2026 பிப்ரவரி மாதம் நடந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று இந்தியாவையே உலுக்கியுள்ளது. குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும் வகையிலான இந்தத் துயரச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் முழுமையான விவரங்கள் வருமாறு:

பின்னணி:

58 வயதுடைய அப்பாஸ் அலி என்பவரது மகன் சல்மான் அலி (28). சல்மானுக்கு மஸ்காரா (Muskara) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் சல்மானுக்கு மஸ்காராவின் நவீன உடை மற்றும் கலாசாரம் பிடிக்கவில்லை என்றாலும், தந்தை அப்பாஸ் அலியின் வற்புறுத்தலினால் இத்திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

குடும்பத்தில் பண நெருக்கடி ஏற்பட்டதைக் காரணம் காட்டி, அப்பாஸ் அலி தனது மகனை வெளியூர் வேலைக்கு அனுப்பி வைத்தார். இதன் பின்னணியில் மருமகள் மீது அவருக்கு இருந்த தவறான எண்ணமே காரணம் என்பது பின்னரான விசாரணையில் தெரியவந்தது. மகன் வெளியூர் சென்ற பிறகு, வீட்டில் மாமனார், மருமகள் மற்றும் ஒரு வயதுக் குழந்தை மட்டுமே வசித்து வந்தனர்.

கொலை நடந்த இரவு (பிப்ரவரி 11, 2026):

பிப்ரவரி 11 இரவு, மஸ்காரா தனது அறையைப் பூட்டிக்கொண்டு குழந்தையுடன் உறங்கச் சென்றார். அடுத்த நாள் காலை கதவைத் தட்டியும் பதிலளிக்காததால், ஊர்மக்களின் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது மஸ்காரா சடலமாகக் கிடந்துள்ளார்.

உடலில் வெளிப்படையான காயங்கள் இல்லாததாலும், அறை உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததாலும் இது ஒரு இயற்கையான மரணம் என்றே அனைவரும் கருதினர்.

புதிர் விலகிய போஸ்ட்மார்ட்டம் அறிக்கை:

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மஸ்காரா கழுத்து நெறிக்கப்பட்டு (Strangulation) கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அறை உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்கையில் கொலை நடந்தது எப்படி என்பது பொலிஸாருக்குப் பெரும் புதிராக இருந்தது.

மஸ்காராவின் அலைபேசியைச் சோதித்தபோது, அவர் ஜாவத் அலி (Jawad Ali) என்ற தனது பழைய காதலனுடன் கடந்த 4 மாதங்களாகத் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் ஜாவத் அலியைப் பிடித்த பொலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின.

அப்பாஸ் அலியின் திட்டமும் கொடூரமும்:

மாமனார் அப்பாஸ் அலி, தனது மருமகளின் பழைய காதல் விவகாரத்தைத் தெரிந்துகொண்டு, அதை வைத்தே ஜாவத் அலியை மிரட்டியுள்ளார்.

“உங்களது தொடர்பை மகனிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமானால், மருமகள் என்னுடனும் உடலுறவில் ஈடுபட வேண்டும்; அதற்கு நீயே அவளைச் சம்மதிக்க வை” என்று கேவலமான கோரிக்கையை வைத்துள்ளார்.

சம்பவம் நடந்த பிப்ரவரி 11 அன்று இரவு, இரும்புக்கம்பி போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி, வெளிப்பக்கமாக இருந்து கொண்டே கதவின் உள்பக்கத் தாழ்ப்பாளைத் திறந்து

அப்பாஸ் அலி உள்ளே நுழைந்துள்ளார். தூங்கிக்கொண்டிருந்த மருமகளிடம் தவறாக நடக்க முயன்றபோது, அவர் விழித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார்.

மேலும், “உன் முகத்திரையைக் கிழித்து ஊர் முழுவதும் அவமானப்படுத்துவேன்” என மஸ்காரா எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பாஸ் அலி, மருமகளின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பின், மீண்டும் அதே கருவியைப் பயன்படுத்தி வெளியிலிருந்தவாறே கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு, இது ஒரு மர்ம மரணம் போல நாடகமாடியுள்ளார்.

மகன் மற்றும் மாமனார் கைது:

கொலை செய்த பின் அப்பாஸ் அலி தனது மகனுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

மகன் சல்மான் அலி இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், தனது தந்தையைக் காக்க முயன்றுள்ளார். “இதைத் தற்கொலை என்று நம்ப வைத்து விடுங்கள், எனக்கு எதுவும் தெரியாதது போலவே இருந்து கொள்கிறேன்” எனக் கூறித் தலைமறைவாகியுள்ளார்.

பிப்ரவரி 19 அன்று பொலிஸார் அப்பாஸ் அலியைப் பிடிக்கச் சென்றபோது, அவர் புனித நோன்பு இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், விடயத்தைச் சொன்னதும் மக்களே அவரைக் காட்டிக்கொடுத்தனர். விசாரணையில் அப்பாஸ் அலி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பொலிஸ் நடவடிக்கை:

சதித்திட்டம் தீட்டிய மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காகச் சல்மான் அலியையும் பொலிஸார் கைது செய்தனர்.

தற்போது இருவர் மீதும் கொலை, சதித் திட்டம், பாலியல் வன்கொடுமை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குடும்ப உறவுகளில் மலிந்து வரும் சீரழிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version