“சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர்.

இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 23- ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும், காவலர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை கடந்த 30-ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதா், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 9 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவா்களுக்கு மன நலன், உடல் நலம் குறித்து பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன.இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version