இந்தி­யாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வைச்சேர்ந்த சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தலை­மை­யி­லான பிர­மு­கர்கள் ஐவர், கடந்­த­வாரம் இலங்­கைக்குப் பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

கொழும்பு பண்­டா­ர­நா­யக்க மாநாட்டு மண்­ட­பத்தில் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த, “மோடி ஆட்­சியின் கீழ் இந்­தியா” என்ற தலைப்­பி­லான கருத்­த­ரங்கில் உரை­யாற்­று­வ­தற்கே அவர்கள் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ பக் ஷ ஆகி­யோ­ரையும் சந்­தித்துப் பேச்­சுக்­களை நடத்­தினர்.

சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தலை­மையில் கொழும்பு வந்­தி­ருந்த பா.ஜ.க. பிர­மு­கர்கள் எவரும், இந்­திய மத்­திய அர­சாங்­கத்தில் பதவி வகிப்­ப­வர்­க­ளல்ல.

ஆனால், முன்னர் அமைச்­சர்­க­ளா­கவோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவோ அல்­லது கொள்கை வகுப்­பா­ளர்­க­ளா­கவோ பணி­யாற்­றி­ய­வர்கள்.

அதே­வேளை, தற்­போ­தைய பா.ஜ.க. அரசின் கொள்கை வகுப்பில் இவர்கள் ஆதிக்கம் செலுத்­து­கி­றார்கள் அல்­லது ஆதிக்கம் செலுத்த முனை­கி­றார்கள் என்­பது முக்­கி­ய­மான விடயம்.

தமிழ்­நாட்டில் “அர­சியல் கோமாளி” என்று வர்­ணிக்­கப்­படும் சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி, இதற்கு முன்­னரும், அர­சாங்­கத்தின் விருந்­தா­ளி­யாக பல­முறை இலங்­கைக்கு வந்து சென்­றி­ருக்­கிறார்.

ஆனால், அப்­போது அவ­ரது வரு­கைக்கும், கருத்­துக்கும் கிடைத்­தி­ருந்த முக்­கி­யத்­து­வத்தை விட, இப்­போது அவ­ரது பய­ணத்­தி­னதும், கருத்­துக்­க­ளி­னதும் முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்­துள்­ளது.

முன்னர் இரண்டு முறை, இரா­ணுவம் நடத்­திய போர் அனு­பவக் கருத்­த­ரங்­கு­க­ளுக்­காக அவர் கொழும்பு வந்­தி­ருந்தார்.

அதை­விட, ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் கொண்டு வரும் முயற்­சி­களில் அமெ­ரிக்கா ஈடு­பட்­டி­ருந்த போது, அதனைத் தடுப்­பது குறித்து, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் ஆலோ­சனை நடத்­து­வ­தற்­கா­கவும் கொழும்பு வந்­தி­ருந்தார்.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தில், தனக்­குள்ள செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தை தடுக்க, சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி முயற்­சித்த போதும், அது பய­ன­ளிக்­க­வில்லை.

தாம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் சார்பில், அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­துடன் இது­பற்றிக் கலந்­து­ரை­யா­டி­யதை சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மியே வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இலங்கை அர­சாங்­கத்தைக் காப்­பாற்றும் ஒரு­வ­ராக, தன்னைத் தெளி­வாக நிலைப்­ப­டுத்­தி­யுள்ள சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி, இப்­போது பா.ஜ.க.வில் இணைந்து கொண்­டு­விட்ட நிலையில், அவ­ரது பய­ணத்­துக்கும் கருத்­து­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்­துள்­ளது.

இது சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மியின் கருத்து என்­ப­தற்­காக அல்ல. அவர் இருக்கும் இடமே இந்த முக்­கி­யத்­து­வத்தை அளித்­துள்­ளது. அதுவும், நரேந்­திர மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. அர­சாங்கம் பொறுப்­பேற்று இரண்டு மாதங்­களே ஆகி­யுள்ள நிலையில், இலங்கை தொடர்­பான அதன் நிலைப்­பாடு என்­ன­வென்ற கேள்வி அதி­க­மா­கவே இருந்து வரு­கி­றது.

