சீனாவில் பெண் ஒருவர் கொஞ்சம் கூட சலிக்காமல், 26 திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். சீன அரசின் குடும்பக் கட்டுப்பாடு சட்டம்தான் இந்தப் பெண்ணை இப்படி அடிக்கடி கல்யாணம் செய்ய வைத்துள்ளது.
ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த 40 வயதுப் பெண்மணி. சமீபத்தில் தான் இவர் தனது முன்னாள் கணவர் மூலம் கருவுற்றிருப்பதைத் தெரிந்துகொண்டார்.
இதனால் தற்போதைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய கணவரையே மறுமணம் செய்துகொண்டார். இவரது கதையைப் படித்தால், சூரியனைச் சுற்றி வரும் பூமியைப் போல சுற்றுவதை நீங்களே ஃபீல் பண்ணுவீர்கள்.
பழைய கணவருக்கு ஒரு குழந்தை கூட கிடையாது. இதனால் அவர் தான் குழந்தைக்குத் தந்தையாகவிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். பழைய மனைவியை மறுபடியும் மணக்கவும் சம்மதித்தார்.
சீனாவில் சமீப காலம் வரை “ஒரு குடும்பம் ஒரு குழந்தை” என்ற கொள்கை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தற்போதுதான் இந்தக் கொள்கையை அரசு சிறிது தளர்த்தி இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் சட்டப்படி அந்தக் கணவர் மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாக முடியாது.
இந்த சிக்கலைத் தீர்க்கும்பொருட்டு அந்தப் பெண் புதிய கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய கணவரை மணந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
பழைய கணவருக்கு ஒரு குழந்தை கூட கிடையாது. இதனால் அவர் தான் குழந்தைக்குத் தந்தையாகவிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். பழைய மனைவியை மறுபடியும் மணக்கவும் சம்மதித்தார்.
இதுவரை 15 ஆண்களைத் திருமணம் செய்துள்ள இந்தப் பெண் அவர்களில் 9 பேரை மறுமணமும் செய்துகொண்டாராம்.
இப்படியே இவர் இதுவரை மொத்தமாக 26 கல்யாணம் செய்துள்ளாராம். ஒருவரைத் திருமணம் செய்து குழந்தைகளை படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டுவரவே விழி பிதுங்கும் இந்த காலகட்டத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பலரை மணம் புரிந்த இந்தப் பெண்ணை பற்றி கேட்டாலே இதயம் நின்றுவிடும் போல இருக்கின்றது.
Post Views: 35