ரிவர்ஸ் என்ஜினியரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் ஆயுதங்களை ஈரான் மீண்டும் உருவாக்கும் ஆய்வுகளை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வெடிக்காத அமெரிக்க ஏவுகணைகளை கைப்பற்றி ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யும் ஈரானின் திட்டம், எதிர்காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு புதிய பாதுகாப்பு சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதனைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்த அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இப்படி தாக்குதல் நடத்திய போது, UAE, சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தளங்கள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமின்றி ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியதால் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும், எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கா – ஈரான் போர்
இந்த சூழலில் பாகிஸ்தான் தலையீடு காரணமாக அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் 10 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியை தழுவிய நிலையிலும், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
The IRGC said it had discovered 15 unexploded U.S. missiles in a southern Iranian province. The weapons were transferred to the technical and research units for reverse engineering. pic.twitter.com/7x4Eqnaeft
— Embassy of Iran in Bulgaria (@IRANinBULGARIA) April 29, 2026
ரிவர்ஸ் இன்ஜினியரிங்.. திகைத்து நிற்கும் அமெரிக்கா!
இதனிடையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானில் வீசி, இதுவரை வெடிக்காமல் இருக்கும் குண்டுகள் மற்றும் ஆயுதங்களை ‘ரிவர்ஸ் இன்ஜினியரிங்’ (Reverse Engineering) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகல் எடுக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரானின் ஆங்கில அரசுத் தொலைக்காட்சியான ‘பிரஸ் டிவி’ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஈரானின் ஹோர்மூஸ்கான் மாகாணத்தில் வெடிக்காத 15-க்கும் மேற்பட்ட கனரக அமெரிக்க ஏவுகணைகளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்துள்ளதாகவும், இந்த ஆயுதங்களின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு, அதனை மீண்டும் உருவாக்குவதற்காக இந்த ஆயுதங்கள் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் அமெரிக்காவின் இந்த ஆயுதங்களை ரிவர்ஸ் இன்ஜினியரிங் மூலம் உருவாக்கினால் அது எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.