இந்தச் சந்­தர்ப்­பத்தில் தான், பா.ஜ.க.வின் மூலோ­பாய செயற்­பாட்டுக் குழுவின் தலை­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி போன்­ற­வர்கள், கடந்­த­வாரம் கொழும்­புக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்கள் பா.ஜ.க.வின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில் செல்­வாக்குச் செலுத்தக் கூடிய நிலையில் இருந்­தாலும், அதனைத் தீர்­மா­னிக்கும் நிலையில் இருப்­ப­வர்­க­ளல்ல. ஆனால், இவர்கள் கொழும்பில் வெளி­யிட்ட கருத்­துக்­களை மேலோட்­ட­மாகப் பார்த்தால், இந்­திய மத்­திய அரசின் கொள்­கையைத் தாமே அமுல் படுத்தும்­ அதி­காரம் கொண்­ட­வர்கள் போலவே கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள்.

அதே­வேளை, கொழும்பில் சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி மற்றும் அவ­ரது குழு­வினர் வெளி­யிட்ட கருத்­துக்கள் இலங்கை அர­சாங்­கத்­துக்கு உற்­சாகம் கொடுக்கும் வகையில் அமைந்­தி­ருந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்கை அர­சாங்­கத்தின் ஏற்­பாட்டில் வந்­த­வர்கள், அதைத் தானே செய்­வார்கள்.

கொழும்­புக்குப் புறப்­பட முன்னர், ஹைத­ரா­பாத்தில் பி.ரி.ஐ. செய்­தி­யா­ள­ருக்கு அளித்த பேட்­டியில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தம்மை அழைத்­துள்­ள­தா­கவும், தாம் அங்கு செல்­வ­தா­கவும், கூறி­யி­ருந்தார் சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி.

எனவே, மோடி அர­சாங்கம் இலங்­கை­யு­ட­னான தனது உற­வுகள் எப்­ப­டி­யி­ருக்கும் என்­பது குறித்து விளக்­க­ம­ளிப்­ப­தற்­காக, பா.ஜ.க. குழுவை கொழும்­புக்கு அனுப்பி வைத்­தி­ருக்­க­வில்லை.

அந்தக் குழுவை இலங்கை அர­சாங்­கமே அழைத்து வந்­தி­ருக்­கி­றது.

நரேந்­திர மோடி அர­சாங்கம், கொழும்­புக்கு நெருக்­க­டி­களைக் கொடுக்கும் என்ற கருத்து, வலுப்­பெற்­றி­ருந்த சூழலில், இலங்கை அர­சாங்­கத்­துக்கு உற்­சாகம் அளிக்கும் வகையில் தான் இந்தக் கருத்­த­ரங்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டது. அதனை சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி குழு திற­மை­யா­கவே செய்து முடித்­தி­ருக்­கி­றது.

சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மியும், அவ­ரது குழு­வி­னரும் இங்கு வெளி­யிட்ட கருத்­துக்கள், பெரும்­பாலும், சம்­பிக்க ரண­வக்க, விமல் வீர­வன்ச போன்ற இலங்கை அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றுள்ள கடும்­போக்கு அமைச்­சர்­களின் கருத்­துக்­க­ளுடன் ஒத்துப் போகின்­ற­வை­யாக இருந்­ததை அவ­தா­னிக்­கலாம்.

குறிப்­பாக, ஐ.நா. விவ­கா­ரத்தில் செய்­யப்­பட்ட மோச­மான விமர்­ச­னங்­களைச் சுட்­டிக்­காட்­டலாம்.

