வெலிகம, பழைய கடை (Parana Kade) மீரா சாஹிப் தர்ஹாவின் தலைமை மௌலவி நாஜிஹ், வீதியில் பேருந்துக்காக காத்திருந்த பௌத்த தேரர் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

புத்தாண்டு விடுமுறைக்காக தனது சொந்த ஊரான வெலிகம, முனமல்பெ (Munamalpe) பகுதிக்கு வருகை தந்திருந்த குறித்த தேரர், மீண்டும் வெலிகம நகருக்குச் செல்வதற்காக பேருந்து ஒன்றை எதிர்பார்த்து கொலேதண்ட (Koledanda) பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்துள்ளார்.

இதனை அவதானித்த மௌலவி நாஜிஹ், உடனடியாக செயல்பட்டு தேரரை தனது மோட்டார் சைக்கிளில், வெலிகம நகருக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதியை மனிதாபிமானத்துடன் செய்து கொடுத்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version