சீனாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து அதை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்துள்ளான். இந்த கொடியவனை சீன போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
சீனாவை சேர்ந்த 30 வயது Henry Chau Hoi-leung என்ற நபர் தனது நண்பர் Tse Chun-kei என்பவருடன் சேர்ந்து வயதான தனது பெற்றோர்களை கொலை செய்துள்ளான்.
அதுமட்டுமின்றி பெற்றோர்களின் தலையை தனியாக வெட்டி எடுத்து உப்புடன் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அந்த தலைகளை பிரிட்ஜில் வைத்து விட்டான். பின்னர் மீதியிருந்த உடல் பகுதிகளை துண்டு துண்டாக வெட்டி, சமையல் செய்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்துள்ளான்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் வெட்டப்பட்ட தலையை பிரிட்ஜில் இருந்து கண்டுபிடித்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் Henry Chau Hoi-leung என்பவனே அவனது பெற்றோர்களை கொலை செய்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவனையும் அவனது நண்பரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். கொல்லப்பட்ட குற்றவாளியின் தந்தை Chau Wing-ki, 65, தாய் Siu Yuet-yee, 62, என்பது குறிப்பிடத்தக்கது. ஈவு இரக்கமின்றி பெற்றோர்களையே கொலை செய்த இந்த குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என சீனாவில் உள்ள இணையதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.