வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல் மூலமாக போர் நடத்தி வருகின்றன. இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் ராணுவ படைகள் ஈரானுக்குள் நுழைந்து தரைவழி போரை தொடங்குகிறதா? என்ற கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்கி வருகிறது.

அதேபோல் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் மத்திய கிழக்கு முழுவதுமே பதற்றத்துடன் உள்ளது.

கடுமையாக நடக்கும் போர்

தற்போதைய இந்த போரில் அனைத்து நாடுகளுமே ஏவுகணைகள், விமானங்கள், ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.

மாறாக ராணுவ வீரர்கள் இன்னொரு நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தவில்லை. வான்வெளி தாக்குதல் அடிப்படையில் தான் போர் தொடர்ந்து வருகிறது.

டிரம்ப் சொன்ன பதில்

இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பிடம் இன்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஈரானுக்குள் அமெரிக்க படைகளை இறக்கி தரைவழி தாக்குதல் வகையிலான போரை முன்னெடுப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு டொனால்ட் டிரம்ப், ”அமெரிக்காவின் ராணுவத்தை ஈரானுக்கு இப்போது அனுப்புவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.

ஏனென்றால் ஈரான் இப்போதே அனைத்தையும் இழந்விட்டது. அந்த நாட்டின் ராணுவம் பலவீனமடைந்துள்ளது. அவர்கள் தங்களின் கடற்படையை இழந்துவிட்டார்கள். அவர்கள் இழக்க கூடாது என நினைத்த அனைத்தையும் இழந்துவிட்டனர்” என்றார்.

ஈரான் தந்த வார்னிங்

முன்னதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதுபற்றி கருத்து தெரிவித்து இருந்தார்.

இதுபற்றி அவர்,, ”அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவம் தரைவழி போரை முன்னெடுத்தால் அந்த நாட்டின் படை வீரர்கள் பேரிழிவை சந்திப்பார்கள்” என்று வார்னிங் செய்திருந்தார்.

இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பும் அமெரிக்கா ராணுவம் ஈரானுக்குள் தரைவழி தாக்குதலை நடத்தாது என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் நிலைப்பாடு என்ன?

முன்னதாக இஸ்ரேலும், ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்படாது என்று அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து இருந்தார்.

தற்போது டொனால்ட் டிரம்பும் அமெரிக்கா ராணுவம் ஈரானுக்குள் இறங்காது என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இது தற்போதை போரில் கொஞ்சம் ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஈரானுக்குள் அமெரிக்கா,

இஸ்ரேல் ராணுவம் இறங்கினால் அது நீண்ட கால போராக வெடிக்கும். இது ஈரானுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்கும். அதுமட்டுமின்றி உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம் உள்பட பல வர்த்தகம் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version