மாவை சேனாதிராஜாவைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்குச் சிபாரிசு செய்திருக்கிறார் முதலமைச்சர் எங்கள் தங்கம் சிவசிவா விக்கினேஸ்வரன்.
தமிழர்களின் கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமில்ல, எதிர்காலமும் பாழாகப்போகுது. சத்தியமாகச் சொல்லிறன் தமிழரசுக் கட்சி தலையெடுத்து, அதுக்கு மாவை தலைவராக வந்தால் தமிழற்ற சரித்திரமே முடிஞ்ச மாதிரித்தான். இதை நான் ஒரு தயக்கமும் இல்லாமல் தீர்க்கதரிசனமாக அடிச்சுச் சொல்லுவன்.
மாவை அரசியலுக்கு வந்த காலத்தில இருந்து நானும் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறன். நாப்பது வருசமாக மாவையும் முழங்காத முழக்கமில்லை. பேசாத பேச்சில்லை. சந்திக்காத ஆட்களில்லை. பிடிக்காத காலில்லை. குடுக்காத வாக்குறுதிகளில்லை.
ஏதோ எல்லாத்தையும் வெட்டிப்புடுங்குகிறமாதிரி மேடையில பேசுவாரே தவிர, ஒரு வாழைப்பழத்துக்கு ஒழுங்காகத் தோலை உரிக்கவே தெரியாத கேஸ்தான் மாவை.
இல்லாட்டிக்கு, இந்த நாப்பது வருச அரசியல் பணியில மாவை சாதிச்சது என்ன?
மாவையினால் எங்கட தமிழ்ச்சனங்கள் பெற்ற நன்மைகள் என்ன?
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மாவை செய்த பங்களிப்புகள் என்ன?
போராட்டத்திலயோ போர்க்காலத்திலயோ மாவை செய்த முக்கியமான காரியங்கள் என்ன?
போருக்குப் பிந்தி, பாதிக்கப்பட்ட சனங்களுக்கு மாவை செய்த தொண்டுகள் என்ன?
இப்பிடியே மாவையைப் பார்த்து ஆரும் ஆயிரம் கேள்விகளைக் கேட்கலாம். ஒரு கேள்விக்குக் கூட மாவையினால் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாது.
ஆனால், இந்த நாப்பது வருச அரசியல்ல மாவையும் அவற்றை குடும்பமும் நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கு.
தமிழரசுக்கட்சி மாவைக்கும் அவற்றை அடிப்பொடிகள் நாலைஞ்சு பேருக்கும் சோறு போட்டிருக்கு. பிளேன்ரி ஊத்தியிருக்கு. ஐஸ்கிறீம் குடுத்திருக்கு. பாராளுமன்றத்தில் கதிரையைக் குடுத்திருக்கு. அந்தக் கதிரையால ஏகப்பட்ட வசதிகளும் சலுகைகளும் கிடைச்சிருக்கு.
மாவையின்ரை பெடியள் தேர்தல் காலத்தில லண்டனில இருந்து வந்து தேர்தற்பணியைச் செய்யக் கூடியமாதிரி ஒரு வாழ்க்கையை மாவை பெற்றிருக்கிறார்.
இதைத்தவிர, மாவை தன்ரை வயசுக்கும் அரசியல்ல இருந்த காலத்துக்கும் என்ன பயனை இந்தத் தமிழ்ச்சனத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் அவர் அடிக்கடி வாய்கூசாமல் உச்சரிக்கிற தமிழீழத்துக்கும் செய்திருக்கிறார் எண்டு சொல்லட்டும் பாப்பம்.
இதை அவற்றை அடிப்பொடிகளில ஆராவது ஒருத்தன் வந்து முன்னுக்கு நிண்டு சொல்லி நெஞ்சை நிமித்தட்டும் பாக்கலாம். உண்மையில மனச்சாட்சி இருந்தால் மாவை அரசியல்லயே இருந்திருக்கப்படாது.
அப்பிடி இருக்கிறதாக இருந்தாலும் இந்த மாதிரிப் பேய்க்கதைகளை எல்லாம் கதைக்கிறது பொருத்தமில்லை.
வட்டுக்கோட்டைத்தீர்மானம் இப்ப சிரிப்புக்கிடமான சங்கதியாகீட்டுது.
தமிழீழம் எண்டு ஆரும் இப்ப சொன்னால் அதை நினைச்சு, அதைப்பற்றிச் சொல்லிறவற்றை அறிவைப் பார்ததுச் சிரிக்கத்தான் வேணும்.
13 ஆவது சரத்தையே நிறைவேற்ற வைக்க முடியாமல் இருக்கேக்க, தமிழீழத்தைப்பற்றிக் கதைச்சால் ஆருக்குத்தான் சிரிப்பு வராது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் போகமாட்டம்.
வலிவடக்கில் பெரும் போராட்டம் நடக்கும்.
சர்வதேச சமூகத்துக்குச்சொல்லி இலங்கை அரசுக்கு நல்ல பாடம் படிப்பிப்பம் எண்டமாதிரியெல்லாம் மாவை இப்பவும் புலுடா விட்டுக்கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் பழக்கதோசத்தில ஏதோ புலம்பிக்கொண்டிருக்கிறார்.
மாவைக்குத் தெரியும் இதெல்லாம் பச்சைப்பொய்யெண்டு. ஆனாலும் பொய்சொல்லிப் பழகின வாய் உண்மையைச் சொல்லக் கூசும்.
இல்லாவிட்டால், கடவுள்தான் இனித் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேணும் எண்டு சொல்லி, எஸ்.ஜே.வி. செல்வநாயகமே தமிழரசுக்கட்சியைக் கைவிட்டபிறகும் அதைத் தூக்கி வைச்சுக்கொண்டு பிலாக்கணம் பாடுவாரா மாவை.
செல்வநாயகத்தின்ரை காலத்துக்குப் பிறகு தமிழரசுக்கட்சிய என்ன புதுமைகளைச் சேர்த்திருக்கினம் எண்டு ஆரும் சொல்லுங்கோ பார்ப்பம்.
ஏதாவது புதிய தந்திரோபாயங்கள்… ஏதாவது புதிய சரக்குகள்…முந்தி இருந்த ஆட்களை விட இப்ப இருக்கிற ஆட்கள் அழுகின வெங்காயங்கள்….
இந்தக்கோலத்திலதான் மாவை தமிழரசுக்கட்சிக்குப் போக்கஸ் லைற்றைப்போடப்போறாராம்…!
செத்துப்போன அந்தப் பிணத்துக்கு (தமிழரசுக்கட்சிக்கு – பழைய ஏ40, மைனர் கார்களைப் புதுப்பிக்கிறமாதிரி) அலங்காரம் பண்ணி ஊர்வலம் விடுகிறதிலதான் தமிழ்க் கூட்டமைப்பில கனபேருக்குக் கொள்ளை விருப்பம்.
ஆனால், அதெல்லாம் சரிப்பட்டு வராது.
அதாவது தமிழரசுக் கட்சியை வைச்சும் மாவையை வைச்சு நிமித்தலாம் எண்டால்… தமிழற்றை அரசியல் தலைவிதி சுடுகாட்டிலதான் போய் முடியும்.
மாவைக் கந்தா… மாவையிட்டயிருந்து தமிழர்களைக் காப்பாற்றய்யா….