சிங்­கப்­பூரில் அறுவை சிகிச்சை செய்து கொண்­டதை மறைக்கத் தான் இந்த நாட­கமாம். சிங்கப்­பூரில் கப்பூர் மவுன்ட் எலி­சபெத் மருத்­து­வ­ம­னையில் நடந்­தது பைபாஸ் என்­கி­றது நெருங்­கிய வட்­டாரம்!

சிகிச்­சைக்­காகச் சிங்­கப்பூருக்குச் சென்­றி­ருந்த தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், திரும்பி வந்­தி­ருக்­கிறார். ஓர­ளவு உடல் நலம் தேறி அவர் வந்­ததில்! கட்சியின் சிப்­பாய்­க­ளுக்கு சந்­தோஷம் தான்! ஆனால் அவர் சென்னை விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கிய நிகழ்­வையே ஒரு குட்டி நாட­க­மாக நடத்திக் காட்­டி­யதைத் தான் கட்­சி­யி­னரே இரசிக்­க­வில்லை.

முதலில் ஜூலை 26ஆம் திகதி இரவே அவரும் அவ­ரது மனை­வியும் வந்து சேரும் வித­மாக விமா­னத்தில் டிக்கெட் புக் செய்­தி­ருந்­தனர். அவரை எதிர்­பார்த்து மீடி­யாக்­கா­ரர்­கள் சிலரும் அங்கு நின்­றி­ருந்­தனர்.

ஏனோ­த­னது உடல் நல­மின்மை வெளியே தெரி­யக்­கூ­டாது என நினைத்த அந்தத் தலைவர், கடைசி நிமி­டத்தில் அந்த பய­ணத்தை ரத்து செய்தார்.

பின்னர் 27ஆம் திகதி காலையில் அவர் வரு­வ­தாகச் சொல்­லப்­ப­டவும் மீடி­யாக்­கா­ரர்கள் மீண்டும் அங்கு கூடி­ நின்றனர். ஆனால் காலை 10 மணி­க்கு அவ­ரது மனைவி மட்­டுமே தனி­யாக வெளியே வந்தார். சற்றும் தாம­திக்­காமல் ஒரு காரில் அவர் ஏறி கிளம்­பவும் தலைவர் வர வில்லை போலும் என நினைத்து மீடியாக் கூட்டம் கலைந்­தது.

அந்த விமா­னத்தில் வந்த பய­ணிகள் அனை­வரும் இறங்கி வெளி­யே­றிய பிறகு தான் வந்தார் அந்தத் தலைவர்.

அதுவும் எப்­படி?

முகத்தை முழு­வதும் துணியால் மூடி­ய­படி அவரை ஒரு சக்­கர நாற்­கா­லியில் வைத்து விமான நிலை­யப்­ப­ணி­யா­ளர்கள் தள்­ளிக்­கொண்டு வந்­தனர். மீடி­யாக்­களின் கண்ணில் படாமல் அவரை இன்னொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்­தனர்.

கொஞ்ச தூரம் சென்­றதும் முன்­ன­தாக இன்­னொரு காரில் போயி­ருந்த அவ­ரது மனைவி அதி­லி­ருந்து இறங்கி வேறொரு காரில் ஏறிக்­கொண்­டாராம்.

சிங்­கப்­பூரில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதை மறைக்கத் தான் இவ்வளவு மெனக்கெடுகிறாராம். மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் நடந்தது பைபாஸ் என்கிறது நெருங்கிய வட்டாரம்…..!

கூலிக்கு ஆட்களைச் சேர்த்து கூட்டம் நடத்திய காங்கிரஸ்
17-08-2014
szthamparamகடுமையான தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் பேரியக்கத்தை மீட்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது

தேர்தல் தோல்­விக்குப் பின்னர் முன்னாள் மத்­திய நிதி அமைச்சர் சிதம்­பரம் மாவட்ட வாரி­யாக சுற்றுப் பய­ணத்தை ஆடி அமா­வா­சை­யன்று ஆரம்­பித்தார். மாவட்டத் தலைவர் சுப்­பி­ர­மணி அவ­ரு­டைய ஆத­ர­வாளர் என்­பதால் மாவட்ட செய­ல்வீரர் கூட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

கூட்­டத்­துக்கு டெம்­போக்­களில் ஆட்­களைக் கொண்டு வந்து இறக்­கி­னார்கள். அதிகம் பெண்கள் தான். அதுவும் 70 வய­துக்கு மேல் இருந்த பெண்கள் ஏராளம்.

கையில் சாப்­பாட்டுப் பையுடன் இருந்த பெண்­ணிடம் பேச்சுக் கொடுத்­த­போது நான் ராயனூர் கட்டட வேலைக்கு செல்ல பஜா­ருக்கு வந்தேன். கட்சிக் கூட்­டத்­துக்கு வா, வேலைக்குப் போற கூலி 200 ரூபாவும் மத்­தி­யான சாப்­பாடும் தருவோம் என்று சொன்­னாங்க.

எத்­தனை மணிக்கு விடு­வீங்க-? என்று கேட்டேன். மத்­தி­யான சாப்­பாட்­டுக்­கெல்லாம் வீட்­டுக்குப் போயி­டலாம் என்று சொல்லி கூட்டியாந்­தாங்க என்றார்.

கண் ஆப­ரேஷன் செய்து ஓய்வில் இருந்த காக்­கா­வாடி கிரா­மத்தைச் சேர்ந்த மாராயி பாட்­டி­யையும் ஆடு மேய்த்­துக்­கொண்­டி­ருந்த 85 வயது பால்­வார்­பட்டி செல்­லாத்­தா­ளையும் 200 ரூபாய் ஆசை­காட்டி தள்ளிக் கொண்டு வந்­ததை அவர்­களே ஒப்புக் கொண்­டனர்.

100 பேரைத் தவிர மற்­ற­வர்கள் அனை­வரும் அழைத்து வரப்­பட்­ட­வர்கள் என்று கட்­சிக்­காரர் ஒரு­வரும் அதை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தினார்.

கூட்­டத்­துக்கு முதலில் சிதம்­பரம் வந்தார். அடுத்த 15 நிமி­டத்தில் கார்த்தி சிதம்­பரம் வர, மேடையில் இருந்­த­வர்கள் அனை­வரும் எழுந்து நின்­றனர், சிதம்­பரம் தவிர.

மூவா­யிரம் பேர் நிரம்­பிய மண்­ட­பத்தைப் பார்த்­ததும் உணர்ச்சி வசப்­பட்ட ப. சிதம்­பரம் இந்தக் கூட்­டத்தைப் பார்க்கும் போது காங்­கி­ரஸை யாராலும் அழிக்க முடி­யாது என்­பது உறு­தி­யா­கி­றது.

கடு­மை­யான தோல்­வியைச் சந்­தித்த காங்­கிரஸ் பேரி­யக்­கத்தை மீட்க வேண்­டிய பொறுப்பு உங்­க­ளிடம் இருக்கிறது என்றபோது ஆர்வத்துடன் கைதட்டி ஆரவாரிப்பார்கள் என்று பார்த்தால் கூட்டமோ நாற்காலிகளில் சோர்ந்து கிடந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version