showImageInStory

குர்திஷ் மக்­க­ளுக்கு என்று ஒரு தனிப்­பட்ட 25 நூற்­றாண்டு வர­லாறு, கலா­சாரம், நிலப்­ப­ரப்பு, மொழி, சமயம் உண்டு. கி. பி 7-ஆம் நூற்­றாண்டில் மத்­திய கிழக்கில் இஸ்­லா­மிய மதம் பரப்­பப்­ப­டு­வ­தற்கு முன்னர் அவர்கள் யஜி­திசம் (Yazidism) என்னும் மதத்தைப் பின்­பற்­றினர்.

அவர்­க­ளது புனித நூல் கரும் புத்­தகம் என்று அழைக்­கப்­படும். இன்றும் அவர்­க­ளது மதம் நடை­மு­றையில் உண்டு. உல­கி­லேயே அதிக மக்­களைக் கொண்ட நாடில்­லாத  ஒரு தேசிய  இன­மாக தாம்  இப்­போது  இருப்­ப­தாக  குர்திஷ் மக்கள் பரப்­புரைச் செய்­கின்­றார்கள்.

உல­கெங்கும் மூன்று கோடி குர்திஷ் மக்கள் வாழ்­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. முதலில் குர்திஷ் இன மக்கள் அரபு மக்­களால் வெற்றி கொள்­ளப்­பட்டு ஆளப்­பட்­டார்கள். பின்னர் மங்­கோ­லி­யர்­க­ளாலும் உது­மா­னியப் பேர­ர­சி­னாலும் தொடர்ந்து மேற்கு ஐரோப்­பி­யர்­க­ளாலும் அவர்கள் ஆளப்­பட்­டனர்.

 மட்­ட­ர­க­மான அடி­மட்ட எல்லை

பிரான்ஸின் சார்பில் ஜோர்ஜஸ் பைக்கொட் என்­ப­வரும் பிரித்­தா­னி­யாவின் சார்பில் மார்க் சைக்ஸ் என்­ப­வரும் உது­மா­னியப் பேர­ர­சி­ட­மி­ருந்து கைப்­பற்றும் மத்­திய கிழக்குப் பிர­தே­சத்தை எப்­படிப் பகிர்ந்து கொள்­வது என்று இர­க­சி­ய­மாக செய்த உடன் ­படிக்கை சைக்ஸ்-­பைக்கொட் உடன் ­படிக்கை (Sykes–Picot Agreement) என அழைக்­கப்­ப­டு­கின்­றது.

இரு­வரும் அடி­மட்­டமும் பென்­சிலும் வைத்து மத்­திய கிழக்கின் வரை­ப­டத்தில் தமது அதி­கார எல்­லை­களை வகுத்துக் கொண்­டனர். உலகில் எங்­கு­மில்­லாத நேர் கோட்டு  எல்­லைகள் மத்­திய  கிழக்கு நாடு­க­ளி­டையே இருப்­பதை நாம் காணலாம்.

இதன்­படி சிரி­யாவும் லெப­னானும் பிரான்ஸ் வச­மா­னது. ஈராக், ஜோர்தான், பாலஸ்­தீனம் ஆகி­யவை பிரித்­தா­னி­யா­விற்கு சொந்­த­மாக்­கப்­பட்­டது. இவர்கள் வரைந்த எல்­லைகள் அங்கு வாழ்ந்த தேசிய இனங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து வகுக்­கப்­பட்­டவை அல்ல.

இதனால் பல தேசிய இனங்கள் தமது ஆட்சி உரி­மையை இழந்­தன. இதில் குர்திஷ் மக்­களும் அடங்­கு­வார்கள். ஷியா மற்றும் ஸுன்னி முஸ்­லிம்கள் அவர்­களின் விருப்­பத்­திற்கு மாறாக ஒரு நாட்டில் ஒரே ஆட்­சியின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டனர்.

அரபு –இஸ்­லா­மிய மயம்

கி. பி. 7ஆம்­ நூற்­றாண்­டில்­ அ­ரபுப் படை­யெ­டுப்­புக்­களால் குர்திஷ் இன மக்கள் அர­பு-­ – இஸ்­லா­மியப்படுத்­தப்­பட்­டனர். ஆனாலும் அவர்கள் இன்­று­வரை தமது தனித்­து­வத்தை இழக்­காமல் போரா­டு­கின்­றார்கள்.

