ilakkiyainfo

தொடரும் நெருக்குவாரங்கள்… (கட்டுரை)

வட­ப­கு­தியில் தமிழ் மக்கள் மீதும், புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்று சமூ­கத்தில் இணைந்­தி­ருப்­ப­வர்கள் மீதும் அரசு பெரும் நெருக்­கு­வா­ரங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது.
யுத்த காலத்தைப் போன்று சுற்றி வளைப்­புக்கள், வீடு வீடாகத் தேடுதல், சந்­தே கத்திற்கு உரி­ய­வர்­களைக் கண்காணித்தல், வீதி­களில் முக்­கிய சந்­தி­களில் போக்­கு­வ­ரத்து செய்யும் வாக­னங்­க­ளையும் பய­ணி­க­ளையும் கண்­கா­ணித்தல், தேசிய அடை­யாள அட்­டையைப் பரி­சீ­லனை செய்தல் போன்ற நட­வ­டிக்­கை­க ளில் இரா­ணு­வத்­தினர் இரவு, பக­லாக ஈடு­பட்டு வரு­கின்­றார்கள்.

இந்த இரா­ணுவ நட­வ­டிக்­கையின் மூலம் நாற்­ப­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆயினும் அந்த எண்­ணிக்கை இன்னும் அதி­க­மாக இருக்­கலாம் என்றே பலரும் நம்­பு­கின்­றார்கள். 

கைதுசெய்­யப்­பட்­ட­வர்கள் பற்­றிய சரி­யான தகவல்களும், புள்­ளி­வி­ப­ரங்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. கடந்த ஐந்து ஆறு வாரங்­க­ளாக இந்த நிலைமை தொடர்­கின்­றது.

இறுதி யுத்­தத்தின்போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற மனித உரிமை மீறல் மற்றும் மானுட நேய­மற்ற செயற்­பா­டுகள் குறித்து, குற்றம் சுமத்தி, அவற்­றுக்குப் பொறுப்புக் கூறு­மாறு அர­சாங்­கத்­திற்கு ஜெனிவா மனித உரிமை பேரவை பிரே­ரணை மூலம் கொடுக்­கப்­பட்­டுள்ள சர்வதேச நெருக்­க­டியே இதற்கு முக்­கிய காரணம் என பலரும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

பொறுப்புக் கூறும் விட­ய­மா­னது, சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை நடத்த வேண்டும், நடத்­தப்­படும் என்ற அள­விற்கு தீவி­ர­மா­கி­யி­ருக்­கின்றது. சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்­றுக்கு இட­ம­ளிக்க முடி­யாது.

உள்­ளூ­ரி­லேயே நாங்கள் விசா­ர­ணை­களை நடத்­துவோம் என்று அர­சாங்கம் பிடி­வாதமாகக் கூறி­யதை ஏற்று, அதற்­கான சந்­தர்ப்­பத்­தையும் ஐ.நா. மன்­றமும், சர்­வ­தே­சமும் வழங்­கி­யி­ருந்­தன.

ஆயினும் அரசு நடத்­திய உள்ளுர் விசா­ர­ணைகள், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்­த­வில்லை. ஐ.நா. மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக அமை­யவில்லை.
இதனால் பொறுப்பு கூறும் விடயம்  இலங்கை அரசின் எல்­லையைத் தாண்டி, சர்­வ­தேசமட்டத்திலான ஐ.நா. விசா­ரணை என்ற நிலை­மைக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது.

ஐ.நா. விசா­ர­ணைக்கும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்று வீறாப்­புடன் பதி­ல­ளித்­துள்ள அரசு, அத்­த­ கைய விசா­ர­ணை­களில் சாட்சியமளிப்பவர்களை, அர­சியல் சட்­டத்­தையும் நாட்டின் இறை­மை­யையும் மீறி­னார்கள் என குற்றம் சுமத்தி கைது செய்­யப்­போ­வ­தா­கவும் மிரட்­டி­யி­ருக்­கின்­றது.sureshஅது மட்­டு­மல்­லாமல், சர்­வ­தேச விசா­ர­ணை­களை நடத்­த­வி­டாமல் தடுப்­ப­தற்­கா­கவே, வட­ப­கு­தியில் பொது­மக்கள் மீதும், முன்னாள் போராளிகள் மீதும் இரா­ணுவ நெருக்­கு­வா­ரங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் கூறி­யி­ருக்­கின்றார்.

