சூர்யாவின் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான அஞ்சான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 11.5 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாம்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் அஞ்சான். இதில் மும்பை தாதாவாக வருகிறார் சூர்யா.
உலகம் முழுவதும் 1400 அரங்குகளில் இந்தப் படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் 450க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது.
முதல் நாளில் தமிழகம், அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, போன்ற நாடுகளில் இரசிகர்கள் படம் பார்க்க அலைமோதினர்.
முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ 11.5 கோடி இந்தப் படத்துக்கு ஆரம்ப வசூலாகக் கிடைத்துள்ளதுடன் சூர்யாவின் படங்களின் வசூலில் இது புதிய சாதனையாகும்.