இப்­போது குர்திஷ் மக்கள் என்றால் அவர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ஸுன்னி முஸ்­லிம்கள் என்னும் அள­விற்கு நிலைமை மாற்­றப்­பட்­டு­விட்­டது. குர்திஷ் மக்­களின் நாடா­கிய குர்­திஷ்த்தான் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடு­களால் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டு­விட்­டது. தமது வர­லாறு முழு­வதும் தாம் அய­ல­வர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­ட­தாக அவர்கள் கூறு­கின்­றார்கள்.

இனச்­சுத்­தி­க­ரிப்பு, இனக்­கொலை, பாரிய மனிதப் புதை­குழி, வேதி­யியல் குண்­டுகள் (இர­சா­யனக் குண்­டுகள்), பேர­ழிவு விளை­விக்கும் குண்­டுகள் ஆகி­யவை குர்திஷ் மக்­களின் வர­லாற்றுத் தட­யங்­க­ளாகும். மொழி பாவிக்கத் தடை, மத வழி­பாட்டுத் தடை, சமூக ஒதுக்கல், பொரு­ளா­தாரப் புறக்­க­ணிப்­புக்கள் ஆகியவற்றால் குர்திஷ் மக்கள் பாதிக்­கப்­பட்­டார்கள்.

தமது தேசி­யத்­திற்கு இறுதி உலை வைத்­தது லௌசான் உடன்­ப­டிக்கை (Treaty of Lausanne) என்­கின்­றார்கள் குர்திஷ் மக்கள். இந்த உடன்­ப­டிக்கை அவர்களது சுய­நிர்­ணய உரி­மையைப் பறித்­தது.

முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்­பிய நாடுகள் மத்­திய கிழக்கை லௌசான் உடன்­ப­டிக்­கையின் மூலம் தமக்குள் பங்கு போட்டுக் கொண்­டன. அதில் குர்­திஷ்த்தான் துண்­டா­டப்­பட்டு சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடு­க­ளுடன் இணைக்­கப்­பட்­டது.

இனக்­கொ­லைக்கு உள்­ளான குர்திஷ் மக்கள்

1990ஆம் ஆண்­டு­வரை துருக்­கியில் குர்திஷ் மொழி பொது இடங்­களில் நிறு­வ­னங்­களில் பாவிப்­பது தடை செய்­யப்­பட்­டி­ருந்­தது. துருக்­கியின் தென் கிழக்குப் பகு­தியில் வசிக்கும் குர்திஷ் மக்கள் பல்­வே­று­பட்ட மொழி மற்றும் கலா­சாரத் தடை­க­ளுக்கு இன்றும் உள்­ளாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அவர்கள் மத்­தியில் வேலை­யில்லாப் பிரச்­சினை 70 விழுக்­கா­டாக இருக்கும் அள­விற்கு அவர்கள் பொரு­ளா­தார ரீதி­யாக துருக்­கியில் புறக்­க­ணிக்­கப்பட்டுள்­ளார்கள்.

இரு­பதாம் நூற்­றாண்டில் மொத்தம் 4,000 குர்திஷ் கிரா­மங்கள் துருக்­கியப் படை­யி­னரால் அழிக்­கப்­பட்டு முப்­பது இலட்சம் குர்திஷ் மக்கள் வீடற்­ற­வர்­க­ளாக்கப்பட்­டனர்.

குர்திஷ் மக்கள் மிக மோச­மாக நடத்­தப்­பட்­டது ஈராக்கில் சதாம் ஹுசேய்னின் ஆட்­சியின் போதே. ஒரு இலட்­சத்து எண்­ப­தா­யிரம் குர்திஷ் மக்கள் சதாமின் ஆட்­சியில் கொல்­லப்­பட்­டனர்.

1974ஆ-ம் ஆண்டு குர்திஷ் மக்கள் தமது கேர்க்குக் பிராந்­தி­யத்தில் உள்ள எண்ணெய்க் கிண­று­களில் தமக்கு உரிமை வேண்டும் எனக் கோரி­யதால் ஈராக்கை ஆண்ட சதாம் ஹுசேய்­னிற்கும் குர்திஷ் மக்­க­ளுக்கும் மோதல் வெடித்­தது.

