Weather , , 0°C

ilakkiyainfo

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
September 07
20:41 2019

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Accident__5_ கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி Accident  5

குறித்த சம்பவம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் டிப்பர் வாகனத்தில் ஏறி சாரதியுடன் சினேகபூர்வமாக பேசி இறங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் சாரதியுடன் பேசிவிட்டு இறங்குகின்ற சந்தர்ப்பத்தில் சாரதி ரிப்பர் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

ரிப்பர் வாகனத்தின் மூலம் உயிரிழந்தவரின் வீட்டிற்கு மண் பறிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்போதே குறித்த ரிப்பர் வாகன சாரிதியுடன் உயிரிழந்த நபர் பேசியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Accident__8_ கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி Accident  8

இதன்போது சில்லுள் சிக்குண்ட நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. விபத்தில் முரசுமோட்டடை ஐயன்கோவிலடி பகுதியை சேர்ந்த அல்வின் அனுரா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ரிப்பர் வாகன சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றமை தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் அனுமதியற்ற மணல் மற்றும் மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் பொலிசாருக்கு பிரதேச மக்களால் பலமுறை தகவல் வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்