என்­னதான் நடக்­கின்­றது? 

சர்­வ­தேச அமைப்­புக்கள் மற்றும் புலம்­பெ­யர்ந்­துள்ள விடு­த­லைப்­பு­லி­களின் ஆத­ர­வா­ளர்கள் நாட்டில் மீண்டும் விடு­த­லைப்­பு­லி­களை அணிசேர்க்க முயற்­சிக்­கின்­றார்கள் என்று கூறி வந்த அர­சாங்­கமும், இரா­ணு­வத்­தி­னரும், இப்­போது கோபி என்ற ஒரு நபரின் தலை­மையில் இந்த மீளி­ணைவு முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகப் பிர­சாரம் செய்துவரு­கின்­றனர்.

கோபி­யுடன் இணைந்­துள்­ள­தாக வேறு இரு­வ­ரு­டைய பெயர்­க­ளையும் இணைத்து, அவர்­களின் பெயர் விப­ரங்கள் மற்றும் புகைப்­ப­டங்­க­ளுடன் வட­ப­கு­தி­யெங்கும் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.இவர்கள் பற்­றிய தக­வல்­களைத் தரு­ப­வர்­க­ளுக்கு பத்து இலட்சம் ரூபா சன்­மானம் வழங்­கப்­படும் என்ற அறி­வித்­தலும் வெளியாகியிருக்கின்றது.

இந்தச் சுவ­ரொட்­டிகள் நாட்டின் தலை­நகர் கொழும்­பிலும் ஒட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.விடு­த­லைப்­பு­லி­களை மீளி­ணைக்க முயல்­கின்­றார்கள் என்று இரா­ணுவப் பேச்­சாளர் உட்­பட இரா­ணுவ அதி­கா­ரி­களும், அரச தரப்பு அர­சியல் வாதி­களும், அர­சாங்­கமும் கூறிவரு­கின்ற போதிலும், தேடப்­ப­டு­கின்­றார்கள் என்று அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள சுவ­ரொட்­டிகள் மற்றும் பத்­தி­ரிகை அறிக்­கை­களில், தேடப்­ப­டு­ப­வர்கள் பல்­வேறு குற்றச்செயல்­க­ளுடன் சம்­பந் தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அதற்­கா­கவே அவர்கள் தேடப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தேடப்­ப­டு­ப­வர்கள் உண்­மை­யி­லேயே விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் ஒன்­றி­ணைக்க முயற்­சிக்­கி­ன்றார்கள் என்றால், ஏன் அவ்­வாறு இந்த அறி­வித்­தல்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று பொது­மக்கள் வின­வு­கின்­றார்கள்.

இவர்கள் பயங்­க­ர­வா­தத்தை மீண்டும் நாட்டில் உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள் என்றால், அர­சாங்கம் ஏன் அவர்­களைப் பயங்கரவாதிகள் என்று பகி­ரங்­க­மாகக் குறிப்­பி­ட­வில்லை என்றும் பொது­மக்கள் வினா எழுப்­பி­யி­ருக்­கின்­றார்கள்.

தேடப்­ப­டு­ப­வர்கள் தொடர்பில் அர­சாங்­கத்­திற்கும், இரா­ணு­வத்­திற்கும் சரி­யான தெளிவு இல்­லை­யென்றும், இது புலிப்­பூச்­சாண்டி காட்டி, போரினால் பாதிக்­கப்­பட்­டுள்ள  தங்­களை இம்­சிப்­ப­தற்­கா­கவே இந்த நாட­கத்தை அரசு அரங்­கேற்­றி­யி­ருப்­ப­தா­கவே மக்கள் சந்­தேகம் கொண்டிருக்­கின்­றார்கள்.தேடப்­ப­டுகின்ற கோபி என்­ப­வ­ருக்கு அடைக்­கலம் கொடுத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரி­லேயே கிளி­நொச்சி விசு­வ­மடு பகு­தியில் தமது வீட்­டிலிருந்த ஜெயக்­கு­மா­ரியும் அவ­ரு­டைய மகள் விபூ­சி­காவும் பெரிய இரா­ணுவ சுற்றிவளைப்­பொன்­றின்­போது கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

