நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிகளின் மகளும், நடிகையுமான வனிதா தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு வெளியான ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்திருந்தார்.
இதை தொடர்ந்து ஜோவிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் கடந்தசில மாதங்களாக வெளியாகி வந்தது.
ஏற்கனவே இதற்கான பேச்சுவார்த்தையில் அவரது தாயாரான வனிதா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் ஜோவிகா.
ஜோவிகா. தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது முதல் திரைப்படம் அதுவும் தெலுங்கில். எம்.எஸ்.ராஜுவுடன் நேரடியாக பணியாற்றுவது நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றும் ஒரு அனுபவமாகும்.
குறிப்பாக தேவி, வர்ஷம் ஒக்கடு உள்பட இன்னும் பல படங்களை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப பார்த்து வளர்ந்தவள் நான். எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். என்னை நீங்கள் நம்பி என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்

