ilakkiyainfo

ஆளுந் தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளை ஓரங்கட்ட முயற்சியா? (கட்டுரை)

ஜெனிவா  மனித உரிமைப் பேர­வை யின் தீர்­மா­னங்கள் கடு­மை­யாகிக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்ற விமர்­ச­னங்­களும் விளக்­கங்­களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்­டி­ருக்­கையில் இலங்கை அர­சாங்கம் எங்­களை ஏமாற்றி விட்­டது.

நாங்கள் ஏமாற்­றப்­பட்டு விட்டோம். இது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்­துக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் அவ­மா­ன­மா­கு­மென அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்­தி­ருக்கும் அறிக்­கை­யா­னது இலங்­கை­ய­ர­சி­யலில் புதிய அர­சியல் சிக்கல் ஒன்றை ஏற்­ப­டுத்­தப்­போகும் கருத்­தாகப் பேசப்படுகின்றது.

rishad307-300x244இணையத்தள அங்­கு­ரார்ப்­ப­ணமும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பும் என்ற நிகழ்ச்சித் திட்­டத்தின் கீழ் கொழும்­பி­லுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீனின்  உத்­தி­யோ­க­பூர்வ  இல்­லத்தில் அண்­மையில்  இடம்பெற்ற  நிகழ்­வி­லேயே அமைச்சர் மேற்­கண்ட கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார்.

அமைச்­சரின் இந்த விச­னத்­துக்­கான  கார ­ணங்­க­ளாக பின்­வரும் விட­யங்கள் கூறப்­ப ட்­டி­ருந்­தன. 2012 ஆம் ஆண்டு நடை­பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்­தலின் போது முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதல் அமைச்சர் பத­வியை வழங்­கும்­படி வேண்­டு கோள் விடுத்தோம்.

எமது வேண்­டுகோள் உதா­சீனம் செய்­யப்­பட்டு ஆளும் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த நஜீப் அப்துல் மஜீ­துக்கு அப்­ப­தவி வழங்கப்பட்டது.

முதல் அமைச்சர் விவ­காரம் தொடர்பில் ஆளும் அர­சாங்­கத்தின் அமைச்­சர்­க­ளான பொரு­ளா­தார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழ­கப்­பெ­ரும, அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா போன்­றோ­ரிடம்  பல­முறை பேசினோம். ஆனால் எந்தப் பலனும் கிட்­ட­வி ல்லை.

முதல் அமைச்சர்  பத­விக்குப் பதி­லீ­டாக அமீர் அலியை தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மித்து பிர­தி­ய­மைச் சர் பத­வி­யொன்று வழங்­கப்­படும் என வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தார்கள்.

அந்த வாக்­கு­றுதி கூட இன்­று­வரை அர­சாங்­கத்தால் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அதன் கார­ண­மா­கவே மேல் மாகாண சபைத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸா­கிய நாங்கள் தனித்து நின்று போட்­டி­யி­டு­கி­றோ­மென கைத்­தொழில் மற்றும் வர்த்­த­கத்­துறை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­தி ­ருந் தார்.

அமைச்­சரின் இந்த விச­ன­மா­னது எரி­கிற சட்­டியில் எண்ணெய் ஊற்றி விடு­கிற ஓர் காரி­ய­மாக இருக்­கி­ற­தே­யென்­பது விமர்­ச­கர்­களின் கருத்தாகும்.

காரணம் ஏற்­க­னவே அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­யாக இருந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மறை­மு­க­மாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின்  ஆணை­யாளர் நாயகம்   நவ­நீ­தம்­பிள்ளையிடம் கைய­ளித்த 60 பக்கம் கொண்ட   அறிக்­கையில் இலங்­கை யில் முஸ்லிம் மக்கள்  எதிர்­கொண்டு வரு­கின்ற பல்­வேறு பிரச்­சி­னைகள்  சுட்­டிக்­காட்­ட ப்­பட்டு…

