ஈரானில் மேலும் பல தளங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவிக்கும் நிலையில் பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (US CENTCOM) தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் குறியீட்டுப் பெயரான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Epic Fury )குறித்த சமீபத்திய தகவல்களின் படி, 155-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் அல்லது அழித்துள்ளதாகவும் அது கூறுகிறது.
தாக்கப்பட்ட இலக்குகளில் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) தலைமையகம், வான் பாதுகாப்பு அமைப்புகள், பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள், மற்றும் ஈரானியக் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை அடங்கும் என்று சென்ட்காம் கூறுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் 3,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 1,665 பேர் பொதுமக்கள் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானிய பொதுமக்கள் மீதான தாக்கம் குறித்து மற்றொரு பதிவை விரைவில் வெளியிடுவோம்.

