இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

`பீட்சா வில்லா’ படத்தில் இடம்பெற்ற Disco Woman பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் தீ.

சினிமாவில் `குக்கூ’, `மெட்ராஸ்’, `இறுதிச்சுற்று’, `இறைவி’, `மேயாதமான்’, `காலா’, `பிகில்’, `ஜெயிலர்’ எனப் பல படங்களில் பாடினார்.

இவர் இன்டிபென்டன்ட் பாடலான `என்ஜாயி எஞ்சாமி’ பாடலை அறிவுடன் இணைந்து பாடி மிகப்பெரிய புகழ்பெற்றார்.

அதன் பிறகு வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து `Ancient Seed’ மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து `Don’t Look Down’ போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

இப்போது தனது அடுத்த பாடலாக ‘வாரி வாரி’ என்ற இண்டி பாடலை வெளியிட்டுள்ளார் தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், ”இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது.

இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version