ஒரு பக்­கத்தில் ஐ.நாவை நேட்­டோவின் ஒரு கரு­வி­யாக மாறி­விட்­ட­தாக பா.ஜ.க. குழுவில் இடம்­பெற்­றி­ருந்­த­வர்கள் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தாலும், இன்­னொரு பக்­கத்தில், அதே ஐ.நாவின் பாது­காப்புச் சபையின் நிரந்­தர உறுப்­பினர் பத­வியைப் பெறு­வ­தற்கு சீனா­வுடன் இந்­தியா கைகோர்க்கத் தொடங்­கி­யுள்­ள­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

அது­போ­லவே, இந்­திய அர­சாங்­கத்தின் வெளி­வி­வ­காரக் கொள்கை விட­யத்தில், குறிப்­பாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவு விட­யத்தில், பா.ஜ.க. குழு­வினர் எடுத்துக் கூறிய சில விட­யங்கள் முரண்­பா­டு­களைக் கொண்­ட­வை­யாக இருந்­தன என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டலாம்.

இலங்கை – – இந்­திய உற­வு­க­ளி­லி­ருந்து தமிழ்­நாட்­டையும், தமிழர் பிரச்­சி­னை­யையும் துண்­டிக்க வேண்டும் என்று சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி வெளி­யிட்ட கருத்து, அதில் முக்­கி­ய­மா­னது.

இது அவ­ரது நீண்­ட­காலக் கருத்­தா­கவே – கன­வா­கவே இருந்து வரு­கி­றது.

இது நிச்­சயம், அவ­ரது தனிப்­பட்ட கருத்­தாக இருக்­குமே தவிர, இந்­திய அரசின் கருத்­தாக இருக்க முடி­யாது. ஏனென்றால், தமிழ்­நாட்­டையும், தமிழர் பிரச்­சி­னை­யையும், புற­மொ­துக்கிக் கொண்டு இலங்­கை­யுடன் இந்­தி­யா­வினால் உற­வு­களைப் பேண முடி­யாது. அது யதார்த்­தத்­துக்குப் புறம்­பா­னது.

ஏனென்றால், இரு­நா­டு­க­ளிலும் “தமிழ்” என்ற ஒரே மொழியைப் பேசும் ஏழு கோடி வரை­யி­லான மக்கள் இருக்­கின்­றனர், இரு­நா­டு­க­ளிலும், வாழும் மக்­க­ளுக்கு இடையில் பூர்­வீகத் தொடர்­பு­களும், கலா­சார உற­வு­களும் இருக்­கின்­றன.

இவை­யெல்­லா­வற்­றையும் உதறித் தள்­ளி­விட்டு, இலங்­கை­யுடன் உறவை வைத்துக் கொள்­வ­தற்­கான ஒரு பொறி­மு­றையை புது­டில்லி உரு­வாக்­கினால், அது இந்­தி­யாவின் நல­னுக்கே ஆபத்­தா­னது.

தமிழ்­நாடும் இந்­தி­யாவின் ஒரு பகுதி என்­ப­தையும், அதற்கு இந்­தி­யாவின் நலனில் அக்­கறை உள்­ளது என்­ப­தையும், இந்­தி­யாவின் அணு­கு­மு­றையைத் தீர்­மா­னிக்­கின்ற பொறுப்பு அதற்கும் உள்­ளது என்­ப­தையும் சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி போன்­ற­வர்கள் மறந்து விட்­டனர்.

அதே­வேளை, தமிழ்­நாட்டின் நலன் மற்றும் விருப்­பங்­களை மதிக்க வேண்­டி­யது மத்­திய அரசின் பொறுப்பும் கூட.

இந்த இரண்டு தரப்­புக்கும் பொது­வான இந்த உறவைப் புறம் தள்ளிக் கொண்டு, இலங்­கை­யுடன் கைகோர்க்க புது­டில்லி முனைந்தால், அது இந்­தி­யாவின் பூகோள ஒரு­மைப்­பாட்­டுக்­கான சவா­லா­கவே மாறும்.

சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி சொல்­வது போலவே, தமிழ்­நாட்­டி­னதும், தமிழர் பிரச்­சி­னை­யையும் துண்­டித்து விட்டு, இலங்­கை­யுடன் இந்­தியா உறவு கொள்ள முடி­யு­மாக இருந்தால், காஷ்மீர் விவ­கா­ரத்தைத் துண்­டித்து விட்டு பாகிஸ்­தா­னுடன் உறவு கொள்ள முடி­யுமா? என்ற கேள்வி எழும். ஆனால் அப்­ப­டி­யொரு யோச­னையை சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மியால் கூற­மு­டி­யாது.

