வாஷிங்டன்: பைத்தியக்கார பயல்களாக நீங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் செவ்வாய்க்கிழமையில் நரகத்தில் வாழ வேண்டிய சூழல் வரும். அல்லாவிடம் வேண்டி கொள்ளுங்கள் என்று ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காட்டமான கெட்டவார்த்தையில் அவர் ஈரானை சாடி உள்ளார். இந்த எச்சரிக்கையின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் உரிய வகையில் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது.
இதுதான் தற்போது மொத்த உலக நாடுகளுக்கும் பிரச்சனையாக மாறி உள்ளது. ஏனென்றால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வர்த்தகத்தில் 20 சதவீதம் வரை நடக்கும்.
தற்போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளதாக பல நாடுகள் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டை நோக்கி செல்கின்றன.
பணியாத ஈரான் அதுமட்டுமின்றி அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது மட்டுமின்றி, வர்த்தகத்தையும் முடக்கி வைத்துள்ளது.
இது டிரம்புக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார். ஆனால் ஈரான் பணியவில்லை
டிரம்ப் பகீர் மிரட்டல்
இந்நிலையில் தான் இன்று ஈரானுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் ”செவ்வாய்க்கிழமை என்பது பவர் பிளாண்ட் டே மற்றும் பாலங்களுக்கான நாள். ஈரானில் உள்ள அனைத்தும் முடித்து வைக்கப்பட உள்ளது.
இனி இதுபோல் எதுவும் நடக்காது. பைத்தியக்கார பயல்களா நீங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் அல்லது நரகத்தில் வாழ வேண்டிய சூழல் வரும். பொறுத்திருந்து பாருங்கள். அல்லாவிடம் வேண்டி கொள்ளுங்கள்” என்று வார்னிங் செய்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் காட்டமாக கெட்டவார்த்தையையும் அவர் பதிவிட்டுள்ளார்.
எச்சரிக்கையின் பின்னணி
இந்த வார்னிங்கின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்களை தாக்கி அழிப்போம் என்று ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார்.
அதன்பிறகு அந்த தாக்குதலை தள்ளிப்போட்டார். ஈரானுக்கு 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இந்த 10 நாட்களுக்கும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். டிரம்ப் விதித்த கெடு நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது.
டிரம்ப் கையில் பெரிய பிளான்
இன்னும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து நாடுகளுக்கும் திறந்து விடவில்லை. இந்தியா, சீனா உள்பட நெருங்கிய நட்பு நாடுகளுக்கு செல்லும் கப்பல்களை மட்டுமே அனுமதித்து வருகிறது.
அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் ஈரான் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் வார்னிங் செய்துள்ளார்.
இதனால் ஈரானுக்கு எதிராக டிரம்ப் பெரிய பிளானை கையில் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் தீவிரமாகி உள்ளது.