அந்தச் சந்­தர்ப்­பத்தில் கோபியைத் தேடிச் சென்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற பயங்­க­ர­வாத தடுப்புப், புல­னாய்வு பிரிவைச் சேர்ந்த உத்­தி­யோ­கத்தர் ஒருவர் மீது கோபி கைத் துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்து காயப்­ப­டுத்­தி­விட்டு தப்பிச்சென்­று­விட்டார் என்றும் இரா­ணுவ தரப்பில் தெரிவிக்கப்­பட்­டி­ருக்­கின்­றது.
இந்தச் சம்­பத்தைத் தொடர்ந்து கோபியைத் தேடும் படலம் ஒரு தொடர்­க­தை­யாக மாறி­யி­ருக்­கின்­றது. இதற்­கா­கவே சுற்றி வளைப்­புக்கள், தேடுதல்கள் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அரச தரப்பில் காரணம் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது.

பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­யெ­டுக்க அனு­ம­திக்க முடி­யாது. பொது­மக்கள் அதனை விரும்­ப­வில்லை. அவர்­களின் பாது­காப்­புக்­கா­கவே இந்த இரா­ணுவ நட­வ­டிக்கைள் மேற்­கொள்­ளப்­படு­கின்­றன என்று இரா­ணுவ பேச்­சாளர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.நெருக்­கு­வா­ரங்கள்

ஆனால் இந்த இரா­ணுவ நட­வ­டிக்கை கார­ண­மாக தாங்கள் அச்­ச­ம­டைந்­தி­ருப்­ப­துடன், அன்­றாட வாழ்க்­கையில் அமை­தி­யி­ழந்­தி­ருப்­ப­தா­கவே பொது­மக்கள் கூறு­கின்­றார்கள்.

 

தேடுதல் என்ற போர்­வையில் வீடு­க­ளுக்குள் புகுந்து அல­சு­வதும், புதி­ய­வர்கள் யாரேனும் வந்­தார்­களா?, வெளிநா­டு­களில் இருந்து யாரும் பணம் அனுப்­ பி­னார்­களா?,

பிறந்த இடம் எங்கே, எவ்­வ­ளவு காலம் தற்­போ­தைய இடத்தில் இருக்­கின்­றீர்கள்?, அதற்கு முன்னர் எங்­கி­ருந்­தீர்கள் என்ன செய்­தீர்கள் என்று கேள்­விகள் கேட்டு குடைந்­தெ­டுப்­ப­தா­கவும் சிலர் கூறு­கின்­றார்கள்.

கிரா­மப்­ப­கு­தி­களில் சில வேளை­களில் நீண்­ட­நேரம் இரா­ணு­வத்­தி­னரும் புல­னாய்­வா­ளர்­களும் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தனால் என்ன நடக்கப்போகின்­றதோ, யார் யாரைப் பிடித்துச் செல்லப்போகின்­றார்­களோ என்று தங்­க­ளுக்கு அச்­ச­மாக இருப்­ப­தா­கவும் அவர்கள் கூறுகின்­றார்கள்.

முன்னாள் போரா­ளி­களின் நிலை­மைகள் இதை விட மோச­மாக இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. புனர்­வாழ்வு பெற்று சமூ­கத்தில் இணை க்­கப்­பட்­டுள்ள தங்­களை படை­யினர் தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணித்து வரு­வ­துடன், அடிக்­கடி கூட்­டங்கள் நிகழ்­வுகள் என்று அழைத்து தமது நேரடித் தொடர்பில் வைத்­தி­ருக்­கின்­ற­போ­திலும், இப்­போது புதிது புதி­தாக வரு­ப­வர்கள் தங்­களைத் தேடி வந்து பதி­வு­களை மேற்கொள்வதாகக் கூறி­யி­ருக்­கின்­றனர்.

பதி­வு­க­ளுக்­காக வரு­ப­வர்கள் விடு­த­லைப் பு­லிகள் அமைப்பில் இருந்­தீர்­களா? எவ்வ­ளவு காலம் இருந்­தீர்கள், என்ன செய்தீர்கள், இப்­போது என்ன செய்­கின்­றீர்கள்?, வெளி­நாட்டுத் தொடர்­புகள் இருக்­கின்­றதா, வெளி­நா­டு­களில் இருந்து பணம் வரு­கின்­றதா?, ஏன் வரு­கின்­றது என்று கேள்விகளால் தங்­களைத் துளைத்­தெ­டுப்­ப­தா­ கவும், இதனால் தங்­க­ளுக்குப் பெரும் அசௌ­க­ரி­யங்கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அவர்கள் கூறி­யி­ருக்கின்­றனர்.

