வவுனியா, தோணிக்கல் சேக்கிழார் வீதியில் வசித்து வந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவர் நேற்று (29.04.2026) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததையடுத்து, கவலையடைந்த உறவினர்கள் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனர். இதன்போது, வீட்டின் அருகிலிருந்த கிணற்றிற்குள் அவர் சடலமாகக் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். குறித்த நபர் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது சடலம் மேலதிக விசாரணைகளுக்காகவும், பிரேத பரிசோதனைக்காகவும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version