ilakkiyainfo

நகல் ஜெனீவா பிரேரணையும் அனந்தியும் -எஸ்.ஐ. கீதாபொன்கலன்

வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தீர்மானத்தை ஜெனீவாவில் எதிரொலிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று ஜெனீவாவுக்கு அனுப்பட்டது. அனந்தி சசீதரன் அதனை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.

இப்போது திரும்பி வந்துள்ள அனந்தி தாம் தமது கருத்தைக் கூற அனுமதிக்கப்படவில்லை. சுமந்திரன் தடுத்துவிட்டார் என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இது தொடர்பில் பல கேள்விகள் கேட்கப்படலாம். இருப்பினும் தெளிவானது என்னவெனில் வட மாகாணசபை தீர்மானம் இன்னும் ஜெனீவாவில் எதிரொலிக்கவில்லை என்பது ஆகும். வடமாகாணசபை தொடர்பில் ஆரம்பமே சரியில்லையே என்று தோன்றிய முதலாவது தருணம் இதுவல்ல

– See more at: http://www.thinakkural.lk/article.php?article/ylixeuqoa6699470d31b87bd14279pnudf021441e5e6bf23eb84a306kwecg#sthash.yh63hzdm.dpuf

‘வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தீர்மானத்தை ஜெனீவாவில் எதிரொலிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று ஜெனீவாவுக்கு அனுப்பட்டது. அனந்தி சசீதரன் அதனை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.

இப்போது திரும்பி வந்துள்ள அனந்தி தாம் தமது கருத்தைக் கூற அனுமதிக்கப்படவில்லை. சுமந்திரன் தடுத்துவிட்டார் என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இது தொடர்பில் பல கேள்விகள் கேட்கப்படலாம்.

இருப்பினும் தெளிவானது என்னவெனில் வட மாகாணசபை தீர்மானம் இன்னும் ஜெனீவாவில் எதிரொலிக்கவில்லை என்பது ஆகும். வடமாகாணசபை தொடர்பில் ஆரம்பமே சரியில்லையே என்று தோன்றிய முதலாவது தருணம் இதுவல்ல’…..

மேலும்….

hrc-12thspecialsession
இலங்கைக்கு எதிரான ஜெனீவா செயன்முறை தொடங்கிய காலத்தில் இருந்து   இப்பிரச்சினை பற்றி இப்பந்தியில் நிறையவே எழுதி உள்ளோம். இதுவரை ஆய்வின் கவனம் பெருமளவிற்கு ஜெனீவா செயன்முறையிலும் அதன் பல்வேறுபட்ட பரிமாணங்களிலும் இருந்துள்ளதே அன்றி, தீர்மானம் பற்றி பெரிதாக எழுதப்படவில்லை.

அதாவது, கடந்த இரண்டு ஆண்டு கால தீர்மானங்கள் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. இதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள்   இறுதியில் ஒரு சர்வதேச விசாரணையையோ   அல்லது அறுதியும் இறுதியுமான விளைவுகளையோ ஏற்படுத்தப் போவதில்லை என்று பல தடவைகள் இப்பகுதியில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பெரிய மேளதாளத்துடனும் ஆரவாரத்துடனும் ஆரம்பிக்கின்ற ஜெனீவா செயன்முறை கடந்த இரண்டு ஆண்டுகளில் சப்பென்று முடிந்து போனமை யாவரும் அறிந்ததே. இந்த ஆண்டு செயன்முறைக்கும் கடந்த இரு ஆண்டு செயன்முறைக்கும் இடையில் ஒரு வேறுபாடு காணப்படுகின்றது.

இதற்கு முன்னர் ஆரவாரத்துடன் ஆரம்பிக்கின்ற “திருவிழா’ சப்பென்று முடிவடைந்திருந்தது.

