சென்னை: பரபரப்பான தமிழகத் தேர்தல் களத்தில் இன்று தனது பரப்புரையை தொடங்குகிறார் அண்ணாமலை. கோவை வடக்குத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனை ஆதரித்து இன்று மாலையில் பிரச்சாரம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

தமிழக பாஜக-வை தன் தோளில் சுமந்து, “என் மண், என் மக்கள்” என பட்டிதொட்டியெங்கும் தாமரையை கொண்டு சேர்த்த அண்ணாமலையின் பெயர், கடந்த வெள்ளி அன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் ‘மிஸ்ஸிங்’. இது தற்செயலானது அல்ல… திட்டமிட்டு நடத்தப்பட்ட ‘சைடுலைனிங்’ (Sidelining) என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!

யார் இந்த வேட்பாளர்கள்?

பாஜக வேட்பாளர் சற்று நிமிடங்களுக்கு முன் வெளியானது. பட்டியலை உற்று நோக்கினால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

அண்ணாமலையின் ‘அக்ரசிவ்’ அரசியலை விட, எடப்பாடியின் ‘குட் புக்’கில் இருப்பவர்களுக்கே இந்த முறை அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

வானதி சீனிவாசன்: கடந்த சில மாதங்களாகவே அதிமுகவை பாராட்டி வந்த வானதிக்கு, அவர் கேட்ட கோயம்புத்தூர் (வடக்கு) கிடைத்துவிட்டது.

தமிழிசை: கவர்னர் பதவியை உதறிவிட்டு வந்தவருக்கு மைலாப்பூர் ‘மயில்’வாகனம் ஏறிவிட்டது.

.” எல். முருகன்: டெல்லியில் செல்வாக்கு இருந்தாலும், எடப்பாடியுடன் இணக்கமான போக்கை கடைபிடித்ததால் அவிநாசி (தனி) தொகுதி ‘கன்பார்ம்’.

இவர்கள் தவிர, நயினார் நாகேந்திரன் (சாத்தூர்), எம்.ஆர். காந்தி (நாகர்கோவில்) மற்றும் காங்கிரஸில் இருந்து குதித்த விஜயதரணி (விளவங்கோடு) என பெரும்பாலான ‘சீனியர்’ முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் எல்லாம் எடப்பாடி குட் புக்கில் இருப்பவர்கள். பாஜக வேட்பாளர்

லிஸ்ட் வெள்ளிக்கிழமை வெளியான பாஜக வேட்பாளர் லிஸ்ட் பின்வருமாறு

வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!”

ஆவடி: எம். ராஜசிம்ம மஹிந்திரா (எம். அஸ்வின்குமார்)

மயிலாப்பூர்: (டாக்டர்) தமிழிசை சவுந்தரராஜன்

தளி: டாக்டர் நாகேஷ் குமார்

திருவண்ணாமலை: சி. ஏழுமலை

ராசிபுரம் (SC): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்

உதகமண்டலம்: போஜராஜன்

அவினாசி (SC): டாக்டர் எல்.

முருகன் திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (SC): சி. உதயகுமார்

புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர்: கே.சி. திருமாறன்

மானாமதுரை (SC): பொன். வி. பாலகணபதி

மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வாசு

தேவநல்லூர் (SC): அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி

குளச்சல்: டி. சிவகுமார்

பத்மநாபபுரம்: பி. ரமேஷ்

விளவங்கோடு: எஸ். விஜயதரணி

அண்ணாமலை – வளர்த்த கடாவா?

தமிழகத்தில் பாஜக-வை ஒரு மாற்று சக்தியாக மாற்ற அண்ணாமலை எடுத்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனால், இன்று நிலைமை தலைகீழ். அண்ணாமலையின் தீவிரமான போக்கால் அதிமுக-வுடனான உறவு விரிசலடைந்ததாக ஒரு தரப்பு குற்றம் சாட்டியது.

இப்போது கூட்டணி என்று வரும்போது, “அண்ணாமலை இருந்தால் வேலைக்கு ஆகாது” என எடப்பாடி போட்ட ‘கண்டிஷன்’தான் அவரை ஓரங்கட்டக் காரணம் என கிசுகிசுக்கிறது அரசியல் வட்டாரம்.

பூத் ஏஜென்ட் – தியாகமா? தந்திரமா?

“நான் பூத் ஏஜென்டாக இருப்பேன்” என அண்ணாமலை சொல்வது, ஒரு காயம்பட்ட நபரின் சோக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தனக்கு சீட் தராததை ‘தியாகம்’ போல காட்டி, தொண்டர்களின் அனுதாபத்தைப் பெற அவர் எடுக்கும் கடைசி அஸ்திரம் இது என்கிறார்கள்.

இந்த ‘எடப்பாடி-ஃப்ரெண்ட்லி’ வேட்பாளர் பட்டியல் கமலாலயத்தின் எதிர்காலத்தை மாற்றப்போகிறதா அல்லது அண்ணாமலை என்ற பிம்பத்தை உடைக்க போகிறதா? மே 4-ம் தேதி தெரியும்!

 

Share.
Leave A Reply

Exit mobile version