Shrimp என்பது அதிக புரதம், ஒமேகா-3 போன்ற சத்துக்களை கொண்ட ஆரோக்கியமான கடல் உணவாக இருந்தாலும், சில உடல்நிலை பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் Shrimp சாப்பிடுவதால் இதய நோய் அபாயம் அதிகரிக்கக்கூடும். இதில் உள்ள கொழுப்பு இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால், மாரடைப்பு போன்ற தீவிர பிரச்சனைகள் உருவாகலாம்.

அதேபோல், கடல் உணவுக்கு அலர்ஜி உள்ளவர்கள் இதை முழுமையாக தவிர்க்க வேண்டும். சிலருக்கு இறால் சாப்பிட்ட பிறகு தோல் அரிப்பு, வீக்கம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். கடுமையான நிலைகளில் இது உயிருக்கு ஆபத்தான Anaphylaxis ஆக மாறும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் மற்றும் மூட்டு வலி பிரச்சனை (gout) உள்ளவர்களும் இறாலை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள பியூரின் (purine) அளவு உடலில் யூரிக் அமிலத்தை அதிகரித்து மூட்டு வலியை தீவிரப்படுத்தும்.

அதேபோல், சிறுநீரக நோயாளிகள் மற்றும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். இறாலில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் ஐயோடின் அளவு உடலின் ஹார்மோன் சமநிலையையும் சிறுநீரக செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.

மொத்தத்தில், Shrimp சத்தான உணவாக இருந்தாலும், உடல்நிலை பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இதை சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version