தங்­களைத் தேடி வரு­ப­வர்கள், தாங்கள் வேலை  க்குச் சென்­றி­ருந்தால் அல்­லது அலு­வல்கள் கார­ண­மாக வெளியில் சென்­றி­ருந்தால் தாங்கள் வரும் வரையில் பல மணித்­தி­யா­லங்­க­ளாக பதி­வுக்­காக வரு­ப­வர்கள் தமது வீட்டுப் பகு­தி­களில் காத்­தி­ருப்­பனால், அயல் வீடு­களில் உள்ளவர்களும் அச்­ச­ம­டைந்து, தங்கள் மீது வெறுப்­ப­டைந்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

புனர்­வாழ்வு பெற்று சுய­தொ­ழி­லுக்­காக வங்­கியில் கடன் எடுத்து தொழில் செய்­ப­வர்­களும் படை­யி­னரின் இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளினால் தொழில் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், வியா­பாரம் செய்யும் இடங்­களில் இவர்­களின் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­யினால் வாடிக்­கை­யா­ளர்கள் வரு­வது குறைந்து செல்­வ­தா­கவும், இதனால் வங்­கிக்கு கடன் செலுத்த முடி­யாத நிலமை ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இவ்வாறு பாதிக்­கப்­பட்­டுள்ள சிலர் வங்­கி­க­ளிடம் தங்­களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருப்­பது குறித்து எடுத்துக் கூறி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பொது­மக்கள் மற்றும் புனர்­வாழ்வு பெற்­றி­ருப்­ப­வர்கள் மீது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இந்தக் கண்­கா­ணிப்பு மற்றும் நெருக்­கு­வார நட­வ­டிக்­கைகள் அரசு கூறு­வ­தைப்­போல, விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் அணி சேர்­வதைத் தடுப்­பது மட்­ டுந்தான் நோக்­கமா என்­பது குறித்து தமிழ்த்­தே­சிய கூட்ட­மைப்பு சந்­தேகம் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.
இன அழிப்பு நோக்­கத்­துடன், தமிழ் இளைஞர், யுவ­தி­களின் நிம்­ம­தியைக் கெடுத்து, அவர்­க­ளு­டைய வாழ்­வி­டங்­களில் இருந்து வெளியேற்றுவதே அர­சாங்­கத்தின் நோக்கம் என்று பாராளு­மன்ற உறுப்­பினர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் கூறி­யுள்ளார்.

தமிழ் மக்கள் சமூக அடிப்­ப­டையில் தலை­மைத்­துவம் மிக்­க­வர்­க­ளாக மாறி­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே இத்­த­கைய இரா­ணுவ தேடுதல் மற்றும் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக சமூ­க­வி­ய­லா­ளர்கள் கரு­து­கின்­றார்கள்.

இளைஞர், யுவ­திகள் மத்­தியில் கிராம மட்­டத்தில் அல்­லது சமூக மட்­டத்தில் தலை­ வர்கள், புதிய தலை­மைகள் உரு­வா­கி­விடக் கூடாது என்பதை இந்தச் செயற்­பா­டுகள் நோக்­க­மாகக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் கருத முடியும் என்றும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

விடு­த­லைப்­புலிகள் பலம் பெற்­றி­ருந்த காலத் தில் சிங்­களப் பேரி­னத்தின் அர­சியல் சக் தியைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­காக ஆளு­மை­பெற்­றி­ருந்த சிங்­கள அர­சியல் தலை­வர்­களை குறிவை த்து தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள்.

அதே­பா­ணியில் வடக்கு – கிழக்குப் பிர­தே­சங்­களில் இளை­ஞர்கள் மத்­தி­யிலும், சமூ­கத்­திலும் செய­லூக்கம் மிக்­க­வர்­க­ளையும், தலை­மைத்துவத்தில் இருந்­த­வர்­க­ளையும் செய­லற்­ற­வர்­க­ளாக மாற்­று­வ­தற்­காக வகை­தொ­கை­யற்ற விதத்தில் அவ­ச­ர­காலச் சட்­டத்தின் துணையோடு பலர் கைதுசெய்­யப்­பட்­டார்கள் என்றும்….,

