சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது கடந்த 1984 தாக்குதல் நடத்தினார்கள். அதன்போது அங்கு கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை , பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த 20 சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பொலிஸ் நிலையத்தின் பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று, அங்கிருந்து  காட்டு பாதையூடாக வேன் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் 20 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

adddsபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருபது பேரையும் காப்பற்றிய குறித்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரை பருத்தித்துறையை சேர்ந்தவராவர்.

1937 ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 25 வயதில் 1962 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிளாக இணைந்து கொண்டுள்ளார். பின்னர் பொலிஸ் சேவையில் சார்ஜென்ட் தர த்திற்கு உயர்ந்தவர் 1989 ஆம் ஆண்டு தனது 52 ஆவது வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர் தனது 82 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

அவரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் மூன்றாம் பூரண பொலிஸ் மரியாதையுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.