குறிப்­பாக   இன­வாத அமைப்­புக்­க­ளி­னாலும் பௌத்த குரு­மா­ரி­னாலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும்  மதப்­பண்­ பா­டு­க­ளுக்கும்   இழைக்­கப்­பட்டு வரும் கொடு­மைகள் பற்றி விப­ரிக்­கப்­பட்ட அறிக்­கை­யாக அவ்­வ­றிக்கை காணப்­ப­டு­கின்­றது    என்­பதைக் கேள்­வி­யுற்ற  இலங்­கை­ய­ர­சாங்கம் முஸ்லிம் காங்­கி­ரஸின் மீது கடும் கோபங்­கொண்டிருக்கின்ற நிலை­யில்தான் அமைச்சர் ரிஷாத்தின் மேற்­படி குற்றச் ­சாட்டு அர­சாங்­கத்தின் மீது சுமத்­தப்­ப ட்­டி­ருக்­கி­றது.

ரவூப் ஹக்கீம் அறிக்­கையில் எவ்­வித குற்றச் சாட்­டுக்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன   என்று கரு­தப்­படுகிறதோ அதே கருத்­தை யும் குற்றச்சாட்­டையும்  அமைச்சர் ரிஷாத் தன்­ குற்­றச்­சாட்­டாக அர­சாங்­கத்தின் மீது சுமத்­தயுள்ளார். கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் பொலி ஸார் பார்த்­தி­ருக்­கத்­தக்­க­தாக உடைக்­கப்­பட்­டது.

அதற்­கான ஆதா­ரங்­க­ளையும் சாட்­சி­களையும் பொலிஸ் மா அதி­ப­ரிடம் நான் ஒப்­ப­டைத்­தி­ருந்தேன். இன்று வரை குறித்த பொலி­ஸா­ருக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. தெஹி­வ­ளை­யி­லுள்ள கட­வத்தை பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக பொலி­ஸா­ரி­னா­லேயே வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதை இந்த அர­சாங்கம் பார்த்துக் கொண்டு தான் இருக்­கி­றது என்று தனது ஆதங்­கத்­தையும் அதே­வேளை விச­னத்­தையும் அமைச்சர் ரிஷாத் தெரி­வித்­தி­ருந்தார்.

இவரின் இந்த விசன நிறை கொண்ட குற்­றச்­சாட்­டுக்­களும் சுட்­டிக்­காட்­டல்­களும் வெளி­யி ­டப்­படக் கூடிய ஒரு கால­நிலை இப்­பொ­ழுது காணப்படு­கி­றதா என்­பதே இன்­றைய கேள்வி. ஏற்­க ­னவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்.

தேசத்­து­ரோகி அவரை மன்­னிக்கக் கூடாது என பேரின கடும்­போக்­கா­ளர்­களும் இன­வா­தக்­கு­ழுக்­களும் கண்­டனம் இட்டுக்கொண்டேயிருக்கின்றன.

தேசத்­து­ரோக செயலில் ஈடு­பட்­ட­தற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட­ன­டி­யாக மன்­னி ப்புக் கோர வேண்டும் சிங்­கள பௌத்­தர்­களை தண்­டிக்கும் செயலை ஹக்கீம் நிறுத்­தா­விடின் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக போராட்டம் வெடிக்கும் என இன விஷம் கக்­கிய முறையில் பொதுபலசேனா என்னும் பௌத்த அமைப்பு ஹக்­கீமை எச்­ச­ரித்­துள்­ள­துடன் தனது இன­வாத விஷத்­தையும் கக்­கி­யுள்­ளது.

இலங்­கையில் வாழ்ந்து கொண்டு அர­சாங்­கத்தின் அமைச்­சுப்­ப­தவி சலு­கை­களை அனு­ப­வித்துக் கொண்டு அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஹக்கீம் நடந்து கொண்­டுள்ளார் என அந்த அமைப்பு பச்­சை­யாக எச்­ச­ரித்­துள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் தான் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் தான் அங்கம் வகிக்கும் அ­ர­சாங்­கத்தை விமர்­சித்­துள்ளார்.