பலர் விடு­த­லைப்­பு­லி­களின் ஆத­ர­வா­ளர்கள், அல்­லது அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­டார்கள் என்று குறிப்­பிட்டு அடை­யாளம் தெரி­யாத வகையில் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்கள் என்றும் சமூ­க­வி­ய­லா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்கள். இப்­போ­தைய நிலையும் அந்த நிலை­மை­யுடன் ஒப்பு நோக்க தூண்­டப்­ப­டு­வ­தா­கவும் அவர்கள் கூறு­கின்­றார்கள்.புலம்­பெ­யர்ந்­த­வர்கள் மீதும் நெருக்­கு­தல்கள்

களத்தில் மட்­டு­மல்­லாமல் புலத்தில் உள்­ள­வர்கள் மீதும் இலங்கை அரசு தனது அதி­கா­ரத்­தையும் நெருக்­கு­தல்­க­ளையும் பிர­யோ­கித்­தி­ருக்­கின்­றது. புலம் பெயர் தமி­ழர்­களின் 16 அமைப்­புக்­களைத் தடை­செய்­துள்ள அரசு, அந்த அமைப்­புக்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எனக் குறிப்­பிட்டு, நானூ­றுக்கும் மேற்­பட்­ட­வர்­களை நாட்­டுக்குள் பிர­வே­சிக்க முடி­யாது எனக் கூறி தடை விதித்­தி­ருக்­கின்­றது.

இந்தத் தடை­யுத்­த­ரவை அர­சாங்கம் தனது வர்த்­த­மானிப் பத்­தி­ரிகை மூல­மாகப் பிர­க­ட­னப்­படுத்தியிருக்­கின்­றது, பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­யெ­டுக்கக் கூடாது என்­ப­தற்­காக, ஐ.நா. மன்­றத்தின் சட்ட விதி­யொன்றைத்  துணை­யாகக் கொண்டு தடை­செய்­யப்­பட்­டுள்ள தமிழர் நிறுவனங்­க­ளி­னதும், ஆட்­க­ளி­னதும் பெயர்ப் பட்­டி­யல்கள்  வெளி­யி­டப்­பட்­டி­ருக்கின்றன.

ஐ.நா. சபையின் பிர­க­ட­னங்­களை ஏற்று, அவற்­றுக்­க­மை­வாக செயற்­ப­டு­வ­தாக உறு­தி­ய­ளித்து, ஐ.நா. மன்­றத்தில் இலங்கை உறுப்­பு­ரிமை பெற்றி­ருக்­கின்­றது.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இந்த வரு­டத்­துடன் மூன்று பிரே­ர­ணகைள் அமெ­ரிக்­கா­வினால் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆயினும் மூன்று பிரே­ர­ணை­க­ளையும் இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றது.

ஐ.நா. மன்றப் பிர­க­ட­னங்­களை ஏற்­றுக’­கொண்­டுள்ள அதே­நேரம், ஐ.நா. மனித உரிமைப் பேரவை பிரே­ர­ணை­களின் மூல­மாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ள பொறுப்பு கூறல் கட­மையைச் செய்ய மாட்டேன் என்று அரசு அடம் பிடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

மறு­பு­றத்தில், ஐ.நா. மன்­றத்தின் விதி­மு­றை­யொன்றை கையில் எடுத்­துக்­கொண்டு, நானூ­றுக்கும் மேற்­பட்ட தமிழர்களையும், 16 தமிழர் அமைப்­புக்­க­ளையும் தனக்கு வச­தி­யாக இந்த அரசு தடை செய்­தி­ருக்­கின்­றது. முரண்­பா­டான இந்த செய்கை என்­பது இல ங்கை அர­சாங்­கத்தின் தனி முத்­தி­ரை­யென்றே சொல்ல வேண்டும்.

இறுதி யுத்­தத்­தின்­போது, இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதி­ரான காரி­யங்கள் என்­பன குறித்து பொறுப்பு கூறு­வ­தற்கு மறுப்பு தெரி­விக்­கின்ற அர­சாங்கம், அத்­த­கைய மீறல் நட­வ­டிக்­கை­களில் விடு­த­லைப்­பு­லி­களே ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்று பிர­சாரம் செய்து வருகின்­றது.

அத்­துடன், அந்த வகையில் அவர்கள் மேற்­கொண்­டி­ருந்த பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுக்கு அவர்­களே பொறுப்புக் கூற வேண்டும் என்றும், அரச படைகள் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்றும் எவரையும் அவர்கள் கொல்­லவில்லையென்றும் அரசியல்வாதிகளும், அர­சாங்­கமும் கூறி வரு­வதைக் காணலாம்.

யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற நிலை­யிலும், அரச தொலைக்­காட்­சி­களில் இன்­றைய  திக­தியில் அன்று நடந்­தது  என்ற தலைப்பில் விடு­தலைப்பு­லிகள் நடத்­திய தாக்­கு­தல்கள் பற்­றிய விவ­ரணக் காட்­சிகள் ஒவ்­வொரு நாளும் இப்­போது ஒளி­ப­ரப்­பப்­பட்டு வரு­கின்றது.

பல்­வேறு இடங்­க­ளிலும் விடு­த­லைப்­பு­லிகள் நடத்­திய காட்­சி­களைக் காட்டி, இரா­ணுவ சிப்­பாய்­க­ளான தேசிய வீரர்­களை விடு­த­லைப்­பு­லிகள் படு­கொலை செய்­தார்கள் என்றும், தேசிய வீர்கள் பலி­யாகிப் போனர்கள் என்றும், தேசிய வீரர்­களின் உயிர்­களைப் புலிகள் பறித்­தார்கள் என்றும் அரசு இதன் மூலம் பிர­சாரம் செய்து வரு­கின்­றது.
இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யையும் ஐக்­கி­யத்­தையும் எற்­ப­டுத்­து­வதே அர­சாங்­கத்தின் நோக்கம் என்று கூறிக்­கொண்டே, சிறுபான்மையின­ரா­கிய தமிழ் மக்கள் மீது பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கு நிரந்­த­ர­மான வெறுப்­பு­ணர்வை ஊட்­டத்­தக்க காரி­யங்­களை அது மேற்­கொண்டுவருதைக் காணலாம்.
இது, தொட்­டிலை ஆட்­டிக்­கொண்டே, குழந்தையைக் கிள்ளுகின்ற அரசாங்கத்தின் முரண்பாடான செயலேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.

மோசமான முப்பது வருட யுத்தத்தின் பின்னர், இறைமையுள்ள ஒரு ஜனநாயக அரசுக்கு இருக்க வேண்டிய, சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த அரசியல் நோக்கம் இல ங்கை அர­சாங்­கத்­திடம் இல்லை என்­பது வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது.இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அரசியல்தீர்வுகாண வேண்டும், அதன் ஊடாக இந்த நாட்டின்சிறுபான்மை இன மக்­க­ளுடன் பெரும்­பான்மை இன மக்கள்நல்­லி­ணக்­கத்­தோடும், ஐக்­கி­யத்துடனும் வாழ வழி செய்ய வேண்டும் என்றதேசிய ரீதி­யி­லான நல்­லெண்ணம் ஆட்­சி­யா­ளர் களிடம் இல்லை என்­பதும் வெளிச்­ச­மா­கி­யி­ருக்­கின்­றது.

இன அழிப்பை மறைமுக நிகழ்ச்சி நிர­லாகக் கொண்­டுதான் இந்த அரசு செயற்­ப­டு­கின்­றதோ என்ற சந்தேகத்தையும் இது உறுதிப்படுத்த முற்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, தேசிய ஐக்கியத்துக்கான மாநாட்டில் முக்கிய உரையாற்றிய ஜனாதிபதி இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது என்று குறிபபிட்டிருக்கின்றார்.

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இதே கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி நாட்டில் பெரும்பான்மையானவர்கள் என்பது அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் சிறுபான்மையினர் என்பது அரசுக்கு விரோதமானவர்கள் என்றும் வியாக்கியானம் கூறியிருந்தார்.

அந்த நிலைப்பாட்டை அவர் மீண்டும் நினைவூட்டி, நிலைநிறுத்தியிருப்பதன் மூலம், இந்த நாட்டில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தேவையே கிடையாது என்பதை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் உணர்த் தியிருக் கின்றார்.

சிறுபான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­களின் அர­சி யல் அபி­லா­ஷைகளை அடிப்­ப­டை­யா கக் கொண்ட இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பது தமிழ் மக்­களின் நிலைப்­பாடு.

நாட்டில் சிறு­பான்­மை­யி­னரே இல்லை­யென்றால், பிரச்­சி­னையும் இல்லை, பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற தேவை யும் இல்லையல்லவா?

செல்வரத்தினம் சிறிதரன்-

Exit mobile version