ilakkiyainfo

இரண்டு கால்களும் இல்லாத ஜார்ஜியா நபரின் உலக சாதனை.

ஜார்ஜியா நாட்டை சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் தன்னுடைய கைகளினால் உடலை தூக்கி எழுப்பும் push-up என்னும் உடற்பயிற்சியில் உலக சாதனை புரிந்துள்ளார். அவர் 38.25 வினாடிகளில் 36 முறை தன்னுடைய உடலை push-up செய்து சாதனை படைத்துள்ளார்.

ஜார்ஜியா நாட்டின் Corporal Temur Dadiani, என்றா 22 வயது வாலிபர் இரண்டு கால்களும் இல்லாதவர். பிறவியிலேயே கால்கள் இல்லாமல் பிறந்த இவருக்கு நம்பிக்கை மட்டும் மிக அதிகம் இருந்தது. கால்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற வெறி இவருடைய மனதில் இருந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் இவர் தனது கைகளினால் உடலை தூக்கி நிறுத்தும் push-up என்னும் உடற்பயிற்சியை மிகவும் விருப்பத்துடன் செய்துவந்தார். அப்போதுதான் அவர் இந்த push-up உடற்பயிற்சியிலேயே உலக சாதனை செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. இதன்பின்னர் முறையான பயிற்சியாளர் ஒருவரை வைத்து கடுமையாக பயிற்சி செய்ததன் விளைவாக நேற்று 38.25 வினாடிகளில் 36 முறை தன்னுடைய உடலை push-up செய்து சாதனை புரிந்தார். அவருக்கு ஜார்ஜியா நாட்டின் ராணுவ தலைவர் Vakhtang Kapanadze அவர்கள் உலக சாதனை சான்றிதழை வழங்கி கெளரவித்தார்.

kalkal 1

Exit mobile version