இலங்கை அர­சியல் வர­லாற்றில் குறிப்­பாக முஸ்லிம் கட்­சி­களின் அர­சியல் பரி­மா­ணத் தில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக்கட்­சியை ஆட்சி பீடம் ஏற வைத்­தது தொடக்கம் இன்­று­வரை அர­சாங்­கத்தின் அதா­வது ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின் நாடி­யா­கவும் நரம்­பா­கவும் விளங்­கிய இரு முஸ்லிம் கட்­சி­களில் ஒன்று   ரிஷாத்தை தலை­மை­யாகக் கொண்ட   அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்­றொன்று அமைச்சர் அதாவுல்­லாவை தலை­மை­யாகக் கொண்ட தேசிய காங்­கிரஸ் ஆகிய இரு கட்­சி­க­ளு­மாகும்.

இவை­யி­ரண்டும் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி ­யென்று கூறு­வதை விட ஆளும் அர­சாங்­கத்தின் ஆணித்தன்­மை­யா­கவும் இருந்து வந்­துள்­ளது என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்மை.

இவ்­விரு கட்­சி­களும் பல்­வேறு விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளு­டனும் இணக்­கப்­பா­டு­க­ளு­டனும் இருந்து வந்­துள்­ளது.

இதன் மூல­வு­டன்­பாடு கார­ண­மா­கவே 2008 – 2012 ஆகிய காலப்­ப­கு­தியில் நடத்­தப்­பட்ட கிழக்கு மாகாண சபை தேர்­தல்­களில் அரசாங்கத்துடனான  இணக்­கப்­பாட்டு கட்­சி­ க­ளாக இருந்து  வந்­துள்­ள­மையை கண்­டி­ருக்­கின்றோம்.

ஆனால் இம்­மாத கடைசி வாரத் தில் நடை­பெ­ற­வுள்ள மேல் மாகாண சபைத் தேர்­தலில் நாங்கள் தனித்துப் போட்­டி­யி­டு­கி­ றோ­மென அமைச்சர் ரிஷாத்  குறிப்­பிட்­டி­ரு ப்­ப­துடன் எதிர்­கா­லத்தில்  நடை­பெ­ற­வுள்ள அனைத்து தேர்­தல்­க­ளிலும் எமது கட்சி இனி தனித்தே போட்­டி­யிடும்.

தேர்தல் காலங்­களில் மட்டும் வந்து வீர­வ­ச­னங்­களைப் பேசி வாக்­கு­களை கொள்­ளை­ய­டிக்கும் தந்­தி­ ரோ­பாயம் எம்­மி­ட­மில்லை. மக்­களின் பிரச்சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கே அர­சியல் நடத்­து­ கிறோம் என அமைச்சரும் வீர­வ­சனமே பேசி­யி­ருந்தார் என ஒரு விமர்­சகர் தெரி­ வித்தார்.

அமைச்­சரின் இந்த விச­னமும் அறி­விப்பும் உள்­ளார்ந்த மூன்று விட­யங்­களை தொட்­டுக்­காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. ஒன்று அரசாங்­கத்­துக்கும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான அண்­மைக்­கால விரிசல் இன்­னொன்று முஸ்லிம் காங்கிரஸ் மீது அது கொண்­டி­ருக்கும் (ஊடல்) கோபம் மற்­றொன்று அரசு தங்­களை ஏமாற்றி விட்­டது என்ற ஏக்கம்.

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சார்ந்த பிரச்­சி­னைகள் கிழக்கு மாகாண சபை நிறு­விய காலத்­தி­லி­ருந்தே ஆளும் ஐக்­கிய மக் கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்கு ஒரு தலை­யிடி தரும் விட­ய­மா­கவே இருந்து வந்­துள்­ளது என்­பது வெளிக்­காட்­டப்­ப­டாத ஒரு உண்மை.

