ஈழப்; போர் 3 முடியும் தருவாயில் சரத் பொன்;சேகா பிரித்தானியாவில் விசேட பயிற்சி
நெறியை முடித்த பின்னர் நாடு திரும்பிய செய்தியைக் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம்.

அவர் நாடு திரும்பிய வேளையில் இலங்கை பாரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. அதாவது சமாதானத்தை நோக்கிச் செல்வதா? அல்லது சவால்களை எதிர் கொள்வதா? என்பதாகும்.

2001ம் ஆண்டு இறுதிப் பகுதியில் கிழக்கு மாகாணத்தின் மக்கள் செறிந்த பகுதிகளை (வாகரை, சம்பூர் பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன) ராணுவம் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

காட்டுப் பகுதிகள் அதாவது சிறிய அளவிலான மக்கள் வாழும் பகுதிகளான கரடியனாறு, ஆயித்தியமலை, வவுனதீவு, வெல்லாவெளி போன்ற பகுதிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

இப் பகுதிகளில் அவ்வப்போது போர் இடம்பெற்றதால் அப் பகுதிகளும் அமைதியற்ற நிலையிலிருந்தன.

தென் பகுதியில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றம் ஏற்பட்டிருந்தது. 2001ம் ஆண்டு இடம்பெற்ற
பாராளுமன்றத் தேர்தல் புதிய அரசாங்கத்தை கொண்டு வந்தது.

ஜெனரல் எல்.பி. பலகல்ல (General L.P. Balagalle)

அதனைத் தொடர்ந்து புதிய ராணுவத் தளபதி நியமிக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத் தளபதியாக ஜெனரல் எல்.பி. பலகல்ல (General L.P. Balagalle) VSV USP ndc IG அவர்கள் பணியாற்றினார். [1, 2]
அவர் 25 ஆகஸ்ட் 2000 முதல் 30 ஜூன் 2004 வரை இலங்கை இராணுவத்தின் தளபதியாகப் பொறுப்பு வகித்தார். [1]

 

  • 2001 ஆம் ஆண்டு முற்பகுதி (டிசம்பர் 2001 வரை): அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
  • 2001 டிசம்பர் இறுதியில்: டிசம்பர் 2001 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க பிரதமரான பிறகு, திலக் மாரப்பன பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதியாக தொடர்ந்தும் ஒருவரே இருக்கையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் போரின் மூலம் தீர்வு காணலாம் என்பதில் அதிகளவில் நம்பிக்கையற்ற ஒருவரையே பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார்.

இக் காலப் பகுதியில்தான் சரத் பொன்சேகா பிரித்தானியாவிலிருந்து தனது படிப்பை முடித்து நாடு திரும்பியிருந்தார். நாடு திரும்பிய அவரை பாதுகாப்புச் சேவையின் கட்டளைத் தளபதியாகவும், ராணுவக் கல்லூரியின் பொறுப்பாளராகவும்  நியமித்தனர்.

இந்த ராணுவக் கல்லூரி என்பது ராணுவத்தினருக்கான கீர்த்தி நிறைந்த நிறுவனமாகவும்,
ராணுவத்தின் நடுத்தர தகுதியிலுள்ள அதிகாரிகளுக்கு கட்டளை மற்றும் அதற்கான அதிகாரிகளுக்கு நியமனம் வழங்குதல் போன்ற தயாரிப்புகளை மேற்கொள்ளும் கல்லூரியாக இருந்தது.

இதே பயிற்சி நெறியை சரத் பொன்சேகாவும் போட்டிப் பரீட்சையின் பின்னர் 1987 இல் முடித்திருந்தார்.

2002ம் ஆண்டின் ஆரம்பத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டு ஈழப் போர் 3 முடிவுக்கு வந்து

மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருந்தன. ராணுவ ஜெனரல்களும், அரசியல் தலைவர்களும் புதிய நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்.

இருப்பினும், போர்க் களத்தின் முன்னிலையில் அப் பாரத்தைச் சுமக்கும் சரத் பொன்சேகா போன்றவர்கள் இப் போர் நிறுத்தத்தினை மிகவும் சந்தேகத்துடனேயே நோக்கினர்.

இவ்வாறான போர் நிறுத்தங்கள் யாவும் விடுதலைப்புலிகள் தம்மை மீண்டும் மீளமைத்துக்
கொள்வதற்கே பயன்படுத்துவர் என்பதை தம் அனுபவ அறிவின் மூலம் புரிந்திருந்தனர்.

அரசாங்கத்திற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையேயான போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் வெளிநாடு ஒன்றில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் சார்பில் பல அரசியல்வாதிகள், ராணுவ மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்போரும், விடுதலைப்புலிகளின் சார்பில்
அவர்களின்   மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தராக நோர்வேயின் அமைச்சர் எரிக் சோல்கெய்ம் அவர்களும் அவற்றைக் கண்காணிக்க ஐரோப்பிய நாடுகளினதும், யப்பான் நாட்டினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஏ 9 வீதி வழியாக பொது மக்கள் யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மக்களிடம் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் யாழ்ப்பாணம் செல்ல “விசா” அனுமதி என்ற பெயரில் பணம் வசூலித்தனர்.

அதே வேளை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் சாமான்ய சிவிலியன்கள் போல் வேடமணிந்து ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் ( தெற்கில் கொழும்பு உட்பட ) சுதந்திரமாக உலா வந்தனர்.

இந்த ஏற்பாடு குறித்து தெற்கிலுள்ள மக்கள் அச்சமடைந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக சகல ராணுவ நடவடிக்கைகளும் நாடு முழுவதும் ஒத்திப் போடப்பட்டது.

