தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) பிரான்ஸ் நிர்வாகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட ‘அல்பா செந்தமிழ்’ சொல்லிசை (Rap) நிகழ்வு, கடந்த ஏப்ரல் 25, 2026 (சனிக்கிழமை) அன்று டமாரி லே லிஸ் (Dammarie-les-Lys) பகுதியில் உள்ள எஸ்பாஸ் பியர் பஷ்லே மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமூகத்தின் துன்பங்கள், வலிகள் மற்றும் வரலாற்றுத் துயரங்களைச் சொல்லிசை வடிவில் இளம் கலைஞர்கள் மேடையேற்றிய இத்தருணம், அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
வருங்கால சந்ததியினருக்கு, “நாம் தோற்றவர்கள் அல்ல; இலட்சியத்திற்காக மண்டியிடா ஈகம் புரிந்த இனம்” என்ற செய்தியைச் சொல்லிசை வழியாகக் கடத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது. லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்களின் அனுசரணையில் நடைபெற்ற இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு நல்கிய கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர், ஊடகங்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு TRO நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