இர­சா­யன குண்­டுத்­தாக்­குதல் உட்­பட பல­வி­த­மான இனக்­கொ­லைக்கு குர்திஷ் மக்கள் உள்­ளாக்­கப்­பட்­டனர். பின்னர் சதாம் ஹுசேய்னை ஆட்­சியில் இருந்து அகற்­று­வ­தற்கு நேட்டோப் படை­க­ளுடன் குர்திஷ் மக்களும் இணைந்து செயற்­பட்­டனர். குர்­திஷ்த்தான் மக்­க­ளாட்சிக் கட்சி இரண்­டாகப் பிளவுபட்டது. நாட்­டுப்­பற்­றுள்ள குர்திஷ் ஒன்­றியம் என்னும் கட்சி உரு­வா­னது.

ஈராக்கில் ஒரு விடி­வெள்ளி

ஈராக்கில் ஸுன்னி , ஷியா, குர்திஷ் ஆகிய இனத்­த­வர்கள் வாழ்­கின்­றனர். மூன்றில் இரண்டு பங்கு ஷியா முஸ்­லிம்­களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்­தி­யத்தில் ஸுன்னி முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றனர்.

சதாம் ஹுசேய்ன் சிறு­பான்­மை­யி­ன­ரான ஸுன்னி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்­தவர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்­கிலும் சிரி­யா­விலும் உள்ள பிர­தே­சங்­களை இணைத்து ஓர் இஸ்­லா­மிய அரசை உரு­வாக்க வேண்டும் எனப் போரா­டு­கின்­றது.

இது திடீ­ரென ஈராக்கின் வட பிராந்­தி­யத்தில் உள்ள பல நக­ரங்­களைக் கைப்­பற்றி தலை­நகர் பாக்­தாத்தை நோக்கி முன்­னே­றி­வ­ரு­வது முழு உல­கத்­தை­யுமே ஆச்­ச­ரியப்படுத்­தி­யுள்­ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் எத்­தனை போரா­ளிகள் இருக்­கி­றார்கள் என யாருக்கும் தெரி­யாது.

சில கணிப்­பீ­டுகள் பத்­தா­யிரம் என்­கின்­றன. தம்­மிலும் பார்க்க பத்து மடங்கு அதிக எண்­ணிக்­கையைக் கொண்ட ஈராக்கின் அரச படை­களை சின்­னா­பின்­னப்­ப­டுத்தி வரு­கின்­றன.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்­ப­ரப்­பு­களைக் கைப்­பற்றிக் கொண்­டி­ருக்­கையில் நூறு ஆண்­டு­க­ளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்­மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வள­மிக்க கேர்குக் நக­ரத்தை ஒரு துப்­பாக்கிக் குண்டு கூட வெடிக்­காமல் கைப்­பற்றிக் கொண்­டது.


Iraqi Kurdish President Massoud Barzani
குர்திஷ் மக்­களின் தலைவர் மஸ் ஸோட் பர்­ஜானி குர்திஷ் மக்­க­ளுக்கு என்று ஒரு அரசு உரு­வாகிக் கொண்­டி­ருக்­கின்­றது என்றார். ஈராக்கில் ஸுன்னி முஸ்­லிம்­க­ளுக்கு என ஒரு அரசு, ஷியா முஸ்­லிம்­க­ளுக்கு என ஒரு அரசு, குர்­திஷ்­க­ளுக்கு என ஒரு அரசு என மூன்­றாகப் பிளவு படும் ஆபத்து இப்­போது அதி­க­ரித்­துள்­ளது.

இதில் ஸுன்னி முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக சவூதி அரே­பி­யாவும், ஷியா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக ஈரானும், குர்திஷ் மக்­க­ளுக்காக துருக்கியும் ஆத­ர­வாகச் செயற்­ப­டு­கின்­றன.

பல­கா­ல­மாக குர்திஷ் மக்­களின் சுதந்­திரப் போராட்­டத்தை எதிர்த்து வந்த துருக்கி இப்­போது அவர்­க­ளுடன் நல்­லு­றவை வளர்த்து வரு­கின்­றது. ஈராக்கில் குர்திஷ் மக்­க­ளுக்கு என ஒரு அரசு உரு­வானால் அது துருக்­கியின் நட்பு நாடாக அமை­வ­துடன் துருக்­கிக்கு ஒரு பாது­காப்பு அர­ணா­கவும் அமையும் என்ற நிலை இப்­போது உரு­வா­கி­யுள்­ளது.

