காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இன்னுயிரை இழந்தது மட்டுமல்லாமல் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. காஸாவில் உள்ள மருத்துவமனைகளின் குழந்தைகள் பிரிவானது நிரம்பிக் காணப்படுகின்றது.
குழந்தைகள் பிரிவு:அல் ஸபி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 வயதான குழந்தை நூர். பெயிட் கானூனில் அமைந்துள்ள யுனைடெட் நேஷன்ஸ் பள்ளியில் படித்துவந்தவர்.
500 பேர் குழந்தைகள்: காஸாவில் உயிரிழந்த 1400 பேரில், 500 பேர் குழந்தைகள் என்று ஐநா சபை தெரிவித்துள்ளது.
குண்டு துளைத்த குழந்தை: மார்சூப் மோஷா எல் வான் என்ற 6 வயது குழந்தை தன்னுடைய கல்லீரலில் குண்டு துளைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றது.
முகமது அலைலா: காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 வயது சிறுவனான முகமது அலைலாவின் தாயிடம் பேசிய போது, அச்சிறுவன் மருத்துவமனை படுக்கையில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்துள்ளான்.
எங்களுக்கும் வேண்டும் சுதந்திரம்: காஸாவின் குழந்தைகளுக்கு சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லையா என்ன? மற்ற குழந்தைகள் மூலமாக ஏன் எங்களால் வாழ முடியவில்லை? உலகின் தலைவர்களிடம் நான் கேட்கின்றேன். எங்களுக்கான சுதந்திரமான வாழ்க்கையை அளியுங்கள்”.