விடுலைப் புலிகளின் தலைவரின் ஆட்டம் முள்ளிவாய்க்காலில் முடிந்த பின்னா் தற்போது அவரைப் போல் ஆடுவதற்கு பலா் முண்டியடிக்கின்றனா். சிறிதரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சரவணபவன் போன்றோர் இந்தப்பதவியைக் பெறுவதற்கா தங்களது உயிரைத் தவிர எதையும் தாரை வார்க்கவும் மற்றவா்களைக் காட்டிக் கொடுக்குவும் தயாரான நிலையில் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.

எல்லாருடைய மாடும் சவாரியில ஓடுதென்று பேரம்பலத்தின்ட பேத்தை மாடும் சவாரி ஓட ஆசைப்பட்டது போல வடக்கு மாகாண விவசாய அமைச்சருக்கும் தேசியத்தலைவரக மாறுவதற்கான ஆசை வெளிப்பட்டு்ள்ளது.

அந்த ஆசையின் ஒரு வடிவம் இந்தப் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

திருவாளா் ஐங்கரநேசன் அவா்கள் விடுதலைப்புலிகளால் ஏனைய இயக்கங்கள் தடைசெய்யபட்ட காலத்தில் ரொலோவுடன சோ்ந்து நின்றவா் ஆவார். தடை செய்யப்பட்ட நேரம் இவா் விடுதலைப்புலி உறுப்பினா் ஒருவரை கைக் குண்டு எறிந்த கொலை செய்ய முற்பட்டு அந்தக் கைக் குண்டு வெடிக்காததால் அந்த உறுப்பினா் தப்பியதாகத் தெரியவருகின்றது.

இவரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொலை செய்ய முற்படுகையில் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஏனைய ரெலோ உறுப்பினா்கள் பதுங்கி இருந்த இடமும் இவரால் காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இவா் நடாத்திய யுனிவேசல் கல்வி நிலையத்தில் 1991ம் ஆண்டளவில் ஆண்டு இறுதி விழா நடாத்திய போது இவா் ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பைப் பெற்ற விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட புலிகளிக் குரல் ஊடகவியலாளா் ஒருவா் இவரது விழாவிற்குச் சென்று நிகழ்ச்சி பற்றிய தகவல்களைச் சேகரித்து அந் நேரத்தில் புலிகளின் குரலுக்குப் பொறுப்பாக இருந்த பரதன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.

புலிகளின் குரல் ஊடகவியலாளா் கொடுத்த செய்தியைப் பார்த்து சிரித்த பரதன் குறித்த ஐங்கரநேசன் அந்த நேரத்தில் என்னைக் கொல்லப் பார்த்த ஆள். எனக்குத் தான் கைக் குண்டு வீசியவா்.

அது வெடிக்காத நிலையால் நான் இன்று உயிர் பிழைத்துள்ளேன் என அந்த ஊடகவியலாளருக்கு தெரிவித்து ஐங்கரநேசனைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்ளுங்கள் எனவும் ஆலோசனை கூறியிருந்தார்.

இவ்வாறான ஐங்கரநேசன் தற்போது தமிழ்த்தேசியம் என்னும் பெயரில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று அமைச்சராகியுள்ளார். அதுவும் தன்னைத் தோ்தலில் நிறுத்திய சுரேஸ்பிரேமச்சந்திரனின் நெஞ்சில் ஏறி மிதித்து அவரது தம்பியை கவிழ்த்தே அமைச்சரானவா்.

இவ்வாறானவா் ஒரு புலிக்குட்டியைத் துாக்கி வைத்திருந்தவுடன் தேசித்தலைவராக மாறலாம் என எண்ணிச் செயற்படுவது அவரை நகைச்சுவையாளராகப் பார்க்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கும்.

தாண்டவன்
– See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=33281&cat=event&sel=current&subcat=11#sthash.VfAdcb9K.dpuf

Share.
Leave A Reply

Exit mobile version