ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக் கொள்­வது தற்­கொலை எனப்­படும். இவ்­வு­லகில் வாழ முடி­யாது என்று கருதும் பட்­சத்­தி­லேயே மனிதன் தற்­கொலை செய்து கொள்­கின்றான்.

தற்­கொ­லையில் செல்­வாக்கு செலுத்தும் கார­ணிகள்

* குடும்ப மற்றும் கணவன் மனைவி உற­வு­களில் ஏற்­படும் விரிசல் நிலை.

* பொரு­ளா­தார மற்றும் கடன் தொல்லை (ஏமாற்றம், நஷ்­ட­ம­டைதல்)

* பரீட்­சையில் தோல்வி அடைதல்.

* காதலில் தோல்வி அடைதல் (தனி நபர் காதல், பெற்றோர் எதிர்ப்பு)

* சமூக பிரச்­சி­னைகள் (பசி, பட்­டினி, பஞ்சம், வறுமை மற்றும் பாது­காப்­பற்ற சூழல்)

* முதுமை, நம்­பிக்­கை­யி­ழத்தல், அதிக உடல் வலி, பகி­டி­வதை மற்றும் தங்­க­ளது மொடல்­க­ளாக கரு­தப்­படும் நடி­கர்கள், நடி­கைகள், மதத் தலை­வர்­களின் மரணம் போன்ற இதர கார­ணி­களும் தற்­கொ­லையை தூண்டும் கார­ணி­க­ளாகும்.

அல்­லாஹ்­வையும் மறுமை வாழ்­வையும் ஏற்றுக்கொண்ட ஓர் மனிதன் தனக்கு எவ்­வா­றான துன்­பங்கள் நேர்ந்­தாலும் அதனை விதி (கழா) மேல் சுமத்திவிட்டுத் தனது எதிர்­காலப் பணி­களை முன்­னெ­டுப்பான். இச் செய­லையே இஸ்லாம் வர­வேற்­கின்­றது. இதற்கு எதிர்மாறாக செயற்­படும் போது அவன் ஈருல­கிலும் கைசேதப்­ப­டு­கின்றான் என்று இஸ்லாம் கூறு­கின்­றது.

தற்­கொலை நரகம் கொண்டு செல்லும்

ஒரு­வ­ருக்கு ஒரு காயம் இருந்­தது. (இதை தாங்க முடி­யாமல்) அவர் தற்­கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ் என் அடியான் அவ­னது மரணத்தில் அவ­ச­ரப்­பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவ­னுக்கு சொர்க்­கத்தை நான் ஹரா­மாக்கி விட்டேன் எனக் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

(நூல்: புஹாரி 1364)

ஜனாஸா தொழுகை தடை

அக­ல­மான அம்பால் தற்­கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்­க­ளிடம் கொண்டு வரப்­பட்ட போது அவ­ருக்­காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்­க­வில்லை.

(நூல்: முஸ்லிம் 1779)

மறுமை வாழ்வு

யார் தனது கழுத்தை நெரித்து தற்­கொலை செய்­கின்­றாரோ அவர் நர­கத்­திலும் தனது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார்.

யார் ஆயு­தத்தால் தன்னை குத்தி கொண்டு தற்­கொலை செய்து கொண்­டாரோ அவர் நர­கத்­திலும் அவ்­வாறே செய்து கொண்­டி­ருப்பார்.

யார் மலை மீது ஏறி கீழே குதித்து தற்­கொலை செய்­கின்­றாரோ அவரும் நர­கத்தில் அவ்­வா­றான செய­லையே செய்து கொண்டு இருப்பார்.

யார் விஷத்தை குடித்து தற்­கொலை செய்­கின்­றாரோ அவரும் நர­கத்தில் அச் செய­ல­லையே செய்து கொண்­டி­ருப்பார்.

(நூல்: புஹாரி 1365)

குர்ஆன், ­ஹதீஸ் கூறும் உள­வி யல் அறி­வு­ரைகள்

ஒரு மனி­த­னுக்கு வாழ்வில் துன்­பங்கள் ஏற்­படும் போது அதனை அவன் எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதை உள­வியல் ரீதி­யாக குர்ஆன் ஹதீஸ்கள் கூறு­கின்­றன.

யாருக்கு அல்லாஹ் நலனை நாடு­கின்­றானோ அவர்­களை அல்லாஹ் சோதிப்பான்

(நூல்: புஹாரி 5645)

நம்­பிக்கை கொண்டோம் என்று கூறி­யதன் கார­ண­மாக சோதிக்­கப்­ப­டாமல் விடப்­ப­டு­வார்கள் என மனி­தர்கள் நினைத்து விட்­டார்­களா?