இவ்வாண்டு  ஆரம்பமே   சற்று  சப்பென்று ஆகிவிட்டது போலத் தோன்றுகின்றது. இது இச் செயன்முறையில்  தவறான   அடிப்படையில் பெரும்  நம்பிக்கை கொண்டிருந்த சிறிய ஒரு குழுவினரிடையே பெரிய ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளமையை உணரக்கூடியதாகவுள்ளது. சர்வதேச சமூகம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்ற தொனியில் செய்திகள் ஏற்கனவே வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்த ஏமாற்றம் பற்றி நாம் இப்போது எதுவும் சொல்லப் போவதில்லை. இருப்பினும், இந்த ஏமாற்றத்துக்கு காரணமான தீர்மான நகல் முக்கியமானது. எனவே, இன்று தீர்மான நகல் பற்றி பார்க்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஜெனீவாவில் இடம்பெறுகின்ற செயன்முறை பற்றி புரிந்துகொள்ளப்பட வேண்டியமையும் அவசியமானது.

ஒரு தீர்மானத்தை கொண்டுவர விரும்பும் நாடு அல்லது நாடுகள் ஒரு தீர்மான நகலை தயார் செய்து அங்கத்துவ நாடுகளுக்கு சமர்ப்பிக்கும். அங்கத்துவ நாடுகள் வாக்களிப்பதன் மூலமே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதனால் நகலில் தமக்கு தேவையான மாற்றங்களை அங்கத்துவ நாடுகள் கோருவது உண்டு.

இவ் அடிப்படையில் இந் நாடுகளுக்கிடையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் இறுதி நகல் தயாரிக்கப்படும். அது பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, கவுன்சிலின் பெரும்பான்மை வாக்குகளை பெறுமாயின் இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்த அடிப்படையிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளும் இந்தியா தனது வாக்கைப் பயன்படுத்தி ஆரம்ப நகலை மென்மைப்படுத்தியிருந்தது. இப்போது  அமெரிக்காவினாலும் அதன் சில கூட்டாளி நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டிருப்பது அடிப்படை நகல் ஆகும். இனி பேச்சுவார்த்தை  அடிப்படையில்  மாற்றப்படுகின்ற   இறுதி நகலே  வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், நகலை இன்னும் கடுமையாக்கினால்தான் வாக்களிப்பேன் என்று கூறக்கூடிய நாடுகள் எதுவும் மனித உரிமைக் கவுன்சிலில் இல்லாமையினால், இப்பொழுது வெளிவந்துள்ள நகல் மேலும் மென்மையடைவதற்கான சாத்தியம் உள்ளதேயன்றி, இலங்கை அரசுக்கு எதிராக கடுமையடைவதற்கான சாத்தியம் மிகமிகக் குறைவானதே.

இங்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏமாற்றகரமாக அமையக்கூடியது என்னவெனில் இலங்கைக்கு ஆதரவான மிக உறுதியான சீனா, கியூபா, இந்தியா போன்ற நாடுகளின் செயற்பாடுகளுக்கு மத்தியில் தென்னாபிரிக்கா போன்ற நடு நிலையுடன் இருந்திருக்கக் கூடிய நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளமையாகும்.

தென்னாபிரிக்காவின் இலங்கை மக்கள் தமது தீர்வை தாமே அடைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற இன்றைய நிலைப்பாடு சர்வதேச விசாரணை என்ற கோசத்திற்கு எதிரானது. அத்துடன், அது இப்பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் எதிரொலி ஆகும்.

தென்னாபிரிக்கா நெடு நாட்களாக  இலங்கைப் பிரச்சினையில்   மத்தியஸ்தம் வகிக்க முயற்சித்த ஒரு நாடு ஆகும். இப்போது இன நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்க உண்மைக் கமிஷன் போன்றது ஒரு பொறிமுறையை இலங்கையில் அமைக்க முயற்சிக்கின்றது. இன்று தென்னாபிரிக்க  ஜெனீவாவில்  எடுத்துள்ள  நிலைப்பாடு  இம்முயற்சிகளை பாதிக்கக்கூடிய உள்ளார்ந்த இயலுமை உடையது ஆகும்.

