காதலுக்காக தங்களின் மதத்தை துறந்து பிற மதத்துக்கு மதம் மாறிய நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஸ்டார் நடிகையாக ஜொலித்தவர் நடிகை நக்மா. இவரின் தாய் இஸ்லாமிய மதமும், தந்தை இந்து மதத்தையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் இரண்டு மதத்தையும் துறந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மோனிகா. இந்து மதத்தை சேர்ந்த இவர், இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார். பின்னர் இஸ்லாமிய தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

மலையாள கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையான இவர், பிரபு தேவாவை காதலித்து வந்த போது இந்து மதத்திற்கு மாறினார். இருப்பினும் அந்த காதல் கைகூடாத நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

80,90களில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் நடிகை குஷ்பு. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர், இந்து மதத்திற்கு மாறி இயக்குநர் சுந்தர் சி-யை இந்து முறைப்படி காதல் திருமணம் செய்துகொண்டார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version