இந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவரான வாமிகா கேபி, சமீபகாலமாகத் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாருடன் இணைந்து அவர் நடித்த ‘பூத் பங்களா’ (Bhoot Bungla) திரைப்படம் அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹாரர்-காமெடி பாணியில் உருவான இப்படத்தில் வாமிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகிலும் அவர் கால் பதிக்கவுள்ளார். முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘DC’ திரைப்படத்தில் வாமிகா கேபி கதாநாயகியாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் – வாமிகா கூட்டணி மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே எகிறியுள்ளது. இதனிடையே, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாமிகா, தற்போது அதீத கவர்ச்சியுடன் கூடிய புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே லைக்குகளைக் குவித்து வருகின்றன.