தென்னாபிரிக்கா தனது நடுநிலையை இழக்கின்றபோது தமிழ் அரசியல் கட்சிகள் அதன் ஒரு அனுசரணையாளராக ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் குறைவடையும். இருப்பினும், இது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். தமிழ்க்கட்சிகள் இது தொடர்பில் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டிய தருணம் இது ஆகும்.

எவ்வாறாயினும், இப்போது வெளிவந்துள்ள நகல் தீர்மானத்தை எடுத்துக் கொள்ளலாம். அடிப்படையில் அது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானது என்பதனால் அதனை கண்டிக்கின்ற பல விடயங்கள் அதில் கூறப்பட்டுள்ளன. வெலிவேரிய வன்முறைகள், ஆட்கடத்தல், சிறுபான்மை வணக்கத் ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற பல விடயங்கள் அதில் கூறப்பட்டுள்ளன.

இது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை புதிய பிரச்சினைகள் அல்ல. எனவே, இவை பற்றி அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை தனக்கு எதிரான தீர்மானம்  ஒன்று கொண்டுவரப்படுகின்றது என்கின்ற  விசனத்துக்கு மத்தியிலும் அரசாங்கம் திருப்தியடையக் கூடிய இரண்டு  விடயங்கள் நகலில் காணப் படுகின்றன.

ஒன்று நகலில் கேட்கப்பட்டிருப்பது உள்ளூர் விசாரணையே அன்றி சர்வதேச விசாரணை அல்ல. இது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை இப்பிரச்சினையில் இருந்து தப்பிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதாக இருக்கலாம்.

இதுவரை அரசாங்கம் சர்வதேச விசாரணை என்பதை கடுமையாக எதிர்த்துள்ள அதேசமயம், உள்ளூர் விசாரணை என்பது தொடர்பில் ஒருவித நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. இதற்கான ஒரு உதாரணம் நியமிக்கப்பட்டு, நடத்தி முடிக்கப்பட்ட இராணுவ விசாரணை ஆகும்.

இப்போது இராணுவ விசாரணை முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது போன்று தோன்றுகின்றது. இப்போது அரசாங்கம் அதுபோன்ற ஒரு சிவிலியன் பொறிமுறையை நியமிக்குமாயின் ஜெனீவாப் பிரச்சினையை இழுத்தடிப்பதற்கான சாத்தியம் காணப்படும். எனவே, இப்பிரச்சினையில் இருந்து தப்பிக்கொள்ள புதிய ஒரு உள்ளூர் பொறிமுறை தோற்றுவிக்கப்படுமாயின் ஆச்சியப்படத் தக்கதாக இராது.

இது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏமாற்றகரமானதாகவே இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில், அவர்களுக்கு உள்ளூர் பொறிமுறைகளில் நம்பிக்கை இருக்கப் போவதில்லை. இவற்றை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை ஏற்கனவே சத்தமாகக் கூறியுள்ளனர்.

நகல் தொடர்பில் அரசாங்கம் திருப்தி அடையக்கூடிய இரண்டாவது விடயம் அரசாங்கம் முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதுடன், பாராட்டப்பட்டுள்ளமை ஆகும். நல்லிணக்க ஆணைக்குழு, அதன் பரிந்துரைகள், லலித் வீரதுங்கவின் தேசிய செயற்றிட்டம் ஆகியவை வரவேற்கப்பட்டன.

இருப்பினும் அரசாங்கம் இவ்விடயங்கள் காரணமாக சும்மா இருந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது. பீரிஸ் ஏற்கனவே கடுமையான தொனியில் பிள்ளையையும் பிள்ளையின் அறிக்கையையும் விமர்சித்துள்ளார். எனவே, இப்போதைய நகலை தனக்கு சாதகமான ஒன்றாக மாற்றிக் கொள்வதற்கான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேசமயம் பின்னடைவு என்று வடமாகாண சபை கருதக்கூடிய பலவிடயங்களும் உள்ளடங்கியுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். மேற்கூறிய  இரண்டு விடயங்களும் நிச்சயமாகக் கசப்பாக இருக்கக் கூடியவையே. அதேசமயம் நகல் 13ஆவது திருத்தம் தொடர்பில் கூறியுள்ள விடயம் ஜெனீவா செயன்முறை விமோசனம் தந்துவிடும் என்று நம்பியவர்களுக்கு ஒரு பின்னடைவே.

