கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்குவதாகவும், இதனால் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாகவும் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பொதுவாக கருவுற்றிருக்கும் பெண்கள் சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுவதுண்டு. ஆனால், சில நாடுகளில் கர்ப்பிணிகள் தங்களது உடற்சூட்டை கருத்தில் கொண்டு மது அருந்துகின்றனர்.
இங்கிலாந்தில் மது அருந்தும் கர்ப்பிணிகள் குறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே போதையின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
பெண்களின் கொடிய போதைப் பழக்கம் அவர்களை மட்டுமின்றி, அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாழ்படுத்தி விடுவதாக அந்த ஆய்வு கவலை தெரிவித்துள்ளது.
இதன்படி, வேல்ஸ் மாகாணத்தில் 464 குழந்தைகளும், ஸ்காட்லாந்தில் 738 குழந்தைகளும், இங்கிலாந்தில் 6,599 குழந்தைகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்துள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.