தமிழ்­நாட்டின் நலனை இந்­தி­யா­வினால் எவ்­வாறு புறக்­க­ணிக்க முடி­யாதோ, அது­போ­லவே இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையில் இந்­தி­யா­வுக்கு உள்ள பொறுப்­பையும் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது.

இந்த இரண்­டையும் புறக்­க­ணித்து விட்டு, புது­டில்லி கொழும்­புடன் உறவு கொள்ளும் முடிவை எடுக்­கு­மானால், அது­போன்ற வர­லாற்றுத் தவறு வேறொன்றும் இருக்க முடி­யாது.

ஆனால், அந்த தவறைச் செய்­வ­தற்கே சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி போன்­ற­வர்கள் புது­டில்­லியைத் தூண்­டு­கின்­றனர் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இது கொழும்­பி­லுள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இனிப்­பான கருத்­துக்­க­ளாக இருக்­கலாம். ஆனால், புது­டில்­லியில் உள்­ள­வர்­க­ளுக்கு அவ்­வாறு இருக்க முடி­யாது.

புது­டில்­லியைப் பொறுத்­த­வ­ரையில், வெளி­வி­வ­காரக் கொள்­கையில் மாநி­லங்­கள் தலை­யி­டு­வதை விரும்­ப­வில்லை என்று தெரி­கி­றது.

இது மத்­திய அர­சுக்கு கிடைத்­துள்ள பெரும்­பான்மை பலத்தில் இருந்து எடுக்­கப்­பட்­டுள்ள முடிவு மட்­டு­மே­யாகும்.

அதே­வேளை, தமிழ்­நாட்டு மக்­களின் ஆத­ரவு பெற்ற மாநில அர­சாங்­கத்தின் கருத்துப் புறக்­க­ணிக்­கப்­படும் போது அது, இந்­தியக் கூட்­டாட்சித் தத்­து­வத்­துக்கு உகந்­ததாக இருக்­காது.

இலங்­கை­யு­ட­னான உறவைப் பலப்­ப­டுத்­து­வதன் மூலம், இந்­தி­யாவின் நலனை உறு­திப்­ப­டுத்த முனையும் இந்­தியக் கொள்கை வகுப்­பா­ளர்கள் சிலர், இன்­னொரு பக்­கத்தில், இந்­தி­யாவின் உள்­நாட்டு மக்­க­ளி­னதும், மாநி­லங்­க­ளி­னதும் நலனைப் புறக்­க­ணிக்க வழி வகுக்கின்றனர்.

நரேந்­திரமோடி அர­சாங்கம் பத­வி­யேற்று இப்­போது தான் இரண்டு மாதங்­க­ளா­கி­யுள்ள நிலையில், சிக்கல் நிறைந்த இந்த விவ­கா­ரத்தில் எந்த முடி­வையும் எடுக்­க­வில்லை.

ஆனால், அதற்குள், சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி போன்ற தமக்குத் தாளம் போடக் கூடி­ய­வர்­களை வைத்து, புது­டில்­லியில் சாத­க­மான மாற்றம் ஒன்று நிகழ்ந்­தி­ருப்­ப­தாக காட்ட முனைந்­தி­ருக்­கி­றது அரசாங்கம்.

இது சிங்களத் தேசியவாதிகளுக்கு உற்சா கத்தையும், தமிழர்களுக்குச் சோர்வையும் கொடுத்திருக்கலாம்.

ஆனால், சுப்பிரமணியன் சுவாமியோ அவரது சகபாடிகளோ சொல்வது போலவே இந்தியா நடந்து கொள்ளும் முடிவுகளை எடுக்கும் என்று கூறுவதற்கில்லை.

ஏனென்றால், இவர்கள் பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பு நிலையில் இருந் தாலும், முடிவுகளை எடுக்கும் நிறைவேற்று அதிகாரம் இவர்களிடம் இல்லை.

(சத்­ரியன்)

Share.
Leave A Reply

Exit mobile version