2008 ஆம் ஆண்டு தேர்­தலின் பின் முஸ்லிம் பெரு­மகன் ஒருவர் கிழக்கின் முதல் அமைச்சர் ஆக்­கப்­பட வேண்­டு­மென்ற கோஷமும் கோரிக்கையும் புயல் போல கிளம்­பி­யி­ருந்த வேளையில் தான் அர­சாங்கம் தவிர்க்க முடி­யா­மலும் அண்டை   நாட்டு அர­சியல் அழுத்தம் காரணமா­கவும் எதிர்­கால தேவை கருதி ஒரு­வரை முதல் அமைச்­ச­ராக்­கிய போது அதை ஜீர­ணிக்க முடி­யாத நிலை­யிலும் அர­சாங்­கத்தின் முடி­வுக்கு கட்­டுப்­பட வேண்­டிய தேவை முஸ்லிம் தலை­மைப்­பீ­டங்­க­ளுக்கு அன்று ஏற்­பட்­டது.

ஆனால் இரண்­டா­வது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு செப்­டெம்­பரில் நடத்­தப்­பட்ட போது இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கு பல்­வேறு சவால்கள் காத்­தி­ருந்­தன.

கிழக்கை வெற்­றிக்­கொள்­வதன் மூலம் சர்­வ­தே­சத்­துக்கு தனது பலத்தை உறு­திப்­ப­டுத்­து­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கைக­ளுக்கு கிழக்கு மாகாண சபை போய்­வி­டக்­கூ­டாது என்ற கடு­மை­யான கவனம் பிரிந்து    நின்று போட்­டி­யிடும்  முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கின் ஆட்சியை தீர்­மா­னிக்கும் ஆசன பலம் கொண்­ட­தாக வந்து விடக்­கூ­டாது…

என்ற எல்லா வகை கவ­னப்­பா­டு­க­ளையும் கவ­னத்தில் கொண்டே    முஸ்லிம்சமூகத் தின் ஆத­ரவும் அனு­ச­ர­ணையும் இல்­லாமல் கிழக்கில் ஆட்­சியை அமைத்து விட முடி­யாது என்ற தேர்தல் யுக்­தி­யையும் மனங் ­கொண்டே கிழக்கின் முத­ல­மைச்சர் பத­வியை அமீர்­அ­லிக்கு வழங்க முடி­யு­மென்ற உடன்­பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதே­வேளை கிழ க்கு தேர்­தலில் 7 ஆச­னங்­களை தன­தாக்கிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­புடன் உடன்­பாடு கொண்டு விடு­மானால் கிழக்கு பறிபோய் விடும் என்ற கணிப்பின் அடிப்­ப­டையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்­கவும் உடன்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஆனால் தேர்தல்  முடி­வுக்குப் பின் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு வழங்­கு­வதா அல்­லது அமீர் அலிக்கு வழங்­கு­வதா? என்ற தர்க்க நிலை சார்ந்த உள்­ளகப் போர் கார­ண­மா­கவே அங்­கு­மில்­லாமல் இங்­கு­மில்­லாமல் தமது கட்­சியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மக­னுக்கு இப்­ப­த­வியை வழங்குவதன் மூலம்     உடன்­பாடு காண­மு­டி­யாத எல்லாப் பிரச்­சி­னைக்கும் தீர்­வாக அமைந்து விடு­மென்ற சாணக்­கி­யத்­துடன் தன் கட்சி சார்ந்த முஸ்லிம் பெரு­ம­க­ னுக்கு அந்­தப்­ப­த­வியை வழங்கி விட்­டது அர­சாங்கம்.

ஆனால் அர­சாங்கம் நினைக்­க ­வில்லை. இந்தப் பிரச்­சி­னை­யா­னது நீறு­பூத்த தன்மை கொண்­ட­தாக இருக்­கு­மென்று நினைக்­காத நிலை­யி­லே அமைச்சர் ரிஷா த் தின் இந்த விசனம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ ருக்­கி­றது.

இது இவ்­வாறு இருக்க பத­விக்­கா­லத்தை இரண்­டாக வகுத்துக் கொண்ட ஒரு உள்­ளா ர்ந்த ஒப்­பந்தம் பற்­றியும் இப்­பொ­ழுது பேசப்­ப­டு­கி­றது.