விடுதலைப்புலிகளைப் பகிரங்கமாக கைது செய்வது தடுக்கப்பட்டது. இருப்பினும் விடுதலைப் புலிகளைச் சார்ந்தவர்கள் சிவிலியன்கள் போல் தெற்கிலுள்ள ராணுவ நிலைகளை நோக்கியும் சுயாதீனமாக நடமாடினர்.

இதன் விளைவாக ராணுவ உளவுத்துறை அதன் செயற்பாட்டு ஊக்கத்தை இழந்தது. மறு பக்கத்தில் விடுதலைப்புலிகள் தமது உளவுத்துறைப் பிரிவுகளை மீள நாடு முழுவதும் கட்டமைத்தனர்.

அரசாங்க உளவுத்துறை என்பது செயலிழந்து வரக்கூடிய ஆபத்திற்கு பதில் வழங்கும் ஆற்றலை இழந்திருந்தது.

இக் காலப் பகுதியில் விடுதலைப்புலிகள் தமது நிதி நிலமையையும் கணிசமான அளவிற்குப் பெருக்கினர்.

ஏ 9 வீதி வழியாக செல்லும் மக்களிடம் பொருட்கள், வழிச் செல்வோர் குறிப்பாக
வெளிநாடுகளிலிருந்து வருவோர் குறித்து போதிய தகவல்களைப் பெற்று கணிசமான தொகையைப் பெருக்கினர்.

இவ்வாறாக பணம் பெருகிய நிலையில் வெளிநாடுகளிலிருந்து ஆயுத இறக்குமதியையும்
அதிகரித்தனர். இவர்களின் ஆயுத இறக்குமதி என்பது நிலத்தில் நடத்தும் போராயுதங்கள் மட்டுமல்லாது சிறிய பாரம் குறைந்த விமானங்கள், கடற் கப்பல்களைத் தாக்கும் ஆயுதங்கள் என்பவற்றுடன் விமானிகளை வெளிநாடுகளில் பயிற்றுவித்து தாழப் பறந்து தாக்கும் சிறிய ரக விமானங்கள் மூலம் தெற்கில் சிறிய குண்டுகளை வீசக்கூடிய அளவிற்கு வளர்ந்திருந்தனர்.

சரத்; பொன்;சேகா

நிலமைகள் இவ்வாறாக மாற்றமடைந்;து சென்ற வேளையில் சரத்; பொன்;சேகா 2002ம் ஆண்;டு
ஜனவரியில் பாதுகாப்பு சேவைகள் பிரிவின் கட்டளைத் தளபதியாகவும், ராணுவக் கல்லூரியின் பொறுப்பாளராகவும் பணி புரிந்தார்.

இக் கால வேளையில் போர்; நிறுத்தம் செயற்பாட்;டிலிருந்தது. பிரதமருக்;கு சரத் பொன்சேகாவின் ஆற்றல் நன்கு புரிந்திருந்;த காரணத்தால் யாழ்ப்பாணம்; சென்று இரண்டாம் முறையும் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக நியமித்தார்.

இந்த நியமனம் விடுதலைப்புலிகளுக்கு மிகவும் கவலையளிப்பதாக இருந்தது. அதாவது
மாற்றுடையில் ராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் செல்வதை சரத் பொன்சேகா
அனுமதிக்கமாட்டார் என நன்கு தெரிந்திருந்தது.

இவ் வேளையில் போர்நிறுத்தக் கண்;காணிப்புக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. போர்நிறுத்த உத்தரவுகள் பேணப்படுகிறதா? என்பதனைக் கண்காணிக்க ஐரோப்பிய மற்றும் நோர்டிக்; நாடுகளின் பிரிதிநிதிகள் நியமிக்கப்பட்டிருந்;தனர்.

இருப்;பினும் அவர்களின்; நடுநிலை என்பது பிரச்;சனைக்குரியதாகவே இருந்தது. அவர்களது செயற்பாடுகள் குறித்து ராணுவத்தினர் மத்தியில் அதிருப்தி வளர்ந்தது. அவர்கள் பொறுப்புகளை அரச ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் சமமாகவே பிரயோகித்தனர்.

(வீடுதலைப் புலிகளின் புலனாய்வு துறை தலைவர் பொட்டு அம்மன் மற்றும் பிரபாகரன்)

இவ்வாறு சமமாகப் பயன்படுத்தியதால் விடுதலைப்புலிகள் அவற்றைத்
தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

இங்கு பிரச்சனைக்குரிய அம்சம் எதுவெனில் போர்நிறுத்த காலத்தில் எவ்வித தடையும் இல்லாமல் சென்று வரலாம் என்ற ஏற்பாட்டைப் பயன்படுத்தி ஆயுதங்கள் இல்;லாத போதிலும்; ( கொழும்புப் பகுதி உட்பட ) சுதந்திரமாக நடமாடலாம் என்ற ஏற்;பாடு ஆகும்;.

இந் ஏற்;பாடு காரணமாக அவர்கள் தமக்கென பாதுகாப்பான வீடுகளை அமைத்தார்கள். இதர தேவையான வசதிளை மேற்கொண்டார்கள்.

உளவுப் பிரிவுக்குத்; தேவையான வலை அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதே போலவே கடல் வழி மூலமாக ஆயுத தளபாடங்;களை தடையில்லாமல்; எடுத்துச் சென்றார்கள். இவை யாவும் இன்;னொரு முரண்பாட்டிற்;கான தயாரிப்;பாகவே இருந்தது.

தொடரும்;……

(இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம் (“Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”)‘ என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்

மொழிபெயர்ப்பு : வி. சிவலிங்கம்(லண்டன்)

இலங்கைக்கு ராணுவ உதவிகளை வழங்க மறுத்த இந்தியா!!: இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்: சரத் பொன்சேகா-(பகுதி -9)

Share.
Leave A Reply

Exit mobile version