இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் வந்த 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தாய்லாந்திருந்து கொழும்பு காட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த நேற்று இரவு வந்த 22 புத்த துறாவிகளிடன் சோதனை நடத்தினர்.

அப்போது, அவர்கள் கொண்டு வந்திருந்த சூட்கேஸ்களில் பள்ளி உபகரணங்கள், பல்வேறு இனிப்புகளுடன் நூதன முறையில் ரூ. 110 கோடி மதிப்பிலான 110 கிலோ போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

போதைப்பொருட்கள் ஒவ்வொரு துறவிகளின் பயணப் பையிலும் 5 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் இருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட புத்த துறவிகள் ஆன்மீக சுற்றுலா விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி கடந்த 22ஆம் தேதி தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

மேலும், அங்கு அவர்கள் துறவிக் கோலத்தை விடுத்து, சிவில் உடைகளை அணிந்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களாக புகைப்படம் மற்றும் காணொளிகள் அவர்களின் தொலைபேசிகளில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

 

இந்தசூழலில் தான், இலங்கை கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இது எனவும், துறவிகள் குழுவொன்று போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவமும் முதல் முறை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், கைது செய்யப்பட்ட நபர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் எனவும், அவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் எனினும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் இவர்கள் குறித்து காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version