எனவே கிழக்கின் முதல் அமைச்சர் பதவி தங்­க­ளுக்கு வழங்­கப்­பட­ வில்­லை­யென அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசோ மறு­புறம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸோ பிணக்­கப்­ப­டு­கின்ற சூழ்­நிலை ­யொன்று தற்­பொ­ழுது எழுந்­துள்­ளதை ஆளும் அர­சாங்க கட்­சியோ அல்­லது அக்­கட் ­ சிக்கு பின்­னணி வகுத்துக் கொண்­டி­ருக்­கின்ற கடும்­போக்­கா­ளர்­களோ இல்­லாமல் பேரி­ன­வாத அமைப்­புக்களோ அங்­கீ­க­ரிக்க மாட்­டார்கள் என்றே கொள்ள வேண்டும்.

ரிஷாத் பதி­யுதீனின் விச­னத்தில் புட்­டுக்­காட்­டப்­பட்­டி­ருக்கும் இன்­னு­மொரு விடயம் தேர்தல் காலத்தை குறித்து வைத்து தாங்கள் இயங்­கப்­போ­வ­து­மில்லை. முஸ்லிம் மக்­களை ஏமாற்றும் கைங்­க­ரி­யங்­க­ளிலும் நாம் ஈடு­ப­டப்­போ­வ­தில்லை. எனவே தான் இனி­வரும் காலங்­களில் எல்லாத் தேர்­தல் ­க­ளிலும் நாம் தனித்து நின்றே போட்­டி­யி டப் போகின்றோம்.

இதுவே எமது கட்­சிக்கு ஆரோக்­கிய நிலையைக் கொண்டு வரு­மென அமைச்சர் ரிஷாத் குறிப்­பிட்­டுள்ளார். இது மறை­மு­க­மாக யாரைச்­சுட்டிக் காட்­டு­கி­றது எனப் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­ றது.

அமைச்­ச­ரவை மாற்றம் அல்­லது சீர­மை ப்பு நடை­பெ­று­கின்ற வேளை­களில் எல்லா ஊட­கங்­க­ளிலும் பொது மக்கள் மத்­தி­யிலும் பேசப்­ப­டு­கின்­றதும் பரப்­பப்­ப­டு­கின்ற விசயம் என்­ன­வென்றால் இம்­முறை அமைச்­ச­ரவை மாற்­றத்தில் அமீர் அலிக்கு மந்­திரிப் பதவி வழங்­கப்­படும் பிரதி அமைச்சர் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது என அந்த விடயம் பர­வ­லாக அடிக்­கடி பேசப்­ப­டு­கின்ற போதும் அந்த விடயம் இது­வரை நடை­பெற்­ற­தாக தெரி­ய­வில்லை.

இது­வரை இல­கு­காத்த கிளியைப் போல காத்­தி­ருந்து காத்­தி­ருந்து ஏமாற்றம் கண்ட கார­ணத்­தி­னா­லேயே அமைச்சர் ரிஷாத் மேல் மாகாண தேர்தல் விட­யத்­திலும் தனது ஆதங்­கத்தை ரிஷாத் வெளிக்­காட்­டி­யி­ருப்­பதை ஊகிக்க முடி­கி­றது.

இதே போன்­ற­தொரு பிணக்­கு­நிலை இலங்­கை­ய­ர­சாங்­கத்­துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையில் அண்­மைக்­கா­ல­மாக வெளிப்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தையும் அனு ­மா­னிக்க முடி­கி­றது.

காரணம் முஸ்லிம் காங்­கி ரஸின் கடு­மை­யான விமர்­ச­னங்­களை ஆட்­சி யின் கடும் போக்­கா­ளர்கள் ஏற்றுக் கொள்­ளாமை எல்­லா­வற்­றுக்கும் மேலாக ஜெனிவா மனித உரி­மை­யா­ணை­யா­ள­ரிடம் முஸ்லிம் காங்­கிரஸ் கைய­ளித்த அறிக்கை விவ­கா­ர­மென்­பதை ஏலவே சுட் டிக் காட்­டி­யி­ருக்­கின்றோம்.

முஸ்லிம் காங்­கி­ரஸைப் பொறுத்­த ­வரை கிழக்கு ஆட்­சி­யிலும் சரி ஏனைய விட­யங்­க­ளிலும் சரி அர­சாங்­கத்தை அடி­ப­ணிய வைக்க முடி­யாது.

