அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பூட்டிய கார்களில் குழந்தையை மறந்துவிட்டோ அல்லது வேண்டுமென்றோ வைத்துவிட்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. பல நேரங்களில் கார்களில் குழந்தையை விட்டுவிட்டு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது குழந்தை வெப்பம் தாங்காமல், மூச்சுவிட முடியாமல் இறந்துபோன சம்பவம் நிறைய நடந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர்களுக்கு போலீஸார் பலமுறை எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தோறும் நடந்து வருவதாக கூறுகிறது. சில சமயங்களில் குழந்தைகளை 911 போலீஸார் விரைந்து வந்து கார் கண்ணாடிகளை உடைத்து குழந்தையை காப்பாற்றிய சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இதுபோன்ற ஒரு வித்தியாசமான சம்பவம் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியில் நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பூட்டப்பட்ட கார் ஒன்றில் குழந்தை ஒன்று பேச்சுமூச்சின்றி இருப்பதை பார்த்த பார்த்த ஒருவர், உடனே 911 என்ற அவசர போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அவசர போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது குழந்தையிடம் எந்த அசைவும் தெரியவில்லை. வேறு வழியின்றி 911 மீட்புப்படையினர் குழந்தையின் உயிரை காப்பாற்றும் நோக்கத்தில் கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை வெளியே எடுத்தனர். குழந்தையை வெளியே எடுத்ததும் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

911 மீட்புப்படையினர் வெளியே எடுத்தது குழந்தை அல்ல.. அச்சு அசலாம குழந்தை போன்றே இருக்கும் ஒரு பொம்மை. தூங்குவது போல் இருக்கும் பொம்மை ஒன்றை உண்மையிலேயே ஒரு குழந்தை என்று தவறாக நினைத்து கார் கண்ணாடியை உடைத்த 911 போலீஸார் அசடு வழிய நின்றிருந்தபோது,

காரின் உரிமையாளர் வந்து தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் 911 மீட்புப்படையினர் நடந்த தவறை கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டனர். உடைந்த கார் கண்ணாடிக்குரிய பணத்தை தந்துவிடுவதாக கூறினர்.

ஆனால் கார் உரிமையாளரான அந்த பெண், ‘பரவாயில்லை பணம் தேவையில்லை என்று கூறிவிட்டு தனது காரை எடுத்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் நியூஜெர்ஸி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply

Exit mobile version