இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில், சுவிற்சர்லாந்து நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) மற்றும் சிவாஸ்கரன் சுகந்தி (47) ஆகியோர் அடங்குகின்றனர்.

தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கி நாட்டில் கொண்டாடிய பின்னர், மீண்டும் சுவிற்சர்லாந்திற்கு திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் டாக்ஸி வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version