ஏன் எனில் காங்­கி­ரஸின் கிழக்கு மாகாண ஏழு உறுப்­பி­னர்­க­ளுக்கும் மத்­திய அர­சாங்­கத்­துக்­கு­மி­டையில் சிறந்த உறவு காணப்­ப­டு­கின்­றது என்ற உண்­மையை புட்டு வைத்­துள்ளார் அசாத் சாலி.

பொது­வா­கவே இன்­றைய சூழ்­நி­லையில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மை ப்பு என்னும் விருட்­சத்தை சுற்­றி­யி­ருக்­கின்ற நிழல்­தேடு மரங்­க­ளான முஸ்லிம் சமூ­கத்­ தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற கட்­சி கள் பிணக்கு நிலை பெற்­றி­ருப்­பதைப் போன்ற மாயத்­தன்மை கொணடி­ருப்­ப­தையே அண்மைக்கால சம்­ப­வங்­களும் கரு த்து ஆடல்­களும் எடுத்­துக்­காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன.

அமைச்சர் ரவூப் ஹக்கீமை தேசத்­து­ரோகிப் பட்­டி­யலில் சேர்த்­தி­ருக்கும் கடும் போக்­கா­ளர்கள் ஜெனிவா மனித உரிமைப்போர் என்ற சர்­வ­தேச வில்­லங்­கத்­துக்குள்   இலங்­கை­ய­ர­சாங்கம் மாட்டிக் கொண்­டி­ருக்கும் இச்­ சிக்­க­லான சூழ்­நி­லையில் ஆளும் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின் உரித்­து­டைய நண் பரும்  அமைச்­ச­ரு­மான   ரிஷாத் பதியுதீன் அவர்கள் அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டது.

நாங் கள் ஏமாற்றப்பட்டு விட்டோம்  முஸ் லிம் சமூகத்துக்கு   இந்த அரசாங்கம் பல கெடுதிகளைச் செய்து கொண்டிருக்கிறது எனப் பகிரங்கமாக தெரிவித்திருப்பது கடும் போக்காளர்களுக்கும் இனவாதக் கட்சிக ளும் விசனத்தையும் வெறுப்பையும் உண் டாக்கும் விடயமாக அமையாதா என்ற சந் தேகங்களையும் உண்டாக்கியிருக்கிறது.

ஏற் கனவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது கடும் பாய்ச்சல் நடத்திக் கொண்டிருக்கும் மேற் படி இனவாதக் குழுக்களுக்கும் கடும் போக் காளர்களுக்கும் அமைச்சரின் இந்த விடயம் அவலைப்போல் ஆகி விட்டிருக்கும்.

இலங்கையின் சிறுபான்மை சமூகங் கள் மீது அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட முறையிலான கெடு பிடிகள் பற்றியே அமைச்சர் ரிஷாத் ஆளும் அமைச்சராக இருந்து கொண்டு உண்மை நிலைகளை வெளிச் சொல்லியிருக்கிறார் என்பது ஒரு பெரிய விடயந்தான்.

எது எப் படிப் பேசப்பட்ட போதும் ஆளும் அரசாங்கமானது முஸ்லிம் மக்களைப் பிரதிநி தித்துவப்படுத்தும் கட்சிகளை ஓரம் கட்ட முனைப்புக் காட்டி வருகின்றது என்ற கரு த்துப்பாடு முஸ்லிம் சமூகத்துக்கிடையே அதிருப்தியை வளர்த்துக் கொண்டு வரு கின்றது என்ற உண்மையை அங் கொன்றும்   இங்கொன்றுமாக அறிய முடிகிறது என ஒரு முஸ்லிம் புத்திஜீவி தெரிவித்திருந்தமை இவ் விடத்தில் நினைவு கூரத்தக்கது.

ஜெனிவா மனித உரிமைப் போரின் பின்னரோ அல்லது மேல் மாகாண சபை தேர் தல் முடிவுகளுக்குப் பினபோ நிலைமைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதை அறிவதில் அரசியல் விமர்சகர்கள் ஆவலாக வேயுள்ளனர்.

-திருமலை நவம்-

Exit mobile version