(குர்ஆன் 29:02)

ஓர­ளவு அச்­சத்­தாலும் பசி­யாலும்  செல்­வங்கள், உயிர்கள் மற்றும் கனி­களின் விளைச்­சல்கள் ஆகி­ய­வற்றில் குறைவைக் கொண்டும் நிச்­ச­ய­மாக நாம் உங்­களைச் சோதிப்போம். மேலும் நபியே பொறு­மை­யு­டை­யோ­ருக்கு நற்­செய்தி கூறு­வீ­ராக. (குர் ஆன் 2: 155)

இறை நம்­பிக்­கை­யு­டைய ஆண் பெண் தமது விஷ­யத்­திலும் தமது பிள்­ளைகள் விஷ­யத்­திலும் தமது செல்­வங்­க­ளிலும் தொடர்ந்து துன்­பங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். அல்­லாஹ்வை சந்­திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்­றமும் மீத­மி­ருக்­காது.

(நூல்: அஹ்மத்:7521 திர்­மிதி: 2323)

ஒரு மனி­த­னுக்கு மறு­மையில் நன்மை செய்ய நபி­யினால் இவ்­வு­ல­கி­லேயே அவ­னுக்கு தண்­ட­னையை முன்­கூட்­டியே அளித்து விடுவான்.

(நூல்: திர்­மிதி 2319)

மற்றும் ஒரு மனி­த­னுக்கு எத்­த­கைய துன்­பங்கள் நேர்ந்­தாலும் அவ­னது பாவங்கள் மன்­னிக்­கப்­ப­டு­கின்­றன.

(நூல்: புஹாரி 5641)

மர­ணத்­துக்­காக துஆ செய்­வதும் தடை­யாகும்

நபி (ஸல்) அவர்கள் பின்­வரும் சந்­தர்ப்­பத்­தி­லேயே மர­ணத்­துக்­காக துஆ கேட்க முடியும் என கூறி­யுள்­ளார்கள்.

தான் வாழும் வாழ்க்கை சிறந்­த­தாக அமைந்தால் என்னை வாழவை. தான் வாழும் வாழ்க்கை கெடு­தி­யாக அமையப் போகு­மானால் என்னை மர­ணிக்க செய்­தி­டு­வா­யாக.

(நூல்: புஹாரி 5671)

இன்­றைய நிலை­மை­களும் தீர்­வு­களும்

இன்று தற்­கொலை ஆண், பெண், சிறு­வர்கள், இளை­ஞர்கள், முதி­ய­வர்கள் என்று பாராது நாட்­டுக்கு நாடு நடை­பெற்­றுக்­கொண்டே இருக்­கின்­றது.

அந்த வகை­யில் எமது இளையோர் சமு­தாயம் முகப்­புத்­தகம், காதல் தடை பகி­டி­வதை, பரீட்­சையில் தோல்வி மற்றும் பெற்­றோர்­களின் கண்­டிப்பு கார­ண­மாக உடல் உள ரீதி­யாக தாக்­க­முற்று தற்­கொலை செய்து கொள்­கின்­றனர்.

அதேபோல் பெரி­யோர்­களும் கடன் தொல்லை, பொரு­ளா­தார நட்டம் லீஸிங் கம்­ப­னிகள், ஏஜென்­டு­களின் பண மோச­டிகள் மற்றும் வறுமை கார­ண­மாக, தற்­கொலை செய்து கொள்­கின்­றனர்.

அதேபோன்றே பெண் சமு­தா­யமும் குடும்­ப­வியல் பிரச்­சி­னைகள் கணவன் – மனைவி தக­ராறு கணவன் மாற்­றா­ளுடன் தொடர்பு, பாலியல் துஷ்­பி­ர­யோகம், குடி போதை, சித்­தி­ர­வதை, வர­தட்­சணை கொடுமை போன்ற கார­ண­மாக தற்­கொலை செய்து கொள்­கின்­றனர்.

மற்றும் முதி­யோர்கள் தாங்க முடி­யாத உடல் வலி, தீராத கொடூ­ர­மான நோய்கள் கார­ண­மாகத் தற்­கொலை செய்து கொள்­கின்­றனர்.

எனவே, தற்­கொலை எண்­ணங்­களை களைய வேண்­டி­யது காலத்தின் தேவை­யாக உள்­ளது. அவற்றைக் களைய வேண்­டு­மாயின் ஆன்­மீக சிந்­த­னை­களை வளர்ப்­ப­துடன் குடும்­ப­வியல் ஆலோ­சனை நிலை­யங்கள், உள­வ­ளத்­துணை ஆலோ­சனை நிலை­யங்கள், இளைஞர் வலு­வூட்டல் திட்டங்கள், தொழில் வழிகாட்டல் நிலையங்கள், பொருளாதார காப்புகளும் உத்தரவாதங் களும் போன்றவற்றை அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் கிராமம் கிராம மாக ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவற்றை நடைமுறைப்படுத்த சிவில் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள், நகர பிரதேச செயலகங்கள், பெண்கள் சிறுவர் அமைப்புக்கள் மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

ஆர்.எம். அர்ஸாத்,

ஏறாவூர்.

Share.
Leave A Reply

Exit mobile version