கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க திரை உலக பிரபலங்கள் பலரும் தற்போது ‘குளு குளு’ பிரதேசங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். வெளிநாட்டுத் தீவுகளில் விடுமுறையை கொண்டாடி வரும் அவர்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

அந்த வகையில், தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை அஞ்சு குரியன், கோடையை கொண்டாட இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில், தான் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோ காட்சிகளை அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ காட்சிகள் ஒருபுறம் வைரலானாலும், மசாஜ் செய்வதற்கு அவர் செலுத்திய கட்டணம்தான் அனைவரையும் ‘அம்மாடியோவ்’ என வியக்க வைத்துள்ளது. பாலி தீவில் மசாஜ் செய்வதற்காக அவர் செலவு செய்தது மட்டும் சுமார் 7.25 இலட்சம் ரூபாய்.

இந்த கட்டண விவரத்தை அஞ்சு குரியன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ரசீதுடன் (Invoice) பகிர்ந்துள்ளார். ஒரு மசாஜிற்கு இவ்வளவு பெரிய தொகையா என விலையைக் கேட்ட ரசிகர்கள், தற்போது அந்த பதிவின் கீழ் ஆச்சரியத்துடன் கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version