எண்­ணெய் ­வ­ள­மிக்க குர்­திஷ்த்தான்

கேர்க்குக் நகரம் தமது முழு­மை­யான கட்­டுப்­பாட்டின் கீழ் குர்திஷ் மக்கள் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் திகதி கொண்டு வந்­த­தனால், நாள் ஒன்­றிற்கு ஆறு இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்­பத்தி செய்யக் கூடிய நிலையில் குர்திஷ் மக்கள் இப்­போது இருக்­கின்­றார்கள். பாக்­தாத்தில் உள்ள ஈராக்­கிய அரசு நிலை குலைந்­தி­ருப்­பதும் குர்திஷ் மக்­க­ளுக்கு பெரு வாய்ப்­பாக அமைந்­துள்­ளது.

குர்திஷ் பிராந்­திய அரசின் பேச்­சாளர் சுய­நிர்­ணய உரிமை என்­பது எமது அடிப்­படைச் சொத்து. அதை பேச்சு வார்த்­தைக்கு உட்­ப­டுத்த முடி­யாது என்றார். முன்னர் கேர்க்குக் நக­ரத்து எண்ணெய் வளத்தின் மூலம் வரும் வருவாய் முழு­வதும் பாக்தாத் அர­சுக்கே போய்ச் சேர்ந்­தது.

பின்னர் அதில் ஒரு­ப­குதி குர்திஷ் மாநில அர­சுக்கு வழங்­கப்­பட்­டது. 2014ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் இருந்து பாக்தாத் ஆட்­சி­யா­ளர்கள் குர்திஷ் மாநில அர­சுக்கு நிதி கொடுப்­பதை நிறுத்தி இருந்­தனர். இதனால் குர்திஷ் மாநில அரசு பெரும் நிதித் தட்­டுப்­பாட்­டுடன் இருந்­தது.

பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டிய வாய்ப்பு

ஈராக்கில் நிகழ்ந்த அர­சியல் மாற்­றத்தின் பின்னர் ஈராக்­கிற்குப் பயணம் செய்த அமெ­ரிக்க அரசு செயலர் ஜோன் கெரி, குர்திஷ் மக்கள் தனி­நா­டாகப் பிரிந்து செல்­வதை விட்டு ஈராக்கில் ஷியா, ஸுன்னி , குர்திஷ் மக்­களைக் கொண்ட ஓர் அரசு அமைக்க வேண்டும் என்றும் அதில் குர்திஷ் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

குர்திஷ் மாநில அரசு அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது. அமெரிக்காவும் ஈரானும் ஈராக்கில் ஒன்றிணைந்து செயற்பட முயன்று கொண்டிருக்கையில், சிரிய விமானங்கள் ஸூன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தின.

சிரிய விமானத் தாக்குதல் ஈராக்கில் அரசு நிலைகுைலந்து விட்டது என்பதை உறுதி செய்கின்றது. இதே வேளை, இஸ்ரேலிய விமானப் படைகள் சிரிய அரச படைகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. இப்படிப்பட்ட குழப்பமான சூழ் நிலையில் குர்திஷ் மக்கள் ஒற்றுமையாக நின்று தம் படைவலிமையை அதிகரித்து தம் சுதந்திரத்தை வென்றெடுக்கக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளது.

-வேல் தர்மா-

EXCLUSIVE: Iraqi Kurdistan leader Massoud Barzani says ‘the time is here’ for self-determination (CNN, June 23, 2014)
http://cnn.it/1uYWJxH

“Iraqi Kurdish President Massoud Barzani gave his strongest-ever indication on Monday that his region would seek formal independence from the rest of Iraq.

“Iraq is obviously falling apart,” he told CNN’s Christiane Amanpour in an exclusive interview. “And it’s obvious that the federal or central government has lost control over everything. Everything is collapsing — the army, the troops, the police.”

“We did not cause the collapse of Iraq. It is others who did. And we cannot remain hostages for the unknown,” he said through an interpreter.

“The time is here for the Kurdistan people to determine their future and the decision of the people is what we are going to uphold.”

Iraqi Kurdish independence has long been a goal, and the region has had autonomy from Baghdad for more than two decades, but they have never before said they would actually pursue that dream.

But the latest crisis, in which Sunni extremists have captured a large swath of Iraqi territory on the border of Iraqi Kurdistan, seems to have pushed the Kurds over the edge.

“Now we are living [in] a new Iraq, which is different completely from the Iraq that we always knew, the Iraq that we lived in ten days or two weeks ago.”

“After the recent events in Iraq, it has been proved that the Kurdish people should seize the opportunity now — the Kurdistan people should now determine their future.”

Barzani said that he would make that case to U.S. Secretary of State John Kerry when they meet in Erbil Tuesday; America is a close Kurdish ally, but opposes independence for the region…”

Share.
Leave A Reply

Exit mobile version