ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக அமைந்தது. இப்போட்டியில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்தபோது, சிலிப் திசையில் நின்றிருந்த விராட் கோலி அவரைத் தொடர்ந்து கிண்டல் செய்து சீண்டிக்கொண்டே இருந்தார். இந்திய அணியின் ‘கிங்’ மற்றும் ‘பிரின்ஸ்’ என அழைக்கப்படும் இவ்விரு வீரர்களும் களத்தில் காட்டிய இந்த நட்பு ரீதியிலான மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில், இளம் வீரர் சாய் சுதர்சன் ருத்ரதாண்டவம் ஆடினார். கில் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிதானிக்க, மறுமுனையில் சாய் சுதர்சன் ஆர்சிபி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் தனது 3-வது ஐபிஎல் சதத்தைப் (100 ரன்கள்) பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பிடித்தார். இறுதியில் ஜேசன் ஹோல்டர் (23) அதிரடி காட்ட, குஜராத் 205 ரன்களைக் குவித்தது. இருப்பினும், சொந்த மைதானத்தில் அதிரடியைத் தொடர்ந்த ஆர்சிபி அணி, 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மாபெரும் வெற்றி பெற்றது.

Share.
Leave A Reply

Exit mobile version