13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் வடமாகாணத்திற்கு வளங்களும் அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனப்படுகின்றது. இதன் கருத்து என்னவெனில் ஜெனீவா 13ஆவது திருத்தத்தையே அதிகாரப் பரவலாக்க செயன்முறைக்கான தீர்வாகப் பார்க்கின்றது என்பது ஆகும். சமஷ்டி, சுயநிர்ணயம் என்பவை கவனத்தில் எடுக்கப்படப் போவதில்லை என்பதையே தற்போதைய நகல் உணர்த்தி நிற்கின்றது.

இது ஜெனீவா தனி நாடு தந்துவிடும் என்ற கோணத்தில் கூத்தாட்டம் போட்டவர்களுக்கு ஒரு பின்னடைவே ஆகும். அத்துடன் ஜெனீவா இலங்கை அரசாங்கத்தை மட்டுமல்ல, இரு தரப்பின் மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க வேண்டும் என்றே கோரும் என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தோம்.

எனவே, இன்றைய நிலையில் பலவீனமான நகல் ஒன்றே முன்வைக்கப்பட்டுள்ளது. அது மேலும், மென்மைப்படுத்தப்படலாம் என்பது தெளிவானது. இதன் காரணமாகவே இந்தியா உறுதியான அல்லது கடுமையான தனியான ஒரு பிரேரணையைக் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு மட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றது.

இப்போது பிரச்சினை என்னவெனில் வடமாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக நகலில் எவ்விதமான மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்பது ஆகும். தீர்மானம் ஜெனீவாவில் எதிரொலிப்பதனால் எந்த ஒரு பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

அது ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவ்விதமான ஒரு தாக்கம் இல்லாதிருக்குமாயின் வடமாகாண மக்களது பாதுகாப்பையும் மாகாண சபையையும் பணயம் வைத்து போடப்பட்ட தீர்மானம் கேள்விக்குறியதாகவே இருக்கும். எனவே, அந்தத் தாக்கம் இறுதித் தீர்மானம் வெளிவரும்வரை பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும்.

வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தீர்மானத்தை ஜெனீவாவில் எதிரொலிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று ஜெனீவாவுக்கு அனுப்பட்டது. அனந்தி சசீதரன் அதனை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.

இப்போது திரும்பி வந்துள்ள அனந்தி தாம் தமது கருத்தைக் கூற அனுமதிக்கப்படவில்லை. சுமந்திரன் தடுத்துவிட்டார் என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல கேள்விகள் கேட்கப்படலாம். இருப்பினும் தெளிவானது என்னவெனில் வட மாகாணசபை தீர்மானம் இன்னும் ஜெனீவாவில் எதிரொலிக்கவில்லை என்பது ஆகும். வடமாகாணசபை தொடர்பில் ஆரம்பமே சரியில்லையே என்று தோன்றிய முதலாவது தருணம் இதுவல்ல.

கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், ஜெனீவா செயன்முறை தமிழ் மக்கள் மேலுள்ள அன்பு, பாசம் என்பனவற்றினால் முன்னெடுக்கப்படவில்லை. அது வல்லரசுகளின் தேவைக்காக முன்னெடுக்கப்படுகின்ற ஒரு செயன்முறை. அதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இயலுமை தமிழ்க் குழுக்களைப் பொறுத்தவரை குறைவானதே.

எனவே, அதில் மட்டற்ற நம்பிக்கை வைக்கின்றபோது ஏமாற்றங்கள் ஏற்படுகின்ற சாத்தியம் அதிகமாகவே இருக்கும். எமது தேவை என்னவெனில், உடனடியானதும், உள்ளூர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதாகும். நொந்து போனவன் எழுந்து முதலில் நிற்பது அவசியம்.

-எஸ.கீதாபொன்கலன்-

Exit mobile version