“அமெரிக்​கா​வின் பெரிய நகரான லாஸ் ஏஞ்​சல்சில் அடுத்த மாதம் 2-ம் தேதி மேயர் தேர்​தல் நடை​பெறுகிறது.

இதில் போட்டியிடும் நித்யா ராமன், தற்​போதைய மேயர் கரேன் பாசுக்கு சவாலாக உரு​வெடுத்​துள்​ளார்.

இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெறு​வதற்​கான வாய்ப்பு 60 சதவீதம் இருக்கிறது என கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த தமிழ் குடும்​பத்​தில் 1981-ம் ஆண்டு பிறந்​தவர்​தான் நித்யா ராமன். இவருக்கு 6 வயது இருக்​கும்போது பெற்​றோர் அமெரிக்கா குடிபெயர்ந்​தனர்.

ஹார்​வர்ட் பல்​கலைக்​கழகத்தில் அரசி​யல் கோட்​பாடும், மசாசூசட்ஸ் தொழில்​நுட்​பக் கல்வி நிறுவனத்​தில் நகரத் திட்​ட​மிடலும் பயின்​றார்.

கடந்த 2013-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் குடியேறினார் இவர்..கடந்த 2020-ம் ஆண்டு ஹிலாரி கிளிண்​டன் போன்ற ஜாம்​ப​வான்​களின் ஆதரவு பெற்ற ஒரு​வரை தோற்​கடித்​த நித்யா ராமன்,

லாஸ் ஏஞ்​சல்ஸ் நகர சபை உறுப்​பின​ராக தேர்ந்தெடுக்​கப்​பட்ட முதல் தெற்​காசி​யப் பெண் என்ற சாதனையைப் படைத்​தார்.

அடுத்த மாதம் நடை​பெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் தேர்​தலில் மேயர் பதவிக்கு போட்​டி​யிடு​வதற்​காக பிப்​ரவரி 7-ம் தேதி மனுதாக்​கல் செய்தார்.

நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் வெற்றி பெற்ற மம்​தானியைப் போல, நித்யா ராமனும் லாஸ் ஏஞ்​சல்ஸ் அரசி​யலில் ஒரு பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​து​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version