யோக்கள் படங்­களை பகிர்­கின்­ற­வர்கள் கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள். இது இன்­னொரு அச்­சத்தின் வெளிப்­பாடு.

ஈரானின் பலம் பற்றி, அர­பு­நா­டு­களில் உள்ள மக்கள் மத்­தியில் எழு­கின்ற உணர்­வு­களை அடக்­கு­கின்ற முயற்சி.

ஈரான் தொடர்­பாக அவர்கள் மிகை­யான கற்­பனை செய்யக் கூடாது, ஈரா­னுக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளாக மாறி­வி­டக்­கூ­டாது, தமது நாடு­களில் கிளர்ச்சி உரு­வாகி விடக்­கூ­டாது என்ற அச்­சத்தில் தான் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இது அமெ­ரிக்­காவின் ஏற்­பாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் ஒரு நட­வ­டிக்கை.

ஈரானின் பிர­சாரப் போர் வலைக்குள் அவர்கள் சிக்­கி­யி­ருக்­கி­றார்கள். ஈரான் மீதான போர் நியா­ய­மற்­றது என இத்­தாலி அண்­மையில் விலகிக் கொண்­டது.

அந்த அறி­விப்பை இத்­தா­லிய பிர­தமர் வெளி­யிட்ட சில மணி நேரத்­திற்குள் இத்­தாலிய படை­யினர் நிலை­கொண்­டி­ருந்த தளம் தாக்­கப்­பட்­டது. அங்­கி­ருந்து இத்­தா­லியின் ஆளில்லா விமானம் சேத­மா­னது.

இது இத்­தா­லியை போருக்குள் இழுப்­ப­தற்­காக அமெ­ரிக்கா மேற்­கொண்ட சதி என்றும், இதே­போல நட்­பு­நா­டு­களின் மீது அமெ­ரிக்­காவே ட்ரோன்­களை ஏவு­கி­றது என்றும் ஈரான் குற்­றம்­சாட்­டி­யது.

இதனை மறுத்து அமெ­ரிக்கா தனி­யான அறிக்­கை­களை வெளி­யிட நேரிட்­டது.

அமெ­ரிக்கா இந்த போரில் பல அழுக்­கான தந்­தி­ரங்­களைப் பின்­பற்­று­கி­றதா என்ற சந்­தேகம் நட்பு நாடு­க­ளிடம் ஏற்­பட்­டுள்­ளது. இதுவும், பிரசாரப் போரில் அமெரிக்க – இஸ்ரேல் தரப்பு அடைந்து வரும் பின்னடைவை காட்டுகிறது.

போரில் ஈரான் பேரழிவை சந்திக்கிறது, என்பது உண்மை. ஆயிரக்கணக்கான இலக்குகள் தாக்கப் படுகின்றன, அவற்றின் விளைவுகள் சாதாரணமானவையாக இருக்காது. பில்லியன் கணக்கான டொலர்களை அது இழக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள அந்த நாடு சிதைக்கப்படுகிறது. ஆனாலும் பிரசாரப் போரில் அமெரிக்காவினால் ஈரானை தோற்கடிக்க முடியவில்லை. ஈழப் போரின் போதும் இது நடந்தது.

விடுதலைப் புலிகள் தொடர்பான பிரசாரப் போரின் போது, புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என பலமுறை கூறப்பட்டது.

அந்தப் பிரசார போரில் அரச தரப்பு அடைந்த தோல்விதான், கடைசியில் பிரபாகரன் உண்மையாகவே இறந்த போது, அதனை பலரால் நம்ப முடியாதிருந்தமையாகும்.

பிரசாரப் போர் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே அதில் வெற்றி பெற முடியும்.

வெறும் பொய்களால் மாத்திரம் முன்னெடுக்கப்படும் பிரசாரப் போர்களால் வெற்றிபெற முடியாது என்பதை ஈரான் போரும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

-ஹரிகரன்-

Share.
Leave A Reply

Exit mobile version