பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில், 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று (23.04.2026) கைது செய்யப்பட்டுள்ளார். புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய், கடந்த 20-ஆம் திகதி விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பியபோது இப்பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த சிறுமியிடம் அவர் பாலியல் ரீதியான அத்துமீறல்களைச் செய்தபோது, சிறுமி தனது சிறிய தந்தையிடம் முறையிட்டுள்ளார்.

இதன்போது ஆத்திரமடைந்த சிறிய தந்தை சிப்பாய் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பேருந்து சாரதி உடனடியாகப் பேருந்தை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளார். காயமடைந்த சிப்பாயை வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார், தாக்குதல் நடத்திய சிறிய தந்தையைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவச் சிப்பாய் குணமடைந்து வெளியேற முற்பட்டபோது